Kavundampalayam (State Assembly Constituency)

Tamil Nadu Assembly Election 2016 Results

 

Candidate Party Symbol No. of Votes
Arukutty V C ADMK 1,10,870
Payya Gounder Alias Krishnan, R. DMK 1,02,845
Nandakumar BJP 22,444
V.Ramamoorthy CPI(M) 16,874

 

 

Kaundampalayam or Kavundampalayam is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu. It comprises the municipality of Goundampalayam and its surrounding areas in Coimbatore. It was formed in 2009 and is part of the Coimbatore parliamentary constituency. It was created by the bifurcation of the Thondamuthur constituency.

Kavundampalayam (also spelled as Goundampalayam) is an area located in Coimbatore, India. Kavundampalayam is along Mettupalayam road in Coimbatore, one of the arterial roads of the city. It is twinned with Algiers, Algeria.

Total Voters:

Male 2,03,959
Female: 2,02,351
Transgender 39
Total 4,06,349

 

AIADMKCandidate for Kavundampalayam Assembly Election 2016 – Mr. V.C. Arukutty

 

AIADMK Candidate for Kavundampalayam Assembly Election 2016 - Mr. V.C. Aarukutti

 

Father Name CHINNAYA GOUNDAR
Party AIADMK
Date of Birth 09th October 1956
Place of Birth Coimbatore
Marital Status Married; Two Children
Address Chennai: B6E, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002
Mofussil: No.119/23, Lenin Street, Vilankurichi (Post), Coimbatore-641 035
Telephone Chennai–Residence:   044-25381291
Mofussil–Residence: 0422-2666635
Mobile: +91 9842207679
E-mail mlakavundampalayam@tn.gov.in
Facebook https://www.facebook.com/vcarukutty.vcaruutty

துடியலூர் வட்டாரத்தில் வி.சி.ஆறுக்குட்டி வாக்கு சேகரிப்பு

மே 13,2016,

கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி துடியலூர் மற்றும் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியப் பகுதிகளில் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 1,2,3,4 வார்டுகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசியது:

கோவை மாநகராட்சிக்குள்பட்ட கிழக்கு மண்டல அளவில் ரூ. 3.45 கோடி செலவில் சாலைப் பணிகள், ரூ. 19.09 கோடி செலவில் புதிய கட்டடங்கள், மழைநீர் சாக்கடை கால்வாய் அமைத்தல், தார் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுள்ளன. இதுதவிர ரூ. 2.54 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 1.35 கோடி செலவிலும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 20.80 லட்சம் மதிப்பீட்டிலும் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் மேலும் தொடர அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார்.

பிரச்சாரத்தின்போது, விளாங்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி வி.சி.ஆறுக்குட்டி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மண்டலத் தலைவர்கள் ஜெயராமன், நடராஜன், மாமன்ற உறுப்பினர் வனிதாமணி, கட்சி நிர்வாகிகள் சுரேஷ், ஊராட்சித் தலைவர்கள் கவிசரவணக்குமார், பன்னிமடை செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 12,2016,

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி சின்னத்தடாகம் வட்டாரத்தில் வாக்கு சேகரித்தார்.

ஆனைகட்டி மலைப்பகுதியில் உள்ள தூமனூர், சேம்புக்கரை பகுதிகளில் ஆதிவாசிகளிடம் வாக்குகள் சேகரித்தார். பின்னர் அவர் ஆலமரமேடு, கூடலூர், தெக்காலூர், வடக்காலூர், ஆனைகட்டி, பனப்பள்ளி ஆகிய கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். இதனையடுத்து சின்னத்தடாகம் வருகை தந்த அவருக்கு மாவட்ட கவுன்சிலர் டி.டி.கே.கதிர்வேல், ஊராட்சி செயலாளர் தர்மராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் வி.சி.ஆறுக்குட்டி பேசியது:

கட்சி பேதமின்றி சின்னத்தடாகம் பகுதியில் அனைவருக்கும் விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் சாலைப்பணி, தடுப்பணைகள் கட்டுதல், கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்றார்.

ஒன்றியச் செயலாளர் கோவனூர் கே.துரைசாமி, ஒன்றிய குழுத் தலைவர் வீரபாண்டி விஜயன், சிவசாமி,ஊராட்சித் தலைவர்கள் ராமகிருஷ்ணன், பன்னிமடை கவிசரவணக்குமார், செல்வராஜ், கணுவாய் தேவராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பெ.நா.பாளையத்தில் ரூ.400 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்: அதிமுக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி

மே 10,2016,

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் ரூ.400 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்தொகுதியின் அதிமுக வேட்பாளரும்,எம்எல்ஏவுமான வி.சி.ஆறுக்குட்டி தெரிவித்தார்.

ஆனைகட்டி ஆதிவாசி கிராமங்கள், சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மருதமலை, காளப்பநாயக்கன்பாளையம், கஸ்தூரிநாயக்கன்பாளையம், சின்னத்தாடகம் ஊராட்சிப் பகுதிகளில் ஆறுக்குட்டி திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

இத்தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்றதிலிருந்து இத்தொகுதி முழுவதும் சுமார் ரூ.700 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். குறிப்பாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் ரூ.400 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன என்றார். உடன், சோமையம்பாளையம் ஊராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் டி.டி.கே.கதிர்வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கவுண்டம்பாளையம் தொகுதி: அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் பிரசாரம்

மே 09,2016,

கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டியை ஆதரித்து நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர், அப்புலுபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நடிகர் வையாபுரி பிரசாரம் மேற்கொண்டார்.

  அப்போது அவர் பேசியதாவது:

 ஏழை, எளிய மக்கள் சமைக்க விலையில்லா அரிசி, குடியிருக்கப் பசுமை வீடுகள், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, குழந்தைகள் படிக்க ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்பு வரை பல்வேறு சலுகைகள். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு திருமண உதவி தொகை என பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார். விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கப்பட்டதன் மூலமாக அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்துள்ளது.

 தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில், விலையில்லா செல்லிடப்பேசி, பெண்களுக்கு சுய வேலைவாய்ப்புப் பயிற்சி, கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத திட்டங்களையும் செயல்படுத்துவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

எனவே, திட்டங்களின் பயன்களைப் பெற அதிமுகவுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

 பிரசாரத்தின்போது நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் எம்.ஆனந்தன், துணைத் தலைவர் சம்பத்குமார், பி,ஏ.வேலுசாமி, லட்சுமணசாமி, சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 சேரன் மாநகரில் கிறிஸ்துவ தேவாலயங்களில் அதிமுக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டிக்கு ஆதரவு திரட்டும் வகையில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனர்.

பாலமலை ஆதிவாசி கிராமங்களில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 07,2016,

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் உள்ள ஆசிவாசி கிராமங்களில் கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாலமலை அடிவாரத்தில் உள்ள கோவனூர் கிராமத்தில் காலை 7 மணியளவில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய அதிமுக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி, பெரும்பதி, பெருக்கம்பதி, பசுமணிபுதூர், பசுமணி, குஞ்சூர்பதி, மாங்குழி ஆகிய ஆதிவாசி கிராமங்களுக்குச் சென்று, அதிமுகவின் சாதனை விளக்கத் துண்டுப்பிரசுரங்களை ஆதிவாசிகளுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார்.

 அப்போது அவர் பேசியதாவது:

பழங்குடியினர் நலத் திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு தரமான வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில்  ஓய்வூதியமாக ரூ.1,500 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த அனைவருக்கும் அதைப் பெற்றுத்தருவேன். பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து பாலமலைக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதேபோல், விரைவில் மாங்குழி,பசுமணிப்பூதூர்,பெரும்பதி உள்ளிட்ட கிராமங்களுக்கு தார் சாலை அமைத்து,பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றார்.

வாக்கு சேகரிப்பின்போது ஒன்றிய அதிமுக செயலாளர் கோவனூர் கே.துரைசாமி, ஒன்றியக் குழுத் தலைவர் வீரபாண்டி விஜயன், மாநகராட்சி கவுன்சிலர் மாரிசெல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- Arukutty V C AIADMK 1,10,870
Fourteenth 2011-2016 Arukutty V C AIADMK 137058

 

History of Coimbatore District

Maruthamalai Rajagopuram Coimbatore

Coimbatore, also known as Kovai, is a major city in the Indian state of Tamil Nadu. It is the second largest city and urban agglomeration in the state after Chennai and the sixteenth largest urban agglomeration in India. It is administered by the Coimbatore Municipal Corporation and is the administrative capital of Coimbatore district.

It is one of the fastest growing tier-II cities in India and a major textile, industrial, commercial, educational, information technology, healthcare and manufacturing hub of Tamil Nadu. It is often referred to as the “Manchester of South India” due to its cotton production and textile industries. Coimbatore is also referred to as “Pump City” and it supplies two thirds of India’s requirements of motors and pumps. The city is one of the largest exporters of jewellery, wet grinders, poultry and auto components with “Coimbatore Wet Grinder” and “Kovai Cora Cotton” recognized as Geographical Indications by the Government of India. The city is located on the banks of Noyyal river surrounded by the Western Ghats.

Originally Coimbatore district formed part of the Kongu country, the history of which dates back to the Sangam age. It is found that in early days the area was inhabited by tribes, the most predominant among them being the Kosars who are reported to have had their headquarters at Kosampathur which probably later became the present Coimbatore. However, tribal predominance did not last long as they were over-run by the Rashtra Kutas. From Rashtrakutas the region fell into the hands of the Cholas who were in prominence at the time of Raja Raja Chola.

 

Coimbatore District Map

Coimbatore Area:

Area Sq. Km: 4,732

Chennai Population:

Male: 1,729,297
Female: 1,728,748
Total: 3,458,045

Literacy Rates

Male: 89.06%
Female: 78.92%
Total: 83.98%