Veppanahalli (State Assembly Constituency)

Veppanahalli is a state assembly constituency of Tamil Nadu formed after constituency delimitation. This constituency is part of Krishnagiri parliamentary constituency

Total Voters:

Male 1,16,414
Female: 1,10,513
Transgender 10
Total 2,26,937

AIADMKCandidate for Veppanahalli Assembly Election 2016 – Mr. A.V.M. Madhu

 

அதிமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ஏவிஎம் மது வாக்குச் சேகரிப்பு

மே 12,2016,

வேப்பனஅள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏவிஎம் மது (எ) ஹேம்நாத் புதன்கிழமை வாக்குச் சேகரித்தார்.

வேப்பனஅள்ளி தொகுதிக்கு உள்பட்ட சின்னார், மல்லசந்திரம், பெரிய குதிபாலா, மேலுமலை, ஏனுசோனை, ஒசஹள்ளி உள்ளிட்ட பல 40 கிராமங்களில் கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை விளக்கியும், அதிமுக தேர்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் வாக்குச் சேகரித்தார்.

அவருடன் சூளகிரி ஒன்றிய செயலர் பி.எல்.தாயப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், கூட்டுறவு சங்கத் தலைவர் சந்திரப்பா, ஒன்றிய கவுன்சிலர் எஸ்.வி.எஸ். மாதேஷ், கிளைச் செயலர்கள் யுவராஜ், மஞ்சுநாத், முருகேசன் உள்ளிட்ட பலர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வேப்பனஅள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு :சவரத் தொழிலாளர்கள் சால்வை அணிவித்து ஆதரவு தெரிவிப்பு

மே 11,2016,

வேப்பனஅள்ளி தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.வி.எம். மது (எ) ஹேம்நாத் வேப்பனஅள்ளி, சூளகிரி ஒன்றியங்களில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார்.

சூளகிரி ஒன்றியம், கோனேரிப்பள்ளியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண்களிடம் அவர் வாக்குச் சேகரித்தார். மேலும், சூளகிரி ஒன்றியம் லாலிக்கல், வெங்கடேஷ் நகர், உத்தனப்பள்ளி, வேப்பனஅள்ளி ஒன்றியம் மகாராஜாகடை, நாரிப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் அவர் வாக்குச் சேகரித்தார்.

அப்போது, நாரிப்பள்ளியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சவரத் தொழிலாளர்கள் வேட்பாளர் ஏ.வி.எம். மது (எ) ஹேம்நாத்துக்கு சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த வாக்குச் சேகரிப்பின்போது சூளகிரி கிழக்கு ஒன்றியச் செயலர் தாயப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.வி.எஸ். மாதேஷ், வேப்பனஅள்ளி ஒன்றியத் தலைவர் முனியப்பன், துணைத் தலைவர் கே.வி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகள் சேகரித்தனர்.

சூளகிரி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

மே 10,2016,

வேப்பனஅள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மது (எ) ஹேம்நாத் திங்கள்கிழமை கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

சூளகிரி ஒன்றியம் பேரிகை, அத்திமுகம், சூளகிரி, மாரண்டஅள்ளி, ராயக்கோட்டை, மாரச்சந்திரம் உள்ளிட்ட 41 கிராமங்களில் அவர் வாக்குச் சேகரித்தார்.

அவருடன் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அசோக்குமார், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் முனியப்பன், துணைத் தலைவர் கே,வி.ராமமூர்த்தி, சூளகிரி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பிரபாகர், சூளகிரி ஒன்றியச் செயலர் தாயப்பன், கவுன்சிலர் எஸ்.வி.எஸ். மாதேஷ் உள்ளிட்ட பலர் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குச் சேகரித்தனர்.

வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

மே 06,2016,

வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏவிஎம் மது (எ) ஹேம்நாத் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

வேப்பனஹள்ளி தொகுதிக்கு உள்பட்ட வேப்பனஹள்ளி ஒன்றியம் கத்திப்பள்ளி, நாச்சிக்குப்பம், ராமச்சந்திரபுரம், ஜெய்நகர், எட்டிப்பள்ளி, வேப்பனப்பள்ளி, விருப்பச்சந்திரம் உள்ளிட்ட 37 கிராமங்களில் அவர் வாக்குச் சேகரித்தார்.

அவருடன் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அசோக்குமார், வேப்பனப்பள்ளி ஒன்றியச் செயலரும், ஒன்றியக்குழுத் தலைவருமான முனியப்பன், துணைத் தலைவர் கே.வி.ராமமூர்த்தி, சூளகிரி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பிரபாகரன் மற்றும் ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள் பலர் தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தனர்.

 

சூள​கிரி தொழில்​சா​லை​க​ளில் அதி​முக வேட்​பா​ளர் வாக்​குச் சேக​ரிப்பு

மே 05,2016,

வேப்​ப​ன​ஹள்ளி தொகுதி அதி​முக வேட்​பா​ளர் ஏவி​எம் மது ​(எ)​ ஹேம்​நாத் சூள​கிரி ஒன்​றி​யத்​தில் உள்ள தொழில்​சா​லை​க​ளில் புதன்​கி​ழமை வாக்​குச் சேக​ரித்​தார்.​

​ கிருஷ்​ண​கிரி மாவட்​டம்,​​ சூள​கிரி ஒன்​றி​யம் தியா​க​ரா​ச​னப்​பள்ளி,​​ சாம​னப்​பள்ளி,​​ உல்​லட்டி,​​ துப்​பு​கா​னப்​பள்ளி,​​ கொம்​மே​பள்ளி,​​ சான​மாவு,​​ பீர்​ஜேப்​பள்ளி உள்​ளிட்ட கிரா​மங்​க​ளில் தமி​ழக அர​சின் சாதனை விளக்க துண்​டுப் பிர​சு​ரங்​களை வழங்கி வாக்​குச் சேக​ரித்​தார்.​

​ அவ​ரு​டன் கிருஷ்​ண​கிரி தொகுதி எம்.பி.​ அசோக்​கு​மார்,​​ சூள​கிரி கிழக்கு ஒன்​றி​யச் செய​லர் தாயப்​பன்,​​ ஒசூர் முன்​னாள் நக​ர​மன்​றத் தலை​வர் பி.எம்.நஞ்​சுண்​ட​சாமி,​​ இலக்​கிய அணி ஒன்​றி​யச் செய​லர் செல்​வம்,​​ ஒன்​றி​யக் கவுன்​சி​லர் எஸ்​வி​எஸ்.​ மாதேஷ்,​​ ஊராட்சி மன்​றத் தலை​வர் ஷாமில்​பாஷா,​​ தேவ​ராஜ் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.​

வேப்பனஅள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.வி.எம். மது (எ) ஹேம்நாத்
கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

மே 03,2016,

வேப்பனஅள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.வி.எம். மது (எ) ஹேம்நாத் திங்கள்கிழமை கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

வேப்பனஅள்ளி தொகுதிக்கு உள்பட்ட தொபீமாண்டப்பள்ளி, குப்பச்சிப்பாறை, சிந்திகும்மனபள்ளி, சூரியனப்பள்ளி, அளேகுந்தி, தீர்த்தம், பதிமடுகு, சென்னசந்திரம் உள்ளிட்ட 38 கிராமங்களில் அவர் வாக்குச் சேகரித்தார்.

இதில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் முனிவெங்கடப்பன், வேப்பனஅள்ளி ஒன்றியச் செயலர் முனியப்பன், துணைத் தலைவர் ராமமூர்த்தி, சூளகிரி ஒன்றியச் செயலர் பி.எல்.தாயப்பன், கௌஸ்பாஷா, அவைத் தலைவர் எல்லப்பன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் முனுசாமி, ராஜகோபால், மகளிரணிச் செயலர் கல்பனா உள்ளிட்ட பலர் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தனர்.

சூளகிரி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

சூளகிரி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் ஏவிஎம் மது (எ) ஹேம்நாத் வாக்குச் சேகரித்தார்.

சூளகிரி ஒன்றியம் கொல்லப்பள்ளி, புன்னாகரம், உங்கட்டி, தாசன்புரம், தொக்ககோட்டா. செம்பட்டி, புக்ககாசரம், ராமச்சந்திரம், வெங்கடேசபுரம், அத்திமுகம், லட்சுமிபுரம், பலவனப்பள்ளி, அங்கேப்பள்ளி, ஒட்டர்பாளையம், தின்னூர், அலசப்பள்ளி, ஏ.செட்டிப்பள்ளி, திராடி, கொட்டாயூர், குடிசாதனப்பள்ளி, மலகலக்கி,சிகரப்பள்ளி, நெரிகம் உள்ளிட்ட 44 கிராமங்களில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி அதிமுக வேட்பாளர் ஏவிஎம் மது (எ) ஹேம்நாத் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

அவருடன் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அசோக்குமார், சூளகிரி கிழக்கு ஒன்றியச் செயலர் பி.எல்.தாயப்பன், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.வி.எஸ் மாதேஷ், சூளகிரி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாத்திமாபாபு வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 23,2016,

வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏவிஎம்.மது (எ) ஹேம்நாத்தை ஆதரித்து சின்னத்திரை செய்தி வாசிப்பாளர் பாத்திமாபாபு வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தார் .

அவர் வேப்பனஹள்ளி தொகுதியில் சிங்களூர், வேப்பனஹள்ளி ஆகிய பகுதிகளில் அதிமுக அரசின் சாதனையை விளக்கி வாக்கு சேகரித்தார். அவருடன் கிருஷ்ணகிரி அதிமுக மாவட்டச் செயலர் வி.கோவிந்தராஜ், வேப்பனஹள்ளி ஒன்றியக் குழுத் தலைவர் முனியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஏப்ரல் 22,2016,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமை வகித்து மாவட்டச் செயலர் வி.கோவிந்தராஜ் பேசியது: 5 முறை ஆட்சியில் இருந்த திமுக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி நலனுக்காக ஒரு கல்லூரியைத் தொடங்கியது உண்டா? அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் அரசு பொறியியல் கல்லூரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஒசூர் ஆகிய ஊர்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கெலமங்கலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்கி, மாணவர்கள் உயர்கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரியை தனி மாவட்டமாக உருவாக்கினார். பேரிகையில் உருது மேல்நிலைப் பள்ளியைக் கொண்டு வந்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நலத் திட்டங்களை வழங்கி வருகிறார். எனவே, அவர் அறிவித்துள்ள வேப்பனஹள்ளி தொகுதி வேட்பாளர் ஏவிஎம்.மது (எ) ஹேம்நாத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் மாவட்டச் செயலர்கள் தென்னரசு, காத்தரவராயன், முன்னாள் எம்.எல்.ஏ. முனிவெங்கடப்பன், வேப்பனப்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவர் முனியப்பன், துணைத் தலைவர் ராமமூர்த்தி, சூளகிரி கிழக்கு ஒன்றியச் செயலர் தாயப்பன், சூளகிரி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பி.எல்.தாயப்பன், கெலமங்கலம் ஒன்றியச் செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

 

வேப்பனப்பள்ளி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அ.தி.மு.க. வேட்பாளர் ஹேம்நாத் வாக்கு சேகரிப்புதிங்கள் ஏப்ரல் 18,2016,

வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.வி.எம்.மது என்கிற ஹேம்நாத், வேப்பனப்பள்ளி சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காலை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். குந்தாரப்பள்ளி, சாமந்தலை, ராமபுரம், தளவாய்ப்பள்ளி, பண்டப்பள்ளி, பல்லேரிப்பள்ளி, திப்பனப்பள்ளி, மாதேப்பள்ளி, தடத்தாரை, வேப்பனப்பள்ளி, பூதிமுட்லு, நாச்சிகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு சென்று அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.இந்த நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி ஒன்றிய குழு தலைவர் முனியப்பன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

 

வேப்பனஅள்ளி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்து  அதிமுக வேட்பாளர் ஹேம்நாத் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 10, 2016,

வேப்பனஅள்ளி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏவிஎம் மது(எ) ஹேம்நாத் சனிக்கிழமை சூளகிரியில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

“வேப்பனஅள்ளி தொகுதியில் திமுக எம்எல்ஏ டி.செங்குட்டுவன் எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. இதனால், தொகுதி வளர்ச்சி பெறவில்லை. முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக எனது தந்தையும், நானும் சூளகிரி ஒன்றியக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, மக்களுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செய்துள்ளோம். இதனால், வரும் தேர்தலில் அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலைக்கு வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என வாக்காளர்களிடம் பிரசாரம் செய்தார்.

ஒன்றியச் செயலாளர்கள் முனியப்பன், கிருஷ்ணன், தாயப்பன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பிரபாகர், வேப்பனஅள்ளி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- T.Senguttuvan DMK 71471

History of Krishnagiri District

Krishnagiri Reservoir Project (Krp) Dam

Krishnagiri district was formed as the 30th district separate district of Tamil Nadu on February 9, 2004. Krishnagiri district is divided into 2 divisions and 5 Taluks for the purpose of revenue administration. Revenue Divisional Officer heads the divisions and Tahsildar is the head of taluk level administration. Development administration in this district is coordinated by the panchayats (also called as blocks) for the rural areas.

In Tamil Nadu, e-Governance was first introduced at Krishnagiri district under the National e-Governance Project (NEGP) in revenue and social welfare departments on a pilot basis.[2][3] The district is one of the largest producers of Mangoes in India.[4] As of 2011, the district had a population of 1,879,809 with a sex-ratio of 958 females for every 1,000 males

The important crops of Krishnagiri District are Paddy, Maize, Ragi, Banana, Sugarcane, Cotton, Tamarind, Coconut, Mango, Groundnut, Vegetables and Flowers. The district has an excellent scope for agri business. Regional Agricultural Research Center of Tamil Nadu Agricultural University is functioning efficiently at Paiyur in Kaveripattinam union since 1973 AD. This center is functioning in 18.5 hec. Of land. It helps the peasants to develop and adopt the modern technique of cultivation. It has developed hybrid seeds by research which yields more tonnage and good quality.

Krishnagiri is one among the districts of Tamil Nadu, which with natural resources having 2,024 Sq. Kms of forest cover is its unique feature. The hill ranges of this district are called by the name ‘Melagiri’. The major type of forest seen here are Tropical, Deciduous forests, thorny shrubs and bamboo forest. Dense forest cover Denkanikottai region. The other region contains shrubs, hills and hillocks with bushes.

Krishnagiri Reservoir Project, Shoolagiri-Chinnar Reservoir, Thangarai Reservoir, Pambar Reservoir, Kelevarapalli Reservoir Project and Baarur Tank are the sources of irrigation for our district. By all these water reservoirs 18,965 Hec. of land is irrigated.

 

Krishnagiri District Map

Krishnagiri Area:

Area Sq. Km: 5,129

Krishnagiri Population:

Male: 960,232
Female: 919,577
Total: 1,879,809

Literacy Rates

Male: 78.72%
Female: 63.91%
Total: 71.46%