Krishnarayapuram(SC)

MLA Mr. S. Kamaraj
MLA Mr. S. Kamaraj

 

 

MLA Mr. S. Kamaraj

 

 

 

Father Name SELLAMUTHU
Party AIADMK
Date of Birth 27th May 1964
Place of Birth Karur
Marital Status Married; Three Children
Address Chennai: D10E, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: No.45D, Arikkaranpalayam, LNS Post, Karur-639 002.
Telephone Chennai–Residence: 044-25386087
Mobile: +91 9843358863
E-mail mlakrishnarayapuram@tn.gov.in

 Krishnarayapuram(SC) (State Assembly Constituency)

Krishnarayapuram is a state assembly constituency in Tamil Nadu. It is a Scheduled Caste reserved constituency.

Total Voters:

Male: 99,901
Female: 1,02,986
Transgender: 26
Total: 2,02,913

நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள் :  அதிமுக வேட்பாளர் எம்.கீதா.

மே 15,2016,

தமிழகத்தில் நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீதா.

தொகுதிக்குள்பட்ட தரகம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, காணியாளம்பட்டி, ஜெகதாபி,கிருஷ்ணராயபுரம்,மாயனூர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் கரூர் காந்தி கிராமத்தில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தில் பேசியது:

உலக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு முதல்வரும் சிந்திக்காத ஏழை பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம் வழங்கும் தாலிக்குத் தங்கம் திட்டத்தை கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, நெசவாளர்களுக்கு கூடுதல் மின்சாரம், வீடுகளுக்கு இலவசமாக 100 யூனிட் மின்சாரம் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். சொன்ன வாக்குறுதியையும், சொல்லாத வாக்குறுதியையும் நிறைவேற்றும் தலைவர்முதல்வர் மட்டுமே. கிருஷ்ணராயபுரம் தொகுதி மிகவும் பின் தங்கிய பகுதி.இந்த பகுதியில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் காத்திருக்கின்றன. இந்தத் தொகுதியை மாநிலத்தின் முன்னோடித் தொகுதியாக மாற்றிட எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்றார்.

பிரசாரத்தில் தொகுதிச் செயலாளர் நகுல்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொரணிகணேசன்,ஒன்றியச் செயலாளர் நாகப்பன், கடவூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கடவூர் ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்:அதிமுக வேட்பாளர் கீதா உறுதி

மே 14,2016,

கடவூர் ஒன்றியப்பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கீதா.

கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட குருணிகுளத்துப்பட்டி, மைலம்பட்டி, சிந்தாமணிப்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்து அவர் மேலும் பேசியது:

முதல்வரின் சாதனைத் திட்டங்களில் பயன்பெறாதவர்கள் யாருமே கிடையாது. எதிர்க்கட்சியினர் முதல் அனைவருமே பயனடைந்துள்ளனர்.

ஆனால் மு.க.ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதா என்ன செய்தார் என்று கேட்கிறார். அவர்களைப் போல முதல்வருக்கு குடும்பம் கிடையாது. மக்கள்தான் அவரது குடும்பம். மக்களால் நான், மக்களுக்காக நான் என இரவும் பகலும் மக்களுக்காகவே உழைத்துக்கொண்டிருக்கிறார். முதல்வரின் தேர்தல் அறிக்கையைக் கண்டு பொறாமையால் உளறுகிறார்கள். பொய்யான கருத்துக்கணிப்பை மக்களிடம் திணிக்கிறார்கள். அவர்களது தந்திரம் மக்களிடம் எடுபடாது. மக்கள் அனைவரும் முதல்வரின் பக்கம் உள்ளனர். கடவூர் ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளது. இப்பிரச்னையை தீர்க்க காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மாநிலத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். பிரசாரத்தில் மாநில சிறுபான்மை துணைத் தலைவர் சிந்தைஇஸ்மாயில், ஒன்றிய இளைஞரணிச் செயலர் கடவூர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் சித்ரா, ஒன்றியச் செயலர் நாகப்பன், சிறுபான்மைப் பிரிவுச் செயலர் சிற்பிஅமானுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரூரில் இருந்து வடவம்பாடிக்கு அரசு பேருந்து:அதிமுக வேட்பாளர் எம். கீதா வாக்குறுதி

மே 13,2016,

கரூரில் இருந்து வடவம்பாடிக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கீதா வாக்குறுதி அளித்தார்.

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட மஞ்சநாயக்கன்பட்டி, வடவம்பாடி, பாப்பையம்பாடி,பண்ணப்பட்டி ஆகிய ஊராட்சிகள் மற்றும் தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள பிள்ளாபாளையம், செல்லாண்டிபாளையம், கருப்பம்பாளையம், அப்பிப்பாளையம், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியது:

தமிழக முதல்வர் கடந்த ஐந்தாண்டுகளில் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த திட்டங்கள் மட்டுமன்றி சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார். கடவூர் மற்றும் தாந்தோணி ஒன்றியங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே இந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். தேர்தல் முடிந்ததும் உங்களது கோரிக்கையான கரூரில் இருந்து வடவம்பாடிக்கு பேருந்து இயக்க வேண்டும் என்பதை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அதை முழுமையாக நிறைவேற்றுவேன் என்றார். பிரசாரத்தில் தொகுதிச் செயலர் நகுல்சாமி, தொழிற்சங்கச் செயலர் பொரணிகணேசன், மாநில சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலர் சிந்தை இஸ்மாயில், இளைஞரணி ஒன்றியச் செயலர் செல்வராஜ், ஒன்றியச் செயலர்கள் நாகப்பன், வீரமணி, மாவட்ட இணைச் செயலர் சித்ரா, முன்னாள் ஒன்றியச் செயலர் கைலாசம் உள்பட பலர் பங்கேற்றனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் குளம், குட்டைகளை தூர்வாரி நீர் நிரப்ப நடவடிக்கை:அதிமுக வேட்பாளர் கீதா உறுதி

மே 12,2016,

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் குளம், குட்டைகளை தூர்வாரி நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீதா.

கடவூர் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட மாணிக்கபுரம், சுண்டுவிழிப்பட்டி, உடையாப்பட்டி, பாப்பையாம்பாடி, கரட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை அவர் வாக்குச் சேகரித்தார். செல்லாண்டிபுரத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் வாக்கு சேகரித்து அவர் பேசியது:

கிருஷ்ணராயபுரம் ஒன்றியப் பகுதியில் மழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து, நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் தூர்வார நடவடிக்கை எடுப்பேன். நாட்டில் எந்த ஒரு அரசியல் தலைவரும் கொடுக்காத தாலிக்குத் தங்கம் திட்டத்தை அறிவித்து, அதை 100 சதவீதம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா.

தற்போதுகூட தேர்தல் அறிக்கையில், ஏழை பெண்களின் திருமணத்துக்கு தடையாக வறுமை இருந்து விடக்கூடாது என்ற உயரிய நோக்கில்தான் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர். அவர் மீண்டும் முதல்வராக வர வேண்டும். இதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

சேங்கல் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்:அதிமுக வேட்பாளர் கீதா உறுதி

மே 11,2016,

சேங்கல் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கீதா.

இந்தத் தொகுதிக்கு உட்பட்ட சேங்கல், சின்னசேங்கல், முத்துரங்கன்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அவர் தீவிரமாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியது:

சேங்கல் உள்ளிட்ட பகுதிகள் வானம்பார்த்த வறட்சியான பூமியாக உள்ளது. இதனால், விவசாயம் செழிக்கும் வகையில், காவிரி ஆற்றில் இருந்து பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், குடிநீர் பற்றாக்குறையைப் போக்க காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழக முதல்வர் கடந்த 5 ஆண்டுகளில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் எண்ணற்ற நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 10-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ. 25,000, பிளஸ் 2 படித்த பெண்களுக்கு ரூ. 50,000 வழங்கினார். இந்தத் திட்டத்தை தற்போது விரிவுபடுத்தி ஒரு சவரன் நகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்றார்.

பிரசாரத்தில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் பிகே. முத்துசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பொரணிகணேசன், மாவட்ட பாசறைச் செயலாளர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் இளங்கோவன், ஒன்றியப் பேரவைச் செயலாளர் வீரமணி, கட்டளை சிலம்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காந்திகிராமம் பகுதியில் அடிப்படை வசதிகள்:கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் கீதா

மே 10,2016,

காந்திகிராமம் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றார் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கீதா.

கரூர் தெற்கு காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. 50 சதவீத மானிய விலையில் மொபெட் கூறப்பட்டிருப்பது, பணிக்குச் செல்லும் பெண்களின் நேரம் வீணாகக்கூடாது என்பதற்கே. எத்தனையோ வீடுகளில் ஏழைப்பெண்கள் மகள்களை திருமணம் செய்து வைக்க கஷ்டப்படுகிறார்கள்.

ஏழ்மையால் தங்கம் வாங்கி திருமணத்தை நடத்த முடியாத நிலையில் தற்போது முதல்வர் ஜெயலலிதா 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது ஏழைகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மட்டுமே சொன்னதையும் செய்வார், சொல்லாததையும் செய்வார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார். அதிமுக வர்த்தக செயலர் பாலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் பொரணிகணேசன், இளைஞரணிச் செயலர் மெட்ரோபிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

தொகுதி மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவேன்

மே 08,2016,

தொகுதி மக்களின் கோரிக்கைகளை 100 சதவீதம் முழுமையாக நிறைவேற்றுவேன் என்றார் அதிமுக வேட்பாளர் எம்.கீதா.

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட புலியூர் பேரூராட்சி பகுதிகள் மற்றும் காளியம்மன்கோவில் தெரு, ஆசிரியர் காலனி, புரவிபாளையம், கோவில்பாளையம், ஓடமுடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வீடு, வீடாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். அவர் மேலும் பேசியதாவது:

முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. மகளிர் மீது அக்கறை கொண்ட முதல்வர் கடந்த தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல, இந்தத் தேர்தலிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். குறிப்பாக, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் ஒரு சவரன் நகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்வரின் சாதனைத் திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். தொகுதி மக்களாகிய உங்களது கோரிக்கைகளுக்கு செவிக்கொடுத்து அதனை நிறைவேற்ற 100 சதவீதம் பாடுபடுவேன். குடிநீர், கழிவுநீர் சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுப்பேன் என்றார். பிரசாரத்தில் தொகுதி செயலாளர் நகுல்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொரணிகணேசன், ஒன்றியச் செயலாளர் தங்கராஜ், புலியூர் பேரூராட்சி செயலாளர் மயில்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பழைய ஜயங்கொண்டம் பகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

மே 07,2016,

பழைய ஜயங்கொண்டம் பகுதியில் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கீதா வெள்ளிக்கிழமை தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய ஜயங்கொண்டம், பழைய ஜயங்கொண்டம் காலனி, வாரச்சந்தை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமையும், கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட சிந்தாமணிப்பட்டி, மயிலம்பட்டி பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீதா வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை எதிர்க்கட்சியினரே வரவேற்கிறார்கள். குறிப்பாக பெண்கள் மத்தியில் முதல்வரின் தேர்தல் அறிக்கை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தை 8 கிராம் என உயர்த்தி அறிவித்திருப்பது ஏழை கிராமப்புற பெண்களாகிய உங்களுக்கு வரப்பிரசாதமான திட்டம். மேலும் விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு 80 சதவீதம் மானியம் அறிவித்துள்ளார். ஏற்கெனவே கடந்த தேர்தலில் அறிவித்த திட்டங்களை 100 சதவீதம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி மக்கள் நலத்திட்டங்களை தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.

பிரசாரத்தில் தொகுதிச் செயலர் நகுல்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் பொரணி கணேசன், ஒன்றியச் செயலர் பிகே. முத்துசாமி, பழைய ஜயங்கொண்டம் பேரூர் செயலர் வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கடவூர் பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்:அதிமுக வேட்பாளர் கீதா உறுதி

மே 05,2016,

கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்ட காவிரிக் குடிநீர் வழங்கப்படும் என்றார் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கீதா.

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கடவூர் ஒன்றியத்தில் உள்ள பண்ணப்பட்டி, பி.உடையாப்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துப்பட்டி, மேலசக்கரக்கோட்டை, கீழ சக்கரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்து அவர் மேலும் பேசுகையில், காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதி மன்றம் வரை சென்று, போராடி தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தார். காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராடும் ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் மத்திய அரசிடமிருந்து போராடி பெற்றுத் தரக்கூடிய தலைவரும் முதல்வரும் ஜெயலலிதா மட்டுமே.

மீண்டும் அவரை 6-வது முறையாக முதல்வராக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். கடவூர் பகுதியில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பாதுகாக்கப்பட்ட காவிரிக் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

பிரசாரத்தில் தொகுதிச் செயலர் நகுல்சாமி, இளைஞரணி செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜெகதாபி ஊராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளர் கீதா தீவிர பிரசாரம்

மே 03,2016,

ஜெகதாபி ஊராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளர் எம். கீதா திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை, ஜெகதாபியில் கடை வீதி, துளசிக்கொடும்பு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். வெள்ளியணையில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்து அவர் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா ஆட்சி மட்டுமே நமக்கு பாதுகாப்பான ஆட்சி. அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், கறவை மாடுகள், ஆடுகள் என எண்ணற்ற நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீண்டும் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பொற்கால ஆட்சி மலர, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.

ஒன்றியச் செயலர் தங்கராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் பொரணிகணேசன், மாவட்ட கவுன்சிலர் துரைமுருகன், ஊராட்சி செயலர்கள் சுப்ரமணி, பிரின்ஸ் சரவணன், சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்புமனு

ஏப்ரல் 29,2016,

கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கீதா வியாழக்கிழமை வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களோடு வேட்பாளர் எம். கீதா தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக மாயனூரைச் சேர்ந்த கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய பேரவை பொருளாளர் வி. சந்திரசேகர் தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ செ. காமராஜ், கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலர் பி.கே. முத்துசாமி, தொகுதிச் செயலர் விஎம். நகுல்சாமி, தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலர் ஆலம் தங்கராஜ், தொழிற்சங்கச் செயலர் பொரணிகணேசன், கடவூர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக வேட்பாளர் எம். கீதா தனது ஆதரவாளர்களுடன் கரூர் வெங்கமேட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கீதா வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கீதா வாக்கு சேகரிப்புகிருஷ்ணராயபுரம், ஏப்ரல்

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கீதா நேற்று பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பூவம்பாடி, அழகாபுரி, உடையகுளத்துப்பட்டி, புதுப்பட்டி, குப்பு ரெட்டிப்பட்டி, ஒமாந்தூர், லட்சுமணம்பட்டி உள்பட 15 வார்டுகளிலும் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொரணிகணேசன், தொகுதி செயலாளர் நகுல்சாமி, நகர செயலாளர் வேணுகோபால், நகர அவைத்தலைவர் சுப்புராமன், முன்னாள் நகர செயலாளர் ராமன், மகளிரணி பானுமதிமுத்து உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் கீதா தலைமையில் தேர்தல் அலுவலகம் திறப்பு: தேர்தல் பிரசாரம் தொடக்கம்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

கிருஷ்ணராயபுரத்தில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு வேட்பாளர் கீதா தலைமை தாங்கினார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. காமராஜ் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து ஆண்டிப்பாளையம், வீரராக்கியத்தில் வேட்பாளர் கீதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதில் தொகுதி செயலாளர் வக்கீல் நகுல்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொரணிகணேசன், மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரமணி, கூட்டுறவு சங்க தலைவர் ராமச்சந்திரன், தாந்தோனி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.தங்கராசு, உப்பிடமங்கலம் பேரூர் அவைத்தலைவர் அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Kamaraj.S AIADMK 83145
Thirteenth 2006-2011 Kamaraj. P DMK 58394
Twelfth 2001-06 Sasikala R. ADMK 64046
Eleventh 1996-01 S. Nagarathinam DMK 57638
Tenth 1991-96 Arivalagan A. ADK 80676
Ninth 1989-91 Arivalagan, A. DMK 43574
Eighth 1984-89 Thangavelraj, P. M. ADK 65928
Seventh 1980-84 Thangavelraj, P. M. ADK 43623
Sixth 1977-80 P. Soundarapandian ADK 22561
Fifth 1971-77 P. Soundara Pandian DMK 36177

History of Karur District

Pasupatheeswarar Temple

One of the ancient cities in Tamil Nadu, Karur was ruled by the Cheras, Cholas, the Naickers, and the British successively. There is proof that Karur may have been the centre for old jewellery-making and gem setting (with the gold imported mainly from Rome), as seen from various excavations. According to the Hindu mythology, Brahma began the work of creation here, which is referred to as the “place of the sacred cow.”

Karur has a very long history and has been sung by various sangam poets. In history, it has been the battleground of various Tamil Kings like Chera, Chola, Pandya and Pallavas because of strategic location. The district has a very rich and varied cultural heritage.

Karuvoor Thevar born in Karur is one among the nine devotees who sung the divine Music Thiruvichaippa, which is the ninth Thirumurai. He is the single largest composer among the nine authors of Thiruvichaippa. He lived during the reign of the great Raja Raja Chola-I. In addition to the famous Siva temple, there is a Vishnu temple at Thiruvithuvakkodu, a suburb of Karur, sung by famous Kulasekara Alwar [7-8th century AD] who was the ruler of Kongu nadu. The same temple is presumably mentioned in epic Silappadikaram as Adaha maadam Ranganathar whose blessings Cheran Senguttuvan sought before his north Indian expedition.

Karur is one of the oldest towns in Tamil Nadu and has played a very significant role in the history and culture of the Tamils. Its history dates back over 2000 years, and has been a flourishing trading centre even in the early Sangam days. Epigraphical, numismatic, archaeological and literary evidences have proved beyond doubt that Karur was the capital of early Chera kings of Sangam age. It was called Karuvoor or Vanji during Sangam days. There has been a plethora of rare findings during the archaeological excavations undertaken in Karur. These include mat-designed pottery, bricks, mud-toys, Roman coins, Chera Coins, Pallava Coins, Roman Amphorae, Rasset coated ware, rare rings etc. Karur was built on the banks of river Amaravathi which was called Aanporunai during the Sangam days. The names of the early Chera kings who ruled from Karur, have been found in the rock inscriptions in Aru Nattar Malai close to Karur. The Tamil epic Silapathikaram mentions that the famous Chera King Cheran Senguttuvan ruled from Karur. In 150 Greek scholars Ptolemy mentioned “Korevora” (Karur) as a very famous inland trading centre in Tamil Nadu. After the early Cheras, Karur was conquered and ruled by Pandyas followed by Pallavas and later Cholas. Karur was under the rule of Cholas for a long time. Later the Naickers followed by Tipu Sultan also ruled Karur. The British added Karur to their possessions after destroying the Karur Fort during their war against Tipu Sultan in 1783. There is a memorial at Rayanur near Karur for the warriors who lost their lives in the fight against the British in the Anglo-Mysore wars. Thereafter Karur became part of British India and was first part of Coimbatore District and later Tiruchirappalli District.

Karur is also a part of Kongunadu. The history of Kongunadu dates back to the 8th century. The name Kongunadu originated from the term “Kongu”, meaning nectar or honey. Kongu came to be called as Kongunadu with the growth of civilization. The ancient Kongunadu country was made up of various districts and taluks which are currently known as Palani, Dharapuram, Karur, Nammakkal, Thiruchengodu, Erode, Salem, Dharmapuri, Satyamangalam, Nilgiris, Avinashi, Coimbatore, Pollachi and Udumalpet. Kongunadu was blessed with enormous wealth, a pleasant climate and distinct features. Kongunadu was ruled over by the Chera, Chola, Pandya, Hoysala, Muslim rulers and finally the British.

 

Karur District Map

Karur Area:

Area Sq. Km: 2,904

Karur Population:

Male: 528,184
Female: 536,309
Total: 1,064,493

Literacy Rates:

Male: 84.54%
Female: 66.86%
Total: 75.60%