Aravakurichi

Aravakurichi (State Assembly Constituency)

Aravakurichi is a constituency in the Tamil Nadu legislative assembly, that includes the city, Aravakurichi. It is part of the Karur (Lok Sabha constituency).

Total Voters:

Male: 96,481
Female: 1,01,953
Total: 1,98,434

 

அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜியை ஆதரித்து நடிகர் ராமராஜன் பேச்சு

மே 14,2016,

சொன்ன திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் 100 சதவீதம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்றார் நடிகர் ராமராஜன்.

அரவக்குறிச்சி மற்றும் ஈசநத்தம் பகுதியில் அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜியை ஆதரித்து அவர் மேலும் பேசியது:

பெண்கள் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஜெயலலிதா, ஏழை கிராமப் பெண்கள் தங்களது வறுமையால் வாழ்வாதாரத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காக விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கினார். இன்று அவை பல்கிப் பெருகி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது. இதற்கு காரணம் முதல்வர் ஜெயலலிதா தான்.

வறுமை திருமணத்திற்கு தடையாக இருந்துவிடக்கூடாது என எண்ணிய முதல்வர் தாலிக்குத்தங்கம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இப்போது அந்த திட்டத்தை விரிவுப்படுத்தி 4 கிராமாக இருந்த தங்கத்தை ஒரு பவுனாக உயர்த்தியவர் ஜெயலலிதா. சிலர் தேர்தல் வரும்போதுதான் வெளியே வருவார்கள். நான் அதைத்தருவேன், இதைத்தருவேன் என பொய்யான வாக்குறுதி கொடுப்பார்கள். தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடுவார்கள். ஒருவர் 93 வயதிலும் முதல்வராக ஆசைப்படுகிறார்.

இந்த தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான பொற்கால ஆட்சி தொடர நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

234 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்: வி. செந்தில்பாலாஜியை ஆதரித்து ஆனந்தராஜ் பிரசாரம்

மே 13,2016,

234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார் நடிகர் ஆனந்தராஜ்.

அரவக்குறிச்சி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜியை ஆதரித்து வேலாயுதம்பாளையம் அருகேயுயுள்ள இனுங்கனூரில் நடிகர் ஆனந்தராஜ் பேசுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றோம்.

வரும் பேரவைத் தேர்தலில் டிவிக்களின் கருத்துக்கணிப்புகள் பல்வேறு மாதிரியாக உள்ளன. அதிமுக கூட்டணி 197 தொகுதிகளைக் கைப்பற்றும் என்கின்றன. முதல்வர் செய்துள்ள சாதனைத் திட்டங்களால் 234 தொகுதிகளும் அதிமுகவுக்குத்தான் கிடைக்கும். தமிழக முதல்வர் யாரையும் ஏமாற்றவில்லை.

டாஸ்மாக் மூலம் கிடைத்த வருமானத்தை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளாத்தான் வழங்கினார். சிலர் அவர்களாகவே மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டுவருவது போல மாயை ஏற்படுத்துவர். ஆனால் அந்தத் திட்டங்கள் மூலம் பயன் பெறுவது அவர்களே தவிர மக்கள் கிடையாது.

எனவே குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மதுவைக் கொண்டுவந்ததே கருணாநிதிதான். இப்போது மதுவை ஒரேயடியாக ஒழித்துவிடுவேன் என்கிறார். முதல்வர் கூறியதுபோல மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும். ஒரேயடியாக ஒழிக்க முடியும் என்பது சாத்தியமல்ல என்றார்.

பிரசாரத்தில் அரவக்குறிச்சி தொகுதிச் செயலர் பி. குருசாமி, சமக மாவட்டச் செயலர் தங்கவேல், இந்திய குடியரசுக் கட்சி மாநில துணைத் தலைவர் கே. ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

வேட்டமங்கலம் ஊராட்சிக்கு தனி காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம்:அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதி

மே 10,2016,

வேட்டமங்கலம் ஊராட்சிக்கு தனி காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கப்படும் என்றார் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி.

கரூர் ஒன்றியம், வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்த அவர் பேசுகையில், படிக்கும் குழந்தைச் செல்வங்களுக்கு காலணி முதல் மடிக்கணினி வரை வழங்கி, அவர்களுக்குத் தாயாக இருந்து அவர்களது வாழ்வு உயரப் பாடுபடுபவர் முதல்வர் ஜெயலலிதா. ஏழைப் பெண்களுக்காக தாலிக்குத்தங்கம் வழங்கி வருபவர். சொன்னவை மட்டுமன்றி, சொல்லாததையும் செய்து காட்டிய ஒப்பற்ற முதல்வர்தான் ஜெயலலிதா.

கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் பொய். அந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவும் போவதில்லை. ஜெயிக்கப்போவதும் இல்லை. சொன்ன வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.

முதல்வரின் ஒப்புதலோடு வேட்டமங்கலம் ஊராட்சிக்கு தனி காவிரிக்கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்படும் எ*ன்றார்.

தொகுதிச் செயலர் எஸ்.பி. லோகநாதன், ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன், வேட்டமங்கலம் ஊராட்சி செயலர் எம். முனுசாமி, சமக மாவட்டச் செயலர் தங்கவேல், இந்திய குடியரசுக் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே. ஆனந்தராஜ் உள்ளிóட்டோர் பங்கேற்றனர்.

அரவக்குறிச்சியில் சேவல் சண்டை நடத்த நடவடிக்கை: அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி வாக்குறுதி

மே 09,2016,

அரவக்குறிச்சி தொகுதியில் சேவல் சண்டை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட நொய்யல் குறுக்குச்சாலை, நடையனூர், ஆலமரத்துமேடு, வேலாயுதம்பாளையம், புகழூர் நான்கு ரோடு, தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து வாக்காளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 கிராம் வழங்கப்பட்டு வந்த தங்கம் 8 கிராம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

சொன்னத் திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் 100 சதவீதம் நிறைவேற்றக்கூடிய ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. தேர்தல் அறிக்கையில் விவசாயக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் முதன்மையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புஞ்சைப்புகழூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித்தரப்படும். புஞ்சைப்புகளூர், வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு தனிவட்டம் உருவாக்குவதற்கு கடந்தாண்டு ஜூன் மாதமே அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் தனிவட்டம் உருவாக்கப்படும். அரவக்குறிச்சி தொகுதியில் சேவல் சண்டை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 வேட்டமங்கலம், புஞ்சைப்புகழூர் உள்ளிட்ட 4 ஊராட்சிகளுக்கு காவிரிக்கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். என் உடம்பில் உயிர் உள்ளவரை உங்களுக்காக பணியாற்றுவேன் என்றார். பிரசாரத்தில் தொகுதிச் செயலர் எஸ்.பி. லோகநாதன், ஒன்றியச் செயலர் பொறியாளர் கமலக்கண்ணன், ஊராட்சிச் செயலர்கள் கே.பி. ரெங்கநாதன், வடிவேல், சந்துரு, முன்னாள் கரூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் வளர்மதி, மாவட்ட கவுன்சிலர் விகே. வேலுசாமி, இந்திய குடியரசு கட்சி மாநில துணைத் தலைவர் கே. ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சின்னதாராபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி :அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி பேச்சு

மே 07,2016,

சின்னதாராபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாய்க்கால்தோட்டம், செட்டியார் தெரு, தன்னாசியப்பன் கோவில் தெரு, பெரியார் நகர், அக்ரஹாரம், காட்டாம்புதூர் தெரு மேற்கு, அமராவதி நகர், காட்டாம்புதூர் வடக்கு, அண்ணாநகர், இந்திரா நகர், போலீஸ் காலனி, மீனவர் தெரு, கடைவீதி, பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வரின் தேர்தல் அறிக்கையை பார்த்து எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. பள்ளிகளில் மதிய உணவு கொண்டு வந்த காமராஜரின் திட்டத்தை எம்ஜிஆர் விரிவுப்படுத்தினார். ஆனால் முதல்வர் ஜெயலலிதா மதிய உணவுத் திட்டத்தோடு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்து அத்திட்டத்தை தற்போது மேலும் விரிவுப்படுத்தியுள்ளார்.

திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கி வந்த 4 கிராம் தங்கத்தை ஒரு சவரன் என உயர்த்தியுள்ளது முதல்வர், ஏழைகளின் மேல் வைத்துள்ள அக்கறையைக் காட்டுகிறது.

மகப்பேறு நிதியுதவியை ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளார். பெண் குழந்தைகள் நலனைப் பேணி காக்கும் வகையில் செறிவூட்டப்பட்ட ஆவின் பால் லிட்டர் ரூ. 25-க்கு விற்கப்படும் என அறிவித்துள்ளார். படிப்படியாக மதுவிலக்கு, லோக்ஆயுக்தா உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் தமிழகம் அனைத்து துறையிலும் முன்னணி மாநிலமாக திகழ பல நல்லத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

சொன்னத் திட்டங்களையெல்லாம் 100 சதவீதம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. கருணாநிதி அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யான வாக்குறுதி. அவரால் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. முதல்வரின் தேர்தல் அறிக்கையால் மக்களுக்கு அதிமுக மீது அளவற்ற பற்று ஏற்பட்டுள்ளது. இந்த பற்றினால் அதிமுக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளையும் வென்றெடுக்கும். முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை 100 சதவீதம் நிறைவேற்றுவார்.

க. பரமத்தி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. இதில் பாதி ஊராட்சிகளை பிரித்து சின்னதாராபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்படும்.முருங்கை விவசாயத்தை பாதுகாக்க முருங்கை குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதிக்கு மட்டும் ரூ. 5.80 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அதிமுக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

பிரசாரத்தின்போது தொகுதிச் செயலர் எஸ்.பி. லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்: அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பேச்சு

மே 02,2016,

அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன் என்றார் அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி.

கரூர் மாவட்டம் புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளான தோட்டக்குறிச்சி முத்துராஜபுரம், அல்லாகோவில் வீதி, தோட்டக்குறிச்சி கடைவீதி, வீரராஜபுரம், தர்மராஜபுரம், தவிட்டுப்பாளையம், தளவாபாளையம் பிலிப்நகர், மேட்டுப்பாளையம், கோவிந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆவாரங்காட்டுப்புதூர், சேங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி அவர் பேசியது:

 முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் கரூர் மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி, சுற்றுவட்டச்சாலை உள்ளிட்ட எத்தனையோ நலத் திட்டங்கள் கிடைத்துள்ளன. வாங்கல் – மோகனூர் பாலம் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. இதன்மூலம் பரமத்தி வேலூர் சென்று பின்னர் மோகனூருக்கு சென்று வந்த சுமார் 30 கி.மீ. தூரம் குறைந்துள்ளது. கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் எண்ணற்ற நலப்பணிகள் நிறைவேற்றப்பட்டதோ, அதேபோல் அரவக்குறிச்சி தொகுதியிலும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று வெற்றிலை ஆராய்ச்சி நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், காவிரிக்கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களை செயல்படுத்தி என்றென்றும் நான் உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார்.

பிரசாரத்தில் தொகுதிச் செயலர் எஸ்.பி. லோகநாதன், மாவட்ட மகளிரணி செயலர் எம். ரேணுகாமோகன்ராஜ், புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூர் செயலர் பி. அன்பழகன், வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலர் டி. செந்தில்ராஜா, தொகுதி இணைச் செயலர் விசி. இளங்கோ, சமக மாவட்ட செயலர் தங்கவேல், இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத் தலைவர் கே. ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொகுதி மக்களுக்கு உண்மையான தொண்டனாக இருப்பேன்

மே 01,2016,

அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு உண்மையான தொண்டனாக இருப்பேன் என்றார் அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி.

அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி ஒன்றியம் தெத்துப்பட்டி ஊராட்சி இந்திரா நகர் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் காலனியில் சனிக்கிழமை பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட ஏழை,எளிய மக்களின் நலனுக்காக விலையில்லா அரிசி, விலையில்லா மிக்சி, கிரைண்டர்,மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி என பல்வேறு மக்கள்நலத் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி தொடர எம்ஜிஆரின் சின்னமான இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். எனது உடம்பில் உயிர் இருக்கும் வரை உங்களில் ஒருவனாக விசுவாசமாக இருப்பேன் என்றார். பிரசாரத்தின் போது,தொகுதி செயலாளர் எஸ்பி.லோகநாதன், ஒன்றிய செயலாளர் பி.குருசாமி, அண்ணா நகர் ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரவக்குறிச்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைய பாடுபடுவேன்:அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதி

ஏப்ரல் 30,2016,

அரவக்குறிச்சி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைய பாடுபடுவேன். குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்றார் அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி.

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி ஒன்றியம் சீத்தப்பட்டி காலனியில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்துப் பேசியது:

கடந்த 2011-ல் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். விலையில்லா அரிசி, மிக்ஸி கிரைண்டர், முதியோர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை, மாணவ, மாணவிகளுக்கு பாடநூல், மடிக்கணினி, ஏழை மக்களுக்கு விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமென்ட் என அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் மக்களுக்காக பணியாற்றியுள்ளார்.

ஜெயலலிதாவின் மக்கள் சேவை மீண்டும் தொடர எம்ஜிஆரின் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து 6-வது முறையாக மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்க வேண்டும். அரவக்குறிச்சி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு கொடுங்கள் என்றார்.

 

அரவக்குறிச்சி தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வருவேன்:அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதி

ஏப்ரல் 28,2016,

என்னை தேர்ந்தெடுத்தால் அரவக்குறிச்சி தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வருவேன் என்றார் அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட துக்காட்சி ஊராட்சிக்குட்பட்ட செம்மங்கரை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பிற்பகல் வாக்கு சேகரித்த அவர் வாக்காளர்களிடம் பேசுகையில், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, கரூர் மாவட்டத்துக்கு மட்டுமே ஆயிரம் கோடி செலவில் ஒருங்கிணைந்த காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம், சுற்றுவட்டச் சாலை, மருத்துவக் கல்லூரி என எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். என்னை வெற்றிபெறச் செய்தால் அரவக்குறிச்சி தொகுதியிலும் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும். இந்த தொகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களில் சுகாதார நிலையங்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் காவிரிக் கூட்டுக் குடிநீர் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஏற்கெனவே இந்த தொகுதிக்கு எம்எல்ஏவாக இருப்பவர் கடந்த தேர்தலின்போது ஓட்டு கேட்க மட்டுமே வந்தார். வெற்றி பெற்றபின் அவர் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. அவரை ஜெயிக்க வைக்கப் போகீறீர்களா, எண்ணிப் பாருங்கள். 2ஜி ஊழல், இலங்கை போரில் துரோகம் செய்த திமுகவுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டுங்கள். முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்யுங்கள் என்றார்.

அரவக்குறிச்சி தொகுதிச் செயலாளர் எஸ்.பி.லோகநாதன், வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.மார்கண்டேயன், சமக மாவட்டச் செயலாளர் தங்கவேல், இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்னிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி உறுதி

ஏப்ரல் 26,2016,

தென்னிலையில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றார் அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி.

கரூர் மாவட்டம் க. பரமத்தி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட குப்பம் ஊராட்சிக்குட்பட்ட உப்புப்பாளையம், புதூர்பட்டி, அரசம்பாளையம், குளிக்காடு, சாளிபாளையம், வேலாயுதம்பாளையம், காங்கேயம்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் அத்திப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட செல்வநகர், மேட்டுக்கடை, விஎன்.புதூர், கோயில்மேடு, இந்திராநகர், அத்திப்பாளையம் புதூர், முன்னூர் ஊராட்சிக்குட்பட்ட ஆதியப்பகவுண்டனூர் காலனி, ஆலாம்பாளையம், வேலாம்பாளையம், கிரசர்மேடு, முன்னூர், அண்ணாநகர், காட்டுமுன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதும், அவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பள்ளியில் இலவசமாக கிடைத்துவிடும் என்ற நிலையை உருவாக்கி, கல்வியில் புரட்சி செய்து ஏழை மாணவர்களின் நிலை உயர வழிவகுத்தவர் முதல்வர் ஜெயலலிதா. பாடநூல் முதல் காலணி, மடிக்கணினி என அனைத்தும் இலவசம். ஒரு காலத்தில் செல்வந்தர்களின் பிள்ளைகளில் கையில் மட்டும் தவழ்ந்த மடிக்கணினியை இன்று ஏழைக்குழந்தைகளின் கையிலும் தவழ விட்டு அழகுபார்த்தவர் முதல்வர். பெண்களுக்கு தாலிக்குத்தங்கம், கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை, கிராமப்புறத்தில் வறுமையில் வாடும் ஏழைப் பெண்களுக்கு கறவை மாடு, ஆடுகள் கொடுத்து ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா.

இந்தத் தொகுதியில் தென்னிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை எனத் தெரிவித்தனர். உங்களது கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துச் சென்று உறுதியாக இந்த பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்.

இதேபோல பாதுகாக்கப்பட்ட காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படும். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து ஜெயலலிதாவை தமிழகத்தின் ஆறாவது முறையாக முதல்வராக்க வேண்டும் என்றார்.

பிரசாரத்தில் அரவக்குறிச்சி தொகுதிச் செயலர் எஸ்.பி. லோகநாதன், க.பரமத்தி மேற்கு ஒன்றியச் செயலர் பொன். சரவணன், சமக மாவட்டச் செயலர் தங்கவேல், இந்திய குடியரசு கட்சி மாநில துணைத் தலைவர் கே. ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்

Digg-Candidate-introductory-meetingதிங்கள் , ஏப்ரல் 11,2016,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் புகளூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புன்செய்புகளூர் செயலாளர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். புன்செய்புகளூர் பேரூராட்சி துணை தலைவர் கவுசல்யாதேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். இதேபோல் பாலத்துறை, புன்செய்புகளூர், புகளூர் நான்கு ரோடு, செம்படாம்பாளையம், நாணப்பரப்பு ஆகிய பகுதிகளில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

 

அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் கு.வடிவேல், தொகுதி செயலாளர் எஸ்.பி.லோகநாதன், ஒன்றிய செயலாளர் பி.குருசாமி, ஒன்றியக்குழு தலைவர் சி.ராமலிங்கம், பேரூராட்சி தலைவர்கள் என்.மணிகண்டன், சி.ஏ.சையதுஇப்ராகிம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.ஜி.ஆர்.மனோகரன், கோழிப்பண்ணை செந்தில்நாதன், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Pallanishamy.K.C DMK 72831
Thirteenth 2006-2011 Khaleelur Rahman.M.A. DMK 45960
Twelfth 2001-06 Liyaudeen Sait E.A ADMK 51535
Eleventh 1996-01 Mohammed Ismail, S.S. DMK 41153
Tenth 1991-96 Mariyamul Asia ADK 57957
Ninth 1989-91 Ramasamy Monjanor DMK 48463
Eighth 1984-89 S. Jegatheesan ADK 57887
Seventh 1980-84 Sennimalai Alias, Kandahsamy P. S. ADK 45145
Sixth 1977-80 S. Sadasivam INC 32581
Fifth 1971-77 Abdul Jabbar MUL 34164

History of Karur District

Pasupatheeswarar Temple

One of the ancient cities in Tamil Nadu, Karur was ruled by the Cheras, Cholas, the Naickers, and the British successively. There is proof that Karur may have been the centre for old jewellery-making and gem setting (with the gold imported mainly from Rome), as seen from various excavations. According to the Hindu mythology, Brahma began the work of creation here, which is referred to as the “place of the sacred cow.”

Karur has a very long history and has been sung by various sangam poets. In history, it has been the battleground of various Tamil Kings like Chera, Chola, Pandya and Pallavas because of strategic location. The district has a very rich and varied cultural heritage.

Karuvoor Thevar born in Karur is one among the nine devotees who sung the divine Music Thiruvichaippa, which is the ninth Thirumurai. He is the single largest composer among the nine authors of Thiruvichaippa. He lived during the reign of the great Raja Raja Chola-I. In addition to the famous Siva temple, there is a Vishnu temple at Thiruvithuvakkodu, a suburb of Karur, sung by famous Kulasekara Alwar [7-8th century AD] who was the ruler of Kongu nadu. The same temple is presumably mentioned in epic Silappadikaram as Adaha maadam Ranganathar whose blessings Cheran Senguttuvan sought before his north Indian expedition.

Karur is one of the oldest towns in Tamil Nadu and has played a very significant role in the history and culture of the Tamils. Its history dates back over 2000 years, and has been a flourishing trading centre even in the early Sangam days. Epigraphical, numismatic, archaeological and literary evidences have proved beyond doubt that Karur was the capital of early Chera kings of Sangam age. It was called Karuvoor or Vanji during Sangam days. There has been a plethora of rare findings during the archaeological excavations undertaken in Karur. These include mat-designed pottery, bricks, mud-toys, Roman coins, Chera Coins, Pallava Coins, Roman Amphorae, Rasset coated ware, rare rings etc. Karur was built on the banks of river Amaravathi which was called Aanporunai during the Sangam days. The names of the early Chera kings who ruled from Karur, have been found in the rock inscriptions in Aru Nattar Malai close to Karur. The Tamil epic Silapathikaram mentions that the famous Chera King Cheran Senguttuvan ruled from Karur. In 150 Greek scholars Ptolemy mentioned “Korevora” (Karur) as a very famous inland trading centre in Tamil Nadu. After the early Cheras, Karur was conquered and ruled by Pandyas followed by Pallavas and later Cholas. Karur was under the rule of Cholas for a long time. Later the Naickers followed by Tipu Sultan also ruled Karur. The British added Karur to their possessions after destroying the Karur Fort during their war against Tipu Sultan in 1783. There is a memorial at Rayanur near Karur for the warriors who lost their lives in the fight against the British in the Anglo-Mysore wars. Thereafter Karur became part of British India and was first part of Coimbatore District and later Tiruchirappalli District.

Karur is also a part of Kongunadu. The history of Kongunadu dates back to the 8th century. The name Kongunadu originated from the term “Kongu”, meaning nectar or honey. Kongu came to be called as Kongunadu with the growth of civilization. The ancient Kongunadu country was made up of various districts and taluks which are currently known as Palani, Dharapuram, Karur, Nammakkal, Thiruchengodu, Erode, Salem, Dharmapuri, Satyamangalam, Nilgiris, Avinashi, Coimbatore, Pollachi and Udumalpet. Kongunadu was blessed with enormous wealth, a pleasant climate and distinct features. Kongunadu was ruled over by the Chera, Chola, Pandya, Hoysala, Muslim rulers and finally the British.

 

Karur District Map

Karur Area:

Area Sq. Km: 2,904

Karur Population:

Male: 528,184
Female: 536,309
Total: 1,064,493

Literacy Rates:

Male: 84.54%
Female: 66.86%
Total: 75.60%