Pappireddipatti (State Assembly Constituency)

Pappireddippatti is a state assembly constituency in Tamil Nadu, India newly formed after constituency delimitation. It is included in the Dharmapuri parliamentary constituency.

Total Voters:

Male 1,23,283
Female: 1,19,854
Transgender 3
Total 2,43,140

AIADMKCandidate for Pappireddipatti Assembly Election 2016 – Mr. Palaniappan

 

பொம்மிடியில்அமைச்சர் பி.பழனியப்பன் வாக்குச் சேகரிப்பு

மே 04,2016,

பொம்மிடி வட்டாரப் பகுதிகளில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான பி.பழனியப்பன் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொம்மிடி நகர், பொ.மல்லாபுரம், மணிபுரம், குக்கல்மலை, காமராஜ் நகர், பசுவாபுரம், திப்பிரெட்டிஹள்ளி, பில்பருத்தி, கோட்டமேடு, நடூர், பி.துறிஞ்சிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், கதிரிபுரம், பையர்நத்தம், தேவராஜபாளையம், போதக்காடு, மாரியம்மன் கோயிலூர் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைச்சர் பி.பழனியப்பன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அதிமுக அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

வாக்குச் சேகரிப்பின் போது கிராமப் பகுதிகளில் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில் ஒன்றியச் செயலர்கள் வி.சி.கௌதமன், ஜி.எஸ்.குப்புசாமி, ஒன்றியக்குழுத் தலைவர் பி.கே.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் பி.பழனியப்பன்

மே 02,2016,

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான பி.பழனியப்பன் தெரிவித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தாளநத்தம், வேப்பிலைப்பட்டி, டி.அய்யம்பட்டி, புட்டிரெட்டிப்பட்டி, குருபரஹள்ளி, கேத்துரெட்டிப்பட்டி, புளியம்பட்டி, கடத்தூர், புதுரெட்டியூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் அமைச்சர் பி.பழனியப்பன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின் போது அவர் பேசியது:

வே.முத்தம்பட்டியில் மின் வாரியத்தில் இருந்து 33.00 கே.வி. திறன் கொண்ட புதிய மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. வே.முத்தம்பட்டி, கொண்டம்பட்டி, வத்தல்மலை, பெரியூர் உள்ளிட்ட இடங்களில் புதிய கால்நடை மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. அரியகுளம்-செம்மனஹள்ளி, வே.முத்தம்மபட்டி-வேப்பம்பாடி ஆற்றின் குறுக்கே உயர் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

நத்தம்காலனி, செட்டிக்கரை, வடக்கத்தியான் கொட்டாய், கந்தகவுண்டன் கொட்டாய் ஆகிய இடங்களில் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

பழைய தருமபுரி, முத்துகவுண்டன் கொட்டாய் ஆகிய இடங்களில் புதிய பல்நோக்கு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, சேலம் பெரியார் பல்கலை. உறுப்புக் கல்லூரி, கடத்தூரில் பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்பெறும் வகையில் அதிமுக ஆட்சி உள்ளது. எனவே, தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வாக்காளர்கள் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் பி.பழனியப்பன் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 27,2016,

தென்கரைக்கோட்டை, கோபிசெட்டிப்பாளையம் கிராம ஊராட்சிகளில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான பி.பழனியப்பன் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின்போது அமைச்சர் பி.பழனியப்பன் பேசியது: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உள்பட்ட தருமபுரி – பாப்பிரெட்டிப்பட்டி, ராமியம்பட்டி – கோபிசெட்டிப்பாளையம், ஆத்தூர் – பசுவாபுரம், தாதனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உயர்மட்டப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த உயர்மட்டப் பாலங்களால் போக்குவரத்து வசதிகள் மேம்பாடு அடைந்துள்ளன.

இதேபோல், கிராமப் பகுதிகளில் நியாய விலைக் கடைகள், பள்ளிச் சுற்றுச் சுவர்கள், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, தெருச்சாலைகள், கழிவுநீர்க் கால்வாய் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பு

மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்துள்ளன. எனவே அதிமுகவின் பொற்கால ஆட்சி தொடர அனைவரும் இரட்டை இலையை ஆதரிக்க வேண்டும் என்றார்.

முன்னாதக, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காந்திநகர், வடகரை, அஞ்சுகம் நகர், பாப்பிசெட்டிப்பட்டி, பெத்தூர், கோபிசெட்டிப்பாளையம், ராமியனஹள்ளி, கர்த்தானூர், ஆத்தூர், குருபரஹள்ளி, தின்னஹள்ளி, வகுத்துப்பட்டி, புங்கனை புதூர், சிந்தல்பாடி, சி.அய்யம்பட்டி, பசுவாபுரம், கந்தகவுண்டனூர், துறிஞ்சிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர் பி.பழனியப்பன் வாக்குச் சேகரித்தார். கிராமப் பகுதியில் பெண்கள் ஆரத்தி எடுத்து அமைச்சரை வரவேற்றனர்.

இதில், ஒன்றியச் செயலர் ஜி.எஸ்.குப்புசாமி, கட்சியின் மூத்த நிர்வாகி டி.கே.ராஜேந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர் பி.கே.முருகன், மாவட்ட பொருளர் நல்லதம்பி, ஊராட்சித் தலைவர் சாந்தா சின்னராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்ஏப்ரல் 19, 2016,

பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை, தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கடத்தூரில் நடந்த அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் கடத்தூர் எம்.சி.எஸ். நாயுடு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் நீலாபுரம் செல்வம் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயலாளர் சசிக்குமார் வரவேற்று பேசினார். தொகுதி இணைசெயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, கவுதமன், பெரியசாமி, பாஸ்கர், பார்த்திபன், முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான பி.பழனியப்பன், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள், வாக்கு சேகரிப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தீவிர களப்பணியாற்றி அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

வளர்ச்சி பணிகள்

கடந்த 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், பல்வேறு வளர்ச்சிப்பணிகள், தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் கொண்டு வந்த அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக மாணவரணியினர், இளைஞர் பாசறை, இளைஞர் அணியினர் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்ட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குப்புசாமி, சிங்காரம், ஒன்றியக்குழு தலைவர்கள் பூக்கடை முனுசாமி, முருகன், துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், சாரதிசெந்தில், பேரூராட்சி செயலாளர்கள் சரவணன், டோமினிக், பேரூராட்சி தலைவர் கஸ்தூரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

 

300 ஜோடிகளுக்கு இலவச திருமணம், 10,000 பேருக்கு வாழ்க்கைத் திறன் மேம்படுத்தும் திட்டங்கள் அமல்படுத்தபடும் : அதிமுக வேட்பாளர் பி. பழனியப்பன்

ஏப்ரல் 19, 2016,

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளராக அமைச்சர் பி. பழனியப்பன் திங்கள்கிழமை காலை அறிவிக்கப்பட்டதை அடுத்து, பகலிலேயே பிரசாரத்தை கடத்தூரில் அவர் தொடங்கினார்.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் கடந்த முறை வெற்றிபெற்ற பி. பழனியப்பன், உயர்கல்வித் துறை அமைச்சரானார். இந்தத் தேர்தலில் அதிமுக தலைமை அறிவித்த வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. ஒன்றியச் செயலர் ஜி.எஸ். குப்புசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வெளியான அறிவிப்பில் குப்புசாமிக்குப் பதிலாக அமைச்சர் பி. பழனியப்பன் போட்டியிடுவார் என ஜெயலலிதா அறிவித்தார்.

திங்கள்கிழமை காலை கடத்தூரில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதில் தலைமை நிலையச் செயலர் என்ற முறையில் பழனியப்பன் சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

காலையிலேயே பட்டியலில் திருத்தம் வந்ததைத் தொடர்ந்து கடத்தூரில் நடைபெற்ற கூட்டத்திலேயே பழனியப்பன் வேட்பாளரானார். மாவட்ட அதிமுக செயலரும், பாலக்கோடு தொகுதி வேட்பாளருமான கே.பி. அன்பழகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரை வாழ்த்தினர்.

கூட்டத்துக்கு தொகுதிச் செயலர் எம். செல்வம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ஜி.எஸ். குப்புசாமி வரவேற்றார். கடத்தூர் நகரச் செயலர் பி. சசிக்குமார் நன்றி கூறினார்.

கூட்டம் முடிந்தவுடன் மண்டப வாயிலில் இருந்தே திறந்த ஜீப்பில் வாக்குச் சேகரிப்பைத் தொடங்கப் புறப்பட்டார் அமைச்சர் பழனியப்பன். ஊர்வலமாக வாக்குச் சேகரித்துக் கொண்டே சென்ற அவர், கடத்தூர் கடை வீதியில் பேசினார்.

அப்போது, தொகுதியில் விடுபட்டிருந்த ஒருசில மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுபடியும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மட்டும் 300 ஜோடிகளுக்கு இலவச திருமணமும், 10,000 பேருக்கு வாழ்க்கைத் திறன் மேம்படுத்தும் திட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பேசினார். தொடர்ந்து அங்கிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் அமைச்சர் பி. பழனியப்பன். அப்போது, மாவட்ட அதிமுக செயலர் கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Legislative Assembly Eection Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Palaniappan P AIADMK 76582

History of Dharmapuri District

Niagara Falls

The earliest known chieftain who ruled Tagadur (present Dharmapuri) during the Sangam era, is Adigaman Naduman Anji, whose patronage sustained the famous poetess Avvaiyar. The next we hear in the 8th century when the northern parts of Salem District were probably under the Pallavas regime. Subsequently, we hear of the Ganga Pallavas having sway over the Western parts of the Salem District. The Western Gangas are also mentioned as having ruled Baramahal during the end of the 8th century.

In the beginning of the 9th Century, the Rashtrakutas gained power and influenced the history of the district for the next two centuries. During the period, the Cholas also rose to power in the south and Aditya-I conquered the Kongunadu in 894 A.D. During 949-950 A.D., the Cholas suffered a defeat from the Rastrakuttas whose decline started later after the death of their king Krishna-III. Subsequently, the entire area in Salem District came under the rule of the Cholas. The Gangavadi was then annexed to the Chola territory and placed in charge of an Adigaman Tagadur. The 12th century witnessed the decline of the Chola empire when the Hoysalas rose to power and routed the Cholas from Gangavadi. They are said to have captured Kolar, sacked Kotayur and over ran the western parts of Kongunadu. The Baramahal and Talaget areas apparently still remained with the Cholas. But the Adigaman seems to have practically become free and owed only nominal allegiance to the Cholas. Soundrapandia-I assisted the Yadavas in driving out the Hoysala king, Vira Someswara from the Chola territory.

The history of the 13th Century revolve itself between the Hoysalas and the Pandyas. This portion may be added after when they were attacked from the North by the Yadavas, the Hoysalas retreated towards the South in Kongunadu. It is known that Jatavarman Soundrapandian-I assisted the Yadavas in driving out the Hoysalas king, Vira Someswara, from the Chola territory. But it is doubtful whether he made himself master of the Talaghat area as there are records to show that Vira Someswara’s son Vira Ramanatha later ruled the whole of Salem District and the Pandiyas were then eclipsed by the Mohammadan emissaries of the Delhi Sultanate.

The rise of Vijayanagar kingdom was seen in the 14th century. In 1365-66 A.D., Bukka-I turned his attention towards the south to overthrow the Mohammedan Sultanate of Madurai. One of these campaigns must have brought Salem District under the Vijayanagar kings. They ruled these parts till 1565 A.D when the glory of the Vijayanagar king was laid in dust by the combined armies of the Deccan Sultans on the field at Talikota Hosur Denkanikota. While Jagaderea Raya of Chennapatna ruled the Baramahal along with Mysore. Meanwhile the ascendancy of the Madurai Nayakas reached its zenith during the time of Tirumala Nayak who came to power in 1623 A.D. and this tract was placed in charge of Poligars owing allegiance to him. Ramachandra Nayaka, one of his poligars was incharge of Talaimalai a hill overlooking the Cauvery in the south Namakkal taluk. The Namakkal Fort is said to have been built by them. The Gathi Mudaliars were incharge of the most dangerously exposed province of the Nayak Kingdom with Kaveripuram on the right bank of the Cauvery as their strategic capital commencing one of the principal passes to the Mysore plateau. The centre of then power seems, however to have been Taramangalam where they built a grand edifice of a temple. It is said that their domination extended as far as Talaivasal to the east, Dharapuram in Coimbatore District in the south. The forts of greatest strategic importance held by the Gathi Mudaliars were Omalur and Attur.

Several places in Coimbatore were taken by Kantirave Narasa Raja of Srirangapatinam from Gathi Mudaliars in 1611 A.D. After 11 years, he seized Baramahal including Viralahadradurg, Pennagaram, Dharmapuri and Denkanikotta in 1654 A.D., he took over Hosur from Chandra Sankar Dodda Devaraju the king of Mysore wrested Omalur from the Gathi Mudaliars and thus erased them out of political scene. The aggression of Marattas, however checked the power of the Mysore Kings. For a time Baramahal and Talaghat passed into the hands of Marattas. In 1688-89 A.D., Chikka Deva Raya king of Mysore felt strong enough once again to invade Baramahal and wrested Dharmapuri, Manukonda, Omalur Paramathi, Kaveripatinam and Attur were also retrieved by Chika Deva Raya and the whole district of Salem came under his control before his death in 1704 A.D. Meanwhile Abdul Nabikhan of Nawab of Cuddapah extended his possession towards South and by 1714 A.D., he made himself master of the Baramahal.

By about 1750 A.D., Hyder Ali was in power in Mysore Baramahal came under his sway in 1760 A.D. By 1767 A.D., the British Government at Madras planned an attack on Hyder Ali and seized Kaveripattinam without serious opposition. Krishnagiri was then besieged. Meanwhile, reinforcement was brought by Hyder Ali and they drove away the British. Thus, Kaveripattinam was recaptured. Some months later the British made another invasion on the Baramahal. Further, South Dharmapuri, Salem, Attur, Sendamangalam and Namakkal were surrendered to the British without serious difficulties. The victory, however, was shortlived because Hyder Ali soon recaptured Dharmapuri, Denkanikota, Omalur, Salem and Namakkal. During the period of second Mysore war, Salem District was in the hands of Hyder Ali.

Tippu Sultan succeeded Hyder Ali and proved to be a formidable power. The British made an alliance with the Marattas and the Nizam and started the third Mysore war in 1790 A.D., in order to curb the power of Tippu Sultan. A wing of the British forces stationed itself fully reinforced at Kaveripattinam. Even though Tippu Sultan rushed to this spot with his full force, he could not dislodge the British. A number of alternations took place between the commanding forces in the Baramahal area. In 1791, Hosur, Anjetti, Nilgiri and Ratnagiri came under the British Royakotta and many other small forts fell without much resistance. In 1791 Tippu sent a force from the South along the Tippu pass. In the battle at Pennagaram they surrendered to the British. In 1792 A.D., a peace treaty was signed between Tippu and English. According to this, a half of the dominion of Tippu was taken away. The whole of Salem District except the Balaghat and a portion of Hosur came into the hands of the British. The first British Collector had is headquarters at Krishnagiri on strategic consideration.

 

Dharmapuri District Map

Dharmapuri Area:

Area Sq. Km: 4,497

Chennai Population:

Male: 774,303
Female: 732,540
Total: 1,506,843

Literacy Rates

Male: 76.85%
Female: 59.80%
Total: 68.54%