Erode (West) (State Assembly Constituency)

Erode West is a State Assembly Constituency of Erode City in Erode District in the state of Tamil Nadu, India. It is included in Erode Parliamentary Constituency. This is newly formed by separating, in the year of 2008, the integrated Erode State Assembly Constituency. It covers the western part of Erode City Corporation to the Perundurai constituency limit on the west and Modakurichi Constituency limit on the south; a part of the city is also covered by these two constituencies. Also Bhavani constituency covers some part of the city in the North. Erode West will be one of 17 assembly constituencies to have VVPAT facility with EVMs in Tamil Nadu Legislative Assembly election, 2016.

Total Voters:

Male 1,26,659
Female: 1,28,300
Transgender 44
Total 2,55,003

AIADMKCandidate for Vedasandur Assembly Election 2016 – Mr. K V Ramalingam

 

ஆவின் பால் லிட்டர் ரூ. 25-க்கு வழங்கப்படும்: ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 11, 2016,

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ. 25-க்கு வழங்கப்படும் என்று ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.இராமலிங்கம் பிரசாரம் செய்தார்.

 ஈரோட்டை அடுத்த சித்தோடு, தயிர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

 ஈரோடு மேற்குத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எலவமலை, மேட்டுநாவிதன்பாளையம், பேரோடு, கதிரம்பட்டி, பிச்சாண்டம்பாளையம், கூரப்பாளையம் ஆகிய ஊர்களில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து ரூ. 10.5 கோடி மதிப்பில் காவிரி நீர் வழங்கப்பட்டுள்ளது.

 பாலக்காட்டூர், பெருமாள்மலை, கனிராவுத்தர்குளம், சூளை, சாஸ்திரிநகர் ஆகிய பகுதிகளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சித்தோடு பேரூராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ஓடைகளின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ. 25-க்கு வழங்கப்படும். தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். எனவே, அதிமுக ஆட்சி தொடர பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றார்.

 பிரசாரத்தில், ஈரோடு துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, சித்தோடு பேரூராட்சித் தலைவர் ஆர்.வரதராஜன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டலச் செயலாளர் ஜீவா ராமசாமி, பேரோடு ஊராட்சித் தலைவர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் கடன் ரத்து: கே.வி.இராமலிங்கம்

மே 07, 2016,

அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் கடன் ரத்து செய்யப்படும் என்று ஈரோடு மேற்குத் தொகுதி வேட்பாளர் கே.வி.இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

 ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட சூரம்பட்டி பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில்  வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அனைத்துத்தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர்.  தற்போது வெளியிடப்பட்டுள்ள அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைத்துத்தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன், நீண்டகால கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் ரூ. 40,000 கோடி அளவுக்குப் பயிர்க்கடன் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படும். உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

 கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 20 ஆயிரத்து 787 கோடிக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர்க்கடன் ரூ. 9,164 கோடி மட்டும் தான். எனவே, விவசாயிகள் வாழ்வு மலர தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.

 பிரசாரத்தில், சூரம்பட்டி நகரச் செயலாளர் ஏ.ஆர்.ஜெகதீசன், அண்ணா போக்குவரத்துக் கழக மண்டலச் செயலாளர் ஜீவா ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரியசேமூரில் அதிமுக வேட்பாளர் இராமலிங்கம் வாக்குச் சேகரிப்பு

மே 02, 2016,

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பெரியசேமூர் பகுதியில் ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.இராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

 பெரியசேமூர் பகுதிக்கு உள்பட்ட மல்லிகைநகர், சூளை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

 கடந்த 5 ஆண்டுகளில் சூரம்பட்டி, பெரியசேமூர், சூரியம்பாளையம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சூரியம்பாளையம் பகுதியில் ரூ. 2 கோடியில் மாநகராட்சி மண்டல அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

 சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாடு நிதியில் இருந்து நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையம், ஆழ்துளை கிணறு மூலமாக தடையற்ற மின்சாரம், மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மின் சேமிப்பு விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

 முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி 25-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர்த் தொட்டி மூலமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் பெரியசேமூர், திண்டல், சோலார் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தொடர்ந்து அதிமுகவுக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.

 பிரசாரத்தில், ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மாமன்ற உறுப்பினர் எம்.ஜி.பழனிச்சாமி, பெரியசேமூர் நகர ஜெ. பேரவைச் செயலாளர் நந்தகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

எலவமலை பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்

எலவமலை பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்ஏப்ரல் 20, 2016,

அ.தி.மு.க. சார்பில் ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதி வேட்பாளராக கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. அறிவிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து பவானி அருகே எலவமலையில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஈரோடு செல்வக்குமார சின்னையன் எம்.பி., மாநகர் மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, சித்தோடு பேரூராட்சி தலைவர் வரதராஜன், ஈரோடு ஒன்றியக்குழு தலைவர் கண்ணம்மாள் முத்துசாமி, எலவமலை கட்டிட சங்க தலைவர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

 

ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.வி.ராமலிங்கம் போட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்

ஏப்ரல் 19, 2016,

சித்தோடு வரதராஜனுக்கு பதிலாக ஈரோடு மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட உள்ள கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. நேற்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்

மேற்கு தொகுதி வேட்பாளர்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளராக சித்தோடு வரதராஜன் அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் நேற்று திடீரென்று வேட்பாளர் வரதராஜனுக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார்

வாழ்க்கை குறிப்பு

கே.வி.ராமலிங்கத்தின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கள்ளிவலசு பகுதியாகும். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் குமாரத்தாள் என்கிற அம்மினி. மீனா பிரீத்தி, ஆர்த்தி பிரியதர்ஷினி என்ற 2 மகள்கள். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் சுதன் பிரீத்திவி உள்ளார். கொங்கு வேளாள கவுண்டர் சாதியை சேர்ந்த கே.வி.ராமலிங்கம் பி.ஏ. பட்டப்படிப்பு படித்து உள்ளார். இவருக்கு வயது 59 ஆகும் தொடக்க காலத்தில் இருந்தே கட்சியின் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வந்தார். தாராபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 2003 முதல் 2008-ம் ஆண்டு வரை ஈரோடு மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக இருந்தார். 2008-ம் ஆண்டு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2010-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் டெல்லி மேல்சபைக்கு எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பின்னர் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரானார்

சிலைக்கு மாலை

அ.தி.மு.க.வின் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. அறிமுக கூட்டம் நேற்று ஈரோடு பெருந்துறை ரோடு பழையபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில் நடந்தது. அங்கிருந்து கட்சியினர், முக்கிய நிர்வாகிகளுடன் வந்து அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை தொகுதி வேட்பாளரான அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், ஈரோடு எஸ்.செல்வகுமார சின்னையன் எம்.பி., மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளரும், மாநகர் மாவட்ட செயலாளருமான வி.பி.சிவசுப்பிரமணி, ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, , ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, ஆர்.என்.கிட்டுசாமி எம்.எல்.ஏ., சித்தோடு வரதராஜன், முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, நகர ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர் ஆவின் ராஜேந்திரன், சிந்தாமணி தலைவர் ஜெகதீஸ், கவுன்சிலர்கள் காவிரி செல்வன், பிரபு, இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், காசிப்பாளையம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கேபிள்ரமேஷ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிசாமி, ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் அருண்குமார், ஜீவாரவி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Ramalingam K.V AIADMK 90789

History of Erode District

Bhavani Sangameshwarar Temple

Erode District was a part of Coimbatore has its history intervened with that of Coimbatore and because of its close linkage with the erstwhile Coimbatore district. It is very difficult to separately deal with the history of Erode region. Together with the area comprised in the Coimbatore district, it formed part of the ancient Kongu country known as “Kongu Nadu” history of which dates back to the Sangam era.

It is found that in the early days, this area was occupied by tribes, most prominent among them being the “Kosars” reportedly having their headquarters at ‘Kosamputhur’ which is believed to have in due course become Coimbatore. These tribes were overpowered by the Rashtrakutas from whom the region fell into the hands of the Cholas who ruled supreme during the time of Raja Chola.

On the decline of Cholas, the Kongunadu came to be occupied by the Chalukyas and later by the Pandyas and Hoysalas. Due to internal dissension in the Pandian Kingdom, the Muslim rulers from Delhi interfered and thus the area fell into the hands of Madurai Sultanate. This region was later wrested by Vijaya Nagar rulers after over throwing the Madurai Sultanate. For a few years, the area remained under Vijaya Nagar rule and later under the independent control of Madurai Nayakas.

The rule of Muthu Veerappa Nayak and later that of Tirumalai Nayak were marked by internal strife and intermittent wars which ruined the Kingdom. As a result of this, the Kongu region in which the present Erode District is situated, fell into the hands of the Mysore rulers from whom Hyder Ali took over the area.

Later, consequent of the fall of Tippu Sultlan of Mysore in 1799, the Kongu region came to be coded to the East India Company by the Maharaja of Mysore who was restored to power by the company after defeating Tippu Sulltan. From then, till 1947 when India attained independence, the area remained under British control who initiated systematic revenue administration in the area.

 

Erode District Map

Erode Area:

Area Sq. Km: 5,760

Erode Population:

Male: 1,129,868
Female: 1,121,876
Total: 2,251,744

Literacy Rates

Male: 80.42%
Female: 64.71%
Total: 72.58%