Karur

Achievements of MLA Mr. V. Senthil Balaji

Distribution of Welfare Funds

Bhoomi Pooja for Multipurpose Center Building

Distribution of Relief Materials to Flood Affected People

Issuing Chief Minister's Comprehensive Health Insurance

Distribution of Free Bicycles

Free Mixie Grinder & Fan Distribution

New Buses for TNSTC

 

Karur (State Assembly Constituency)

Karur is a state assembly constituency in Tamil Nadu.

Total Voters:

Male: 1,10,871
Female: 1,20,336
Transgender: 2
Total: 2,31,209

 

MLA Mr. V. Senthil Balaji

 

 

MLA Mr. V. Senthil Balaji

 

 

 

Father Name Velusamy
Party AIADMK
Date of Birth 21st October 1975
Place of Birth Karur
Marital Status Married; One Child.
Address ‘Mullai’ NB 27, P.S. Kumarasamy Raja Road, Chennai-600 028
123, Rameswarappatty, Manmangalam Post, Karur, Karur District-639 606
Telephone Chennai–Residence: 044-24956667
044-25672232; Secretariat Intercom 5603, Mobile: +91 9843553345; 9442253345
E-mail mlakarur@tn.gov.in
Facebook https://www.facebook.com/pages/V-senthilbalaji/219869798095903

 

பேரணியுடன் பிரசாரம் முடித்த அதிமுக வேட்பாளர்

மே 15,2016,

கரூரில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.

இறுதிக்கட்ட பிரசாரம் முடிந்த நிலையில் சனிக்கிழமை மாலை அதிமுக சார்பில் வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் பேரணி நடைபெற்றது. முன்னதாக, வெங்கமேட்டில் உள்ள எம்ஜிஆர் மற்றும் அண்ணா உருவச் சிலைகளுக்கு வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மாலை அணிவித்தார். பேரணி பழைய சேலம் புறவழிச் சாலை, சர்ச் கார்னர் வழியாகச் சென்று கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை அடைந்தது. பேரணி முடிவில் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் தான் கரூர் மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்கள் பெருமளவில் கிடைத்துள்ளது. சுற்று வட்டச்சாலை, மருத்துவக் கல்லூரி, பேருந்து நிலையம் போன்ற சாதனைத் திட்டங்கள் கிடைத்துள்ளன. சென்னை வெள்ளத்தை அரசியலாக்கி இந்தத் தேர்தலை சந்திக்கிறார் கருணாநிதி. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பேரிடர் காலத்தில் துரித நடவடிக்கை எடுத்து இன்று வெள்ளம் வந்ததற்கான அடிச்சுவடே இல்லாமல் காட்டி, சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. 93 வயதிலும் கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வராக கனவு காண்கிறார். என்னை வீழ்த்த எதிரிகள் பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை என்னை எந்த ஒரு சூழ்ச்சியாலும் வெல்ல முடியாது. எம்ஜிஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்.

பிரசாரத்தில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், கரூர் தொகுதிச் செயலாளர் எஸ்.திருவிகா, பேரவைச் செயலாளர் எம்எல்ஏ செ.காமராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பசுவை சிவசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் விசிகே.ஜெயராஜ், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாந்தோணிமலையில் காவல் நிலையம்:அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

மே 11,2016,

தாந்தோணிமலையில் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்ஆர். விஜயபாஸ்கர்.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 44-வது வார்டில் உள்ள பாரதிதாசன் நகர், பொன்நகர், வெள்ளகவுண்டன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது:

முதல்வரின் தேர்தல் அறிக்கை மக்களிடத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சொன்ன வாக்குறுதி மட்டுமில்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் 100 சதவீதம் அவர் நிறைவேற்றியுள்ளதால், இந்த தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு தாலிக்குத்தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கு 9 மாதம் ஊதியத்துடன் விடுப்பு, பணிக்குச் செல்லும் பெண்களுக்காக 50 சதவீதம் மானியத்தில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். இவற்றைத்தவிர ஏழை மக்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என கூறியுள்ளார். பெண்கள் மீது அக்கறைக்கொண்ட ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்.

தாந்தோணிமலை பகுதிக்கு விரைவில் பாதுகாக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தப் பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு வரைபடங்களுக்கான அனுமதி கிடைப்பதற்கும், இங்கு காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பிரசாரத்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் விசிகே. ஜெயராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பசுவை சிவசாமி, நகரச் செயலாளர் வை. நெடுஞ்செழியன், நகர பேரவை துணைச் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 10,2016,

கரூரில் 18, 19-வது வார்டுகளுக்குட்பட்ட அண்ணாநகர், எம்ஜிஆர்நகர், ஏவிஎஸ்ஏவிஆர் காலனி, காமாட்சியம்மன்கோவில், செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார் அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

அப்போது அவர் பேசுகையில், கரூர் நகராட்சிக்குட்பட்ட 18, 19-வது வார்டுகளில் பல லட்சத்தில் மழைநீர் வடிகால் வசதி, சிறுபாலம், கழிப்பிட வசதி, ஆழ்குழாய் கிணறு, மின்கம்பம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதா மட்டுமே சொன்ன வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றக்கூடிய முதல்வராக இருக்கிறார். தேர்தல் அறிக்கையில்கூட விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம், கல்விக்கடன் ரத்து என ஏழைகளுக்காக திட்டங்களை அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தருவதாகக் கூறினர். ஆனால் அவர்களால் அத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்தும் பொய் அறிக்கைதான். அவர்களால் சொன்னதிட்டங்களை நிறைவேற்றவும் முடியாது, ஆட்சிக்கும் வரவும் முடியாது. தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் பொற்கால ஆட்சி மலர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.

பிரசாரத்தில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், நகர இளைஞரணி செயலர் சேரன்பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமாநிலையூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 09,2016,

முதியவர்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு சேகரித்தார் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட 29-வது வார்டில் உள்ள தாந்தோணி கிழக்குத்தெரு, திருமாநிலையூர், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக வாக்குச் சேகரித்தார்.அப்போது முதியவர்களின் கால்களைத் தொட்டு வணங்கி அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர் வாக்காளர்களிடம் பேசுகையில், 2011 தேர்தல் அறிக்கையில் கூறியவாறு 100 சதவீதம் திட்டங்களை நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா.பெண்களுக்காக இரவும், பகலும் அயராது உழைத்து வருபவர் முதல்வர் ஜெயலலிதா.

பெண்கள் மீது அக்கறைக் கொண்டமையால்தான் 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர், 8 கிராம் தங்கம் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை அறிவித்துள்ளார். அவரது பொற்கால ஆட்சித் தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார். பிரசாரத்தில் மாவட்ட துணைச் செயலர் பசுவை சிவசாமி, நகரச் செயலர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வரின் தேர்தல் அறிக்கையால் அதிமுகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் :கரூர் வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பிரசாரம்

மே 07,2016,

கரூர் நகராட்சிக்குட்பட்ட 46-வது வார்டில் உள்ள தாந்தோணி ஒன்றியப்பகுதி, முத்தலாடம்பட்டி, தென்றல்நகர், யசோதா நகர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையால் மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாடே எதிர்பார்த்த இந்த தேர்தல் அறிக்கையால் அதிமுக புதிய எழுச்சியைக் கண்டுள்ளது.

மக்கள் மத்தியில் அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. ஏழைப்பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம், பேறுகால உதவித்தொகை ரூ.12,000-த்திலிருந்து ரூ. 18,000, மகளிருக்கு 50சதவீதமானிய விலையில் மொபெட் என பெண்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் ஹைடெக் தேர்தல் அறிக்கையால் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது.

இந்தப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு அதிகம் உள்ளது. இதனால் ஏழைகள் நிலம் வாங்காமல் அவதியுறுகிறார்கள். இதனால்தான் அதன் மதிப்பை 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் குறைக்கப்படும் என்றார்.

பிரசாரத்தில் கரூர் தொகுதிச் செயலர் எஸ். திருவிகா, மாவட்ட துணைச் செயலர் பசுவைசிவசாமி, மாவட்ட இளைஞரணி செயலர் விசிகே. ஜெயராஜ், நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், நகர பேரவை துணைச் செயலர் வேல்முருகன், முன்னாள் மாவட்ட நிர்வாகி என்எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கருணாநிதி சூழ்ச்சி வலையில் சிக்க வேண்டாம்:கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர்

மே 06,2016,

கருணாநிதியின் சூழ்ச்சி வலையில் சிக்க வேண்டாம் என்றார் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு பகுதியில் காமராஜபுரம், செங்குந்தபுரம், வையாபுரிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து மேலும் அவர் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் கரூர் நகராட்சிக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ரூ. 68 கோடியில் காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தற்போது 97 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் உங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். இதைத்தவிர காமராஜபுரம், செங்குந்தபுரம் பகுதியில் சேலம் பைபாஸ் சாலையில் பழுதான பகுதிகள் சீரமைக்கப்படும். முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குங்கள்.

திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. தற்போது கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதில் திமுகவுக்கு ஆதரவாக சிலர் வெளியிடுகிறார்கள். கருணாநிதியின் சூழ்ச்சி வலையில் யாரும் சிக்க வேண்டாம். அவர்களின் ஆட்சி வரப்போவதும் இல்லை. எதையும் செய்யப் போவதில்லை. கட்டடத் தொழிலாளி இறந்தால் ரூ.5 லட்சம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் ஜெயலலிதா. இந்தத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் முதல்வரே வேட்பாளர். எனவே இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், தொகுதிச் செயலர் எஸ். திருவிகா, நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், இளைஞரணிச் செயலர் சேரன் பழனிசாமி, வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கரை ஆதரித்து நடிகர்கள் பிரசாரம்

மே 03,2016,

கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து நடிகர்கள் பொன்னம்பலம், ஜெயமணி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கரூரில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து கரூர் வெங்கமேட்டில் நடிகர் பொன்னம்பலம் பிரசாரம் செய்து பேசுகையில், பூவோடு சேர்ந்து நாரும் மணப்பதுபோல கடந்த தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து தேமுதிக மணம் பெற்றது.

விஜயகாந்த் பேசுவது என்னவென்றே யாருக்கும் புரியவில்லை. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தொடர அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றார்.நடிகர் ஜெயமணி பேசுகையில், அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிடப் பயப்படுவதாக கனிமொழி சொல்கிறார்.234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தைரியமாக களம் இறங்குகிறோம். ஆனால், கூட்டணிக்காகக் கதவை திறந்துவைத்து காத்திருந்து சிலர் ஏமாந்த கதையும் உள்ளது.

அதிமுக மக்களுடன் கூட்டணி, திமுக காங்கிரஸ் கொள்ளைக் கூட்டணி, தேதிமுக மக்கள் நலக்கூட்டணி காமெடி கூட்டணி. திமுகவுக்கு இந்தத் தேர்தலில் சம்மட்டி அடி கொடுங்கள்.

முதல்வராகலாம் என பலரும் பகல் கனவு கண்டு வருகின்றனர். இங்கு வேட்பாளராக எம்.ஆர். விஜயபாஸ்கர் நிற்கவில்லை. முதல்வர் ஜெயலலிதாவே நிற்பதாக அவரே கூறியுள்ளார். வாக்களிக்கும்போது இரட்டை இலையை தவிர வேறு எதுவும் உங்கள் கண்ணுக்குத் தெரியக்கூடாது என்றார்.

நிகழ்ச்சியில் நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், நகர்மன்றஉறுப்பினர் வை. விசாகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்புமனு

ஏப்ரல் 29, 2016,

கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்ஆர். விஜயபாஸ்கர் வியாழக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் வெங்கமேட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களைச் செய்துள்ளார். அந்த சாதனைத் திட்டங்கள் தொடர மக்கள் அனைவரும் அதிமுகவிற்கு வாக்களித்து 234 தொகுதிகளிலும் வெற்றியைக் கொடுங்கள்.

கரூர் மாவட்டத்துக்கு மட்டும் 1000 கோடிக்கு மேல் நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இதேபோல கரூர் நகராட்சிக்கு ரூ. 68 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம், 77 கோடியில் சுற்றுவட்டச்சாலை, மருத்துவக் கல்லூரி கொடுத்துள்ளார். இதேபோல மேலும் பல சாதனைத் திட்டங்கள் கிடைக்க இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், தொகுதிச் செயலர் எஸ்.திருவிகா, மாவட்ட துணைச் செயலர் பசுவை சிவசாமி, இளைஞரணி செயலர் விசிகே. ஜெயராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் செல்வராஜ், நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், நகர எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் ஆயில்ரமேஷ்,நகர எம்ஜிஆர் மன்றச் செயலர் மலையம்மன் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் கரூர் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக கேசி. பரமசிவம் மனு தாக்கல் செய்தார். இவர்களுக்கு கரூர் தொகுதிச் செயலர் எஸ். திருவிகா முன்மொழிந்தார்.

வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 27, 2016,

கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை வெங்கமேடு பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

கடைவீதியில் வாக்கு சேகரித்த அவர், அங்கு மூதாட்டிகளின் காலில் விழுந்து வணங்கி தனக்கு வாக்களிக்குமாறு கேட்டார். பிறகு, அவர் மாலையில் மின்னாம்பள்ளி, வாங்கல்குப்புச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், முதல்வரின் ஆட்சியில் வெங்கமேடு பகுதியில் எண்ணற்ற நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி, சாக்கடை வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத மருத்துவக் கல்லூரி கிடைத்துள்ளது. கரூர் மாவட்டத்திற்கு மட்டுமே சுமார் ரூ. 1000 கோடிக்கும் மேல் நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செய்து கொடுத்துள்ளார். அவருக்கு நாம் என்றும் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், கரூர் தொகுதிச் செயலாளர் எஸ். திருவிகா, மாவட்ட இளைஞரணி செயலாளர் விசிகே. ஜெயராஜ், கரூர் ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன், கரூர் நகர்மன்றத் தலைவர் எம். செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சிவசாமி, நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், நகர பேரவைச் செயலாளர் வி. செல்வராஜ், நகர எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வரின் சாதனைத் திட்டங்களால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்:வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

ஏப்ரல் 26, 2016,

முதல்வரின் சாதனைத் திட்டங்களால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றார் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலையில் வாக்கு சேகரித்த அவர் மாலையில் நெரூர் தென்பாகம் ஊராட்சிக்குட்பட்ட அரங்கநாதம்பேட்டை, நேரு நகர், புதுப்பாளையம், மறவாபாளையம், அக்ரஹாரம், என்எஸ்கே நகர், அம்பேத்கர் நகர்,ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகாலம் முதல்வர் ஜெயலலிதா பொற்கால ஆட்சி நடத்தினார்.

இந்த ஆட்சியில்தான் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், வேலைப்பளுவை குறைக்க விலையில்லா, மின்விசிறி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் கருணாநிதி இலவசமாக டிவி தருகிறேன் எனக் கூறி டிவியை வழங்கி ஒளிபரப்பை சுமங்கலி கேபிள் டிவிக்கு கொடுத்துவிட்டு அதன்மூலம் 3,000 கோடி ரூபாய் கொள்ளையடித்தவர். ஸ்பெக்டரம் ஊழலை நாடே விமர்சிக்கிறது. அவர்கள் பார்த்துக் கேட்கிறார்கள் என்ன செய்துவிட்டார்கள் என்று, முதல்வரின் சாதனைத் திட்டங்களே போதும், அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றார்.

பிரசாரத்தில் கரூர் தொகுதிச் செயலர் எஸ். திருவிகா, அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் செல்வராஜ், ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரூர் நகராட்சி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு

sஏப்ரல் 21, 2016,

கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 31, 32 ஆகிய வார்டு பகுதி மக்களிடம் முதல்-அமைச்சரின் திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின்போது அவர், 31, 32-வது வார்டு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெயில்வே குகை வழிப்பாதை அமைக்க முதல்-அமைச்சர் நிதி வழங்கி உள்ளார். அதன்படி இந்த பணி தொடங்கி நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். கரூர் நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை போக்க ரூ.68½ கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முடிக்கப்பட்டு பொது மக்களின் தாகத்தை முதல்-அமைச்சர் தீர்த்து வைத்து உள்ளார். எனவே முதல்-அமைச்சரின் திட்டங்கள் தொடர வருகிற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

கரூர் அ.தி.மு.க.  வேட்பாளரால் தேர்தல் அலுவலகம் திறப்பு: தேர்தல் பிரசாரம் தொடக்கம்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

கரூர் மாவட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து வாக்கு சேகரித்தனர்.

சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதில் கரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இதையடுத்து கரூர்-கோவை சாலையில் அமைக்கப்பட்ட தேர்தல் அலுவலகத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து கரூரை அடுத்த கோடங்கிபட்டியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அங்குள்ள பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் கோடங்கிபட்டியில் வீடு, வீடாக சென்று அங்குள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். மேலும் பல வீடுகளில் இருந்த முதியோர் பாதம் தொட்டு வேண்டி வாக்கு சேகரித்தார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- V.Senthil Balaji AIADMK 99738
Thirteenth 2006-2011 V.Senthil Balaji AIADMK 80214
Twelfth 2001-06 T. N. Sivasubramanian INC 82012
`Eleventh 1996-01 Vasuki Murgesan DMK 79302
Tenth 1991-96 M. Chinnasamy ADK 89351
Ninth 1989-91 K. V. Ramasamy DMK 54163
Eighth 1984-89 K. Vadivel ADK 65363
Seventh 1980-84 M. Chinnasamy ADK 54331
Sixth 1977-80 K. Vadivel ADK 33856
Fifth 1971-77 Nallasamy DMK 45977

History of Karur District

Pasupatheeswarar Temple

One of the ancient cities in Tamil Nadu, Karur was ruled by the Cheras, Cholas, the Naickers, and the British successively. There is proof that Karur may have been the centre for old jewellery-making and gem setting (with the gold imported mainly from Rome), as seen from various excavations. According to the Hindu mythology, Brahma began the work of creation here, which is referred to as the “place of the sacred cow.”

Karur has a very long history and has been sung by various sangam poets. In history, it has been the battleground of various Tamil Kings like Chera, Chola, Pandya and Pallavas because of strategic location. The district has a very rich and varied cultural heritage.

Karuvoor Thevar born in Karur is one among the nine devotees who sung the divine Music Thiruvichaippa, which is the ninth Thirumurai. He is the single largest composer among the nine authors of Thiruvichaippa. He lived during the reign of the great Raja Raja Chola-I. In addition to the famous Siva temple, there is a Vishnu temple at Thiruvithuvakkodu, a suburb of Karur, sung by famous Kulasekara Alwar [7-8th century AD] who was the ruler of Kongu nadu. The same temple is presumably mentioned in epic Silappadikaram as Adaha maadam Ranganathar whose blessings Cheran Senguttuvan sought before his north Indian expedition.

Karur is one of the oldest towns in Tamil Nadu and has played a very significant role in the history and culture of the Tamils. Its history dates back over 2000 years, and has been a flourishing trading centre even in the early Sangam days. Epigraphical, numismatic, archaeological and literary evidences have proved beyond doubt that Karur was the capital of early Chera kings of Sangam age. It was called Karuvoor or Vanji during Sangam days. There has been a plethora of rare findings during the archaeological excavations undertaken in Karur. These include mat-designed pottery, bricks, mud-toys, Roman coins, Chera Coins, Pallava Coins, Roman Amphorae, Rasset coated ware, rare rings etc. Karur was built on the banks of river Amaravathi which was called Aanporunai during the Sangam days. The names of the early Chera kings who ruled from Karur, have been found in the rock inscriptions in Aru Nattar Malai close to Karur. The Tamil epic Silapathikaram mentions that the famous Chera King Cheran Senguttuvan ruled from Karur. In 150 Greek scholars Ptolemy mentioned “Korevora” (Karur) as a very famous inland trading centre in Tamil Nadu. After the early Cheras, Karur was conquered and ruled by Pandyas followed by Pallavas and later Cholas. Karur was under the rule of Cholas for a long time. Later the Naickers followed by Tipu Sultan also ruled Karur. The British added Karur to their possessions after destroying the Karur Fort during their war against Tipu Sultan in 1783. There is a memorial at Rayanur near Karur for the warriors who lost their lives in the fight against the British in the Anglo-Mysore wars. Thereafter Karur became part of British India and was first part of Coimbatore District and later Tiruchirappalli District.

Karur is also a part of Kongunadu. The history of Kongunadu dates back to the 8th century. The name Kongunadu originated from the term “Kongu”, meaning nectar or honey. Kongu came to be called as Kongunadu with the growth of civilization. The ancient Kongunadu country was made up of various districts and taluks which are currently known as Palani, Dharapuram, Karur, Nammakkal, Thiruchengodu, Erode, Salem, Dharmapuri, Satyamangalam, Nilgiris, Avinashi, Coimbatore, Pollachi and Udumalpet. Kongunadu was blessed with enormous wealth, a pleasant climate and distinct features. Kongunadu was ruled over by the Chera, Chola, Pandya, Hoysala, Muslim rulers and finally the British.

 

Karur District Map

Karur Area:

Area Sq. Km: 2,904

Karur Population:

Male: 528,184
Female: 536,309
Total: 1,064,493

Literacy Rates:

Male: 84.54%
Female: 66.86%
Total: 75.60%