Kanyakumari (State Assembly Constituency)

Achievements of Ex-AIADMK MLA Mr. K.T. Patchaimal

New Buses for TNSTC

High Level Bridge Opening Ceremony

Dam Water Release for Irrigation

Distribution of Free Sarees and Dhoties

Providing Pulse Polio Drops

AMMA Medical Center Opening Ceremony

Disburses Funds & Mangalyam Gold for Poor Girls Wedding

Opening of Refining Seeds Center

Disburses Funds & Mangalyam Gold for Poor Girls Wedding

AMMA Medical Camp

Disburses Funds & Mangalyam Gold for Poor Girls Wedding

Dam Water Release for Irrigation

Free Mixie Grinder & Fan Distribution

Anganwadi Building Opening Ceremony

AMMA Scheme Camp

Workers Welfare & Weight Dimensions Legal Seminar

 

Kanyakumari is a Tamil Nadu assembly constituency located in Tiruchendur Lok Sabha Constituency in Kanyakumari district in Tamil Nadu. The constituency is located in the southern corner of mainland India, comprising the popular tourist destination Kanyakumari. In 2011 election, it had 237,410 total number of voters, consisting of 120,372 males and 117,038 females. Nadars, Vellalars, Dalits and Meenavars formed the majority of the electorate. Kanyakumari will be one of 17 assembly constituencies to have VVPAT facility with EVMs in Tamil Nadu Legislative Assembly election, 2016.

Total Voters:

Male 1,40,291
Female: 1,40,934
Transgender 37
Total 2,81,262

 

AIADMKCandidate for Kanyakumari Assembly Election 2016 – Mr. Thalavai Sundaram

 

Thalavai Sundaram

இரவிபுதூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 03,2016,

இரவிபுதூர், நல்லூர் பகுதிகளில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் என். தளவாய்சுந்தரம் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் என். தளவாய்சுந்தரம் இரவிபுதூர், வடக்கு தெரு, நடுத்தெரு, ஆர்.சி. தெரு, மேல தெரு, வண்ணாளர் காலனி, இசக்கியம்மன்கோயில் தெரு, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பின்னர் நல்லூர் ஊராட்சிக்குள்பட்ட கீழ தேரூர், நல்லூர், பள்ளவிளை, விஷ்ணுபுரம், தாணுமாலயான் நகர், மறுகால்தலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பில் மாவட்ட  துணைச் செயலர் கவிஞர் சதாசிவம், ஒன்றியச் செயலர் பா. தம்பித்தங்கம், நல்லூர் ஊராட்சித் தலைவர் சிதம்பரம், இரவிபுதூர் ஊராட்சிச் செயலர்  சுவாமிநாதன், நல்லூர் ஊராட்சிச் செயலர் லட்சுமணன், ராமபுரம் ஊராட்சித் தலைவர் பாஸ்கரன், தொகுதிச் செயலர் பி.டி. பிள்ளை, நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அக்கரை பகுதியில் தளவாய்சுந்தரம் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

அக்கரை பகுதியில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் என். தளவாய்சுந்தரம், வெள்ளிக்கிழமை  வாக்கு சேகரித்தார்.

அக்கரை செட்டித்தெரு, குலாலர்தெரு, வாணியர்தெரு, கடைத்தெரு, யோகீஸ்வரர் தெரு, கடைக்கிராமம், குத்துக்கல், வழுக்கம்பாறை, மணவிளை, கரையான்குழி, ஆகிய பகுதிகளில் இரட்டை இலைக்கு அவர் ஆதரவு திரட்டினார்.   வாக்கு சேகரிப்பின் போது அக்கரை திமுகவைச் சேர்ந்த கார்த்திக் தலைமையில் 100 பேர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் வேட்பாளர் முன்னிலயில் கட்சியில் இணைந்தனர். இதில், ஒன்றியச் செயலர் தம்பிதங்கம், சுசீந்திரம் பேரூர் செயலர் குருசாமி, மாவட்ட விவசாய அணி பொருளாளர் அ.கோ. ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் மனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சின்னம்மாளிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.  அவருக்கு மாற்று வேட்பாளராக கன்னியாகுமரி ஒன்றிய அதிமுக செயலர் தம்பித்தங்கம் மனு தாக்கல் செய்தார். அப்போது, மாவட்ட துணைச் செயலர் கவிஞர் சதாசிவம், இராஜாக்கமங்கலம் ஒன்றியச் செயலர் கிருஷ்ணதாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் சேவியர் மனோகரன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலர் பாலஜனாதிபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

மருங்கூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 27,2016,

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மருங்கூர் பேரூராட்சிப்  பகுதிகளில் அதிமுக வேட்பாளர் என். தளவாய்சுந்தரம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

இத்தொகுதிக்குள்பட்ட அகஸ்தீசுவரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் என். தளவாய்சுந்தரம் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மருங்கூர் பேரூராட்சிப் பகுதியில் அவர் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் கவிஞர் டி. சதாசிவம், டி. மனோகரன், எஸ். அழகேசன், இ. லட்சுமணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

 

தமிழகத்தில் அதிமுக அலை வீசுகிறது: நடிகர் சிங்கமுத்து அதிமுக வேட்பாளர் என். தளவாய் சுந்தரத்தை ஆதரித்து பேச்சு

ஏப்ரல் 27,2016,

தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது என திரைப்பட நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பேசினார்.

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் என். தளவாய் சுந்தரத்தை ஆதரித்து ஆரல்வாய்மொழி சந்திப்பு, ஈத்தாமொழி சந்திப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:

திமுக ஆட்சிக் காலத்தில் கடும் மின்வெட்டால் தமிழகம் இருட்டில் கிடந்தது. இப்போது அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கி, தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குகிறது.

ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்ற பிறகு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த, போராடி உச்சநீதிமன்றம் மூலம் ஆணை பெற்றார். எனவே 234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வராவது உறுதி. எனவே கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் என். தளவாய் சுந்தரத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

இதில், ராஜக்கமங்கலம் ஒன்றியச் செயலாளர் ஆர். கிருஷ்ணதாஸ், மாவட்ட ஊராட்சித்  தலைவர் எம்.எஸ். சாரதாமணி, உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா, ராஜாக்கமங்கலம் ஒன்றியக்  குழுத் தலைவர் சகாயஜெயராணி, தர்மபுரம் ஊராட்சிச் செயலர் என்.எம். செல்வகுமார், ஒன்றிய மகளிர் அணிச் செயலர் பூமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அதிமுக வேட்பாளர் என்.தளவாய்சுந்தரத்துக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன்

ஏப்ரல் 25,2016,

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் என்.தளவாய்சுந்தரத்துக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.

வடக்குத் தாமரைகுளம், மயிலாடி, அஞ்சுகிராமம் உள்ளிட்டப் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தில் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலர் எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலர் பா.தம்பித்தங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலர் இ.என்.சங்கர், மாவட்ட மாணவர் அணித் தலைவர் என்.பார்த்தசாரதி, சாமிதோப்பு மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மாதவலாயத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 24,2016,

மாதவலாயத்தில் இஸ்லாமியர்களிடம், கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் வாக்கு சேகரித்தார்.

மாதவலாயம் முஸ்லீம் ஜீம் ஆ பள்ளி வாசலில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.அப்போது இஸ்லாமியர்கள் தளவாய் சுந்தரத்திற்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தோவாளை ஒன்றியச் செயலர் கே.சி.யு.மணி, மாதவலாயம் ஊராட்சிச் செயலர எம்.டி.என்.ஷேக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலர் இ.என்.சங்கர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலர் அகமதுஷா, முகமது ஜனாப், ஷேக் மீரா, ஷேக் பரீது, முத்து மைதீன், ஷேக் முகமது, மைதீன் அபுபக்கர், அப்துல் ரசாக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

சுசீந்திரத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 23,2016,

சுசீந்திரம் பகுதியில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி சட்டப்பேரவைத்  தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் வெள்ளிக்கிழமை காலை சுசீந்திரம் அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் கோயில் முன்பு  பிரசாரத்தை தொடங்கினார். அங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் வர்த்தகர்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, அவர் கீழ ரதவீதி, மேல ரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, தெப்பகுளம் பகுதி, காக்கம்புதூர் கற்காடு, தாணுமாலைய நகர், பரப்பு விளை ஆகிய பகுதிகளில் வீடு,வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் கவிஞர் சதாசிவம், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் பா.தம்பித்தங்கம், மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலர் பால.ஜனாதிபதி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

இராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 22,2016,

ராஜாக்கமங்கலம் ஒன்றியப் பகுதியில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

புத்தளம் பேரூராட்சியில் தேர்தல் பிரசாரம் செய்த அவர், பணிக்கன்குடியிருப்பு சந்திப்பில் கூடியிருந்த பெண்களிடம் ஆதரவு திரட்டினார். பின்னர் அப்பகுதியில் வீடு, வீடாகச் சென்று அரசின் சாதனைகளை கூறி அவர் வாக்குகள் சேகரித்தார்.

சேதுபதியூர் இலந்தவிளை, நைனாபுதூர், பனங்கொட்டான் விளை, மாலையணிந்தான் குடியிருப்பு, உசரவிளை, சொத்தவிளை, அம்பலபதி, வீரபாகுபதி, தேரிவிளை, தெற்கு பணிக்கன் குடியிருப்பு, கணியான்விளை, வடக்கு தேரிவிளை, உத்தண்டன் குடியிருப்பு, தெங்கம்புதூர் முஸ்லிம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

இதில், இராஜாக்கமங்கலம் ஒன்றியச் செயலர் ஆர். கிருஷ்ணதாஸ், புத்தளம் பேரூர் செயலர் சுரேஷ், பேரூராட்சித் தலைவர் சிதம்பரதேவி, தொகுதி இணைச் செயலர் முத்துகுமார், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர்கள் செல்லம், ஆதிலிங்கம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைச் செயலர் ராஜாசிங், மாவட்ட பேரவை பொருளாளர் எ.எ. ரசாக், வழக்குரைஞர்கள் வெற்றிசெல்வன், சிவகுமார், ஈத்தாமொழி வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தலைவர் மணி, மாவட்ட தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலர் இ.என். சங்கர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

குமரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் என்.தளவாய்சுந்தரத்தை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம்

ஏப்ரல் 21, 2016,

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.தளவாய்சுந்தரத்தை ஆதரித்து, அக்கட்சியின் தலைமைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தோவாளை, ராஜக்கமங்கலம் ஒன்றியங்களில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல்வாய்மொழி சந்திப்பில் இருந்து திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரத்தை நாஞ்சில் சம்பத் தொடங்கினார். தொடர்ந்து அவர், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், புதூர் சந்திப்பு, புத்தளம் சந்திப்பு கடற்கரை கிராமமான மணக்குடி, மணக்குடி தேவாலயம் என கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் கவிஞர் சதாசிவம், ஒன்றியச் செயலர்கள் தோவாளை கே.சி.யூ. மணி, ராஜாக்கமங்கலம் ஆர்.கிருஷ்ணதாஸ், ராஜாக்கமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் சகாயஜெயராணி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலர் இ.என்.சங்கர், தொகுதிச் செயலர் ஜி.சுகுமாரன், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் பத்மாவதி நாகபாலகிருஷ்ணன், புத்தளம் பேரூராட்சித் தலைவி சிதம்பரதேவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜான்சிலின் விஜிலா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நகை கைவினைஞர்கள் அ.தி.மு.க. வேட்பாளர் என்.தளவாய்சுந்தரதுக்கு ஆதரவு

ஏப்ரல் 20, 2016,

தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தினர் (நகை கைவினைத் தொழிலாளர்கள்) அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்கப் பேரவை, கைவினைஞர்கள் முன்னேற்ற கழகம் ஆகிய அமைப்புகள் இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் பொருளாளர் எ.எஸ்.சங்கர், அமைப்பாளர் ஆறுமுகம், தொழிற்சங்கப் பேரவை செயலர் எம்.முத்து, கைவினைஞர்கள் முன்னேற்ற கழகத் தலைவர் நாராயணன், செயலர் முத்துசுவாமி, நகரச் செயலர் ஆறுமுக கணேஷ், துணைச் செயலர்கள் அய்யப்பன், பரமார்த்தலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், குமரி பேரவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், மாவட்ட செயலருமான என்.தளவாய்சுந்தரத்தை தோவாளையில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

பின்னர், சங்கத்தலைவர் நாகராஜன் கூறியது: தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில், பேரவைத் தேர்தலில் 234 தொகுதியிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்றும், குமரி மாவட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது என்றார் அவர்.

 

கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய் சுந்தரம் பிரசாரத்தை தொடங்கினார்

Kanyakumari-constituency-Digg-The-candidatesஞாயிறு, ஏப்ரல் 10,2016,

கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய் சுந்தரம் போட்டியிடுகிறார். அவர் நேற்று பிரசார பயணத்தை சுசீந்திரத்தில் இருந்து தொடங்கினார். முன்னதாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் உள்ள தாணுமாலயருக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து 18 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது.

தாணுமாலய சாமி கோவில் முன் இருந்து தளவாய் சுந்தரம் தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார். பின்னர் அவர் சுசீந்திரம் கோவில் எதிரே உள்ள சன்னதி தெரு பகுதியில், அ.தி.மு.க. அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு-வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அதன் பின்னர் திறந்த ஜீப்பில் நின்று அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, “இந்தியாவிலேயே எந்த முதல்-அமைச்சரும் வெற்றி பெறாத வகையில் தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என உறுதி ஏற்போம். அதன் அடிப்படையில் தொண்டர்கள் அனைவரும் வாக்கு சேகரித்து ஜெயலலிதாவை மீண்டும் முதல்-அமைச்சராக்க ஒற்றுமையாக பாடுபட வேண்டும்“ என்றார்.

இதில் நிர்வாகிகள் தம்பித்தங்கம், கிருஷ்ணகுமார், சந்தையடி பாலகிருஷ்ணன், ஆ.கோ.ஆறுமுகம், வக்கீல் பாலஜனாதிபதி, ஜெயசீலன், இ.என்.சங்கர், மனோகரன், என்ஜினீயர் லட்சுமணன், சந்தோஷ், ஆதிலிங்கம், நீலராஜன் மற்றும் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். பின்னர் தோவாளையில் கன்னியாகுமரி சட்டசபை தொகுதி தலைமை தேர்தல் அலுவலகத்தை தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார்.

 

நடைபெற உள்ள தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் முதல்–அமைச்சராவது உறுதி தளவாய் சுந்தரம் பேச்சு

Minister-Jayalalithaa-to-ensure-that-the-elections-to-be_SECVPFவியாழன் , மார்ச் 17,2016,

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி அவைத்தலைவர் பால்துரை தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தம்பிதங்கம், அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான சந்தையடி பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்துள்ளார். விலையில்லா 20 கிலோ அரிசி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, திருமண நிதி உதவி– தாலிக்கு 4 கிராம் தங்கம், விலையில்லா லேப்டாப், விலையில்லா சைக்கிள், கல்வி உதவி தொகை, பேறுகால நிதிஉதவி என்று பல்வேறு திட்டங்களை அவர் நிறைவேற்றியுள்ளார். எனவே ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளனர். அவர் மீண்டும் முதல்–அமைச்சராவது உறுதியாகிவிட்டது. கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒரே குடும்பமாக இருந்து, சகோதரத்துவத்துடன் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும்

இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.

கூட்டத்தில், ஜெயலலிதா தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல்–அமைச்சராகி, அவரது தலைமையில் பொற்கால ஆட்சி அமைந்திட அனைவரும் பாடுபட வேண்டும், கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் மிக அதிக அளவு வாக்குகள் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் பாலஜனாதிபதி, காரவிளை செல்வன், என்ஜினீயர் லெட்சுமணன், வக்கீல் கைலாசம், அழகேசன், கீதா ஷிவானி, பார்த்தசாரதி, சுப்பையா, ஜனாயுகேந்த், பாலமுருகன், பேராசிரியர் நீலபெருமாள், பாலன், காட்வின் ஏசுதாஸ், தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

MLA Mr. K.T. Patchaimal

 

 

 

Ex-AIADMK MLA Mr. K.T. Patchaimal

 

Father Name Shri Thanganadar
Party AIADMK
Date of Birth 8th March 1961
Place of Birth Thampathukonam
Marital Status Married
Address Chennai: ‘Malaragam’, N.B.30, P.S. Kumarasami Raja Salai, Chennai-600 028.
Mofussil: 48/5/27B, Thampathukonam, Erumbukkadu Post, Kanniyakumari District.
Telephone Chennai–Residence : 044-24933999
Mobile : +91 9443124467
E-mail mlakanniyakumari@tn.gov.in
Facebook https://www.facebook.com/KTPachaimal-1424495487772724/

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- Austin DMK 89,023
Fourteenth 2011-2016 K.T. Patchaimal AIADMK 86903
Thirteenth 2006-2011 N. Suresh Rajan DMK 63181
Twelfth 2001-06 N. Thalavaisundaram ADMK 55650
Eleventh 1996-01 N. Suresh Rajan DMK 42755
Tenth 1991-96 M. Ammamuthu
ADK 54194
Ninth 1989-91 K. Subramonia Pillai
DMK 33376
Eighth 1984-89 K. Perumal Pillay
ADK 45353
Seventh 1980-84 S. Muthukrishnan
ADK 35613
Sixth 1977-80 C. Krishnan ADK 23222
Fifth 1971-77 K. Rajah Pillai
DMK 35884

History of Kanyakumari District

title=Kanyakumari also known as Kanniyakumari, formerly known as Cape Comorin, is a town in Kanyakumari District in the state of Tamil Nadu in India. The name comes from the Devi Kanya Kumari Temple in the region. Kanyakumari is used geographically to define southern end of the Coromandel Coast region.

Kanyakumari is located at 8.08°N 77.57°E. It has an average elevation of 300 metre. Contrary to the popular (and sensational) belief that Kanyakumari lies at the meeting point of three bodies of water, it borders only one: the Laccadive Sea to the south west, south, and to the southeast. It is the confluence of the Western Coastal Plains and Eastern Coastal Plains.

Kanyakumari has been a great centre for art and religion for centuries. It was also an area of great trade and commerce. It was ruled by the Cholas, the Cheras, the Pandyas and the Nayaks. The architectural beauty of the temples in the area are the works of these rulers.

Kumari Thanthai Marshal Nesamony was instrumental in the merger of Kanyakumari district with Tamil Nadu (then known as Madras State) in 1956 during the linguistic reorganisation of states.

Since the early 1970s, tourism has been an industry in the town. Because of this it is one of the few small towns in South India where one can hear many of the different languages of India spoken in the street.

The Thiruvalluvar Statue has a height of 95 feet (29 m) and stands upon a 38 foot (11.5 m) pedestal that represents the 38 chapters of “virtue” in the Thirukkural. The statue standing on the pedestal represents “wealth” and “pleasures”, signifying that wealth and love be earned and enjoyed on the foundation of solid virtue.The combined height of the statue and pedestal is 133 feet (40.5 m), denoting the 133 chapters in the Thirukkural. It has a total weight of 7000 tons.

The Vivekananda Rock Memorial is a popular tourist monument in Vavathurai, Kanyakumari, India. The memorial stands on one of two rocks located about 500 metres east of the mainland of Vavathurai, India’s southernmost tip. It was built in 1970 in honour of Swami Vivekananda who is said to have attained enlightenment on the rock.

 

Kanyakumari District MapKanyakumari Area:

Area Sq. Km: 1,684

Kanyakumari Population:

Male: 926,345
Female: 944,029
Total: 1,870,374

Literacy Rates

Male: 93.65 %
Female: 89.90 %
Total: 91.75 %