AIADMK Current News – Latest Breaking News on AIADMK

Check out the latest News! Get breaking news updates on the dynamic rule of our Puratchi Thalaivi Amma and the achievements of AIADMK party.

சர்க்கரை மானியத்தை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

சர்க்கரை மானியத்தை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஆகஸ்ட் 19 , 2017 ,சனிக்கிழமை,  சென்னை : சர்க்கரை மானிய தொகையை கிலோவுக்கு ரூ.28.50 ஆக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:- அந்யோதயா அன்ன யோஜனா பயனாளிகளுக்கு மட்டும் சர்க்கரை மானியம் கிலோ ரூ.18.50 என வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் ஒரு குடும்பத்துக்கு,

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்,வேதா நிலையம் அரசு நினைவிடமாக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்,வேதா நிலையம் அரசு நினைவிடமாக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 18 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக திறம்பட பணியாற்றி

உழைத்து வந்தவர்கள் நாங்கள், கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேச்சு

உழைத்து வந்தவர்கள் நாங்கள், கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேச்சு

ஆகஸ்ட் 17 , 2017 ,வியாழக்கிழமை, கடலூர் : கட்சியின் கீழ் மட்ட பொறுப்புகளில் இருந்து உழைத்து வந்தவர்கள் நாங்கள். கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை. இந்த இயக்கத்தையும் ஆட்சியையும் யாராலும் அசைக்கவும், ஆட்டவும் முடியாது என்று கடலூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்துக்கான விழா மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

விரைவில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு விழா நடக்கும் ; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

விரைவில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு விழா நடக்கும் ; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

ஆகஸ்ட் 16 , 2017 ,புதன்கிழமை, சென்னை : நல்ல நாள், நல்லமுகூார்த்தத்தில் அ.தி.மு.க இணைப்பு விழா நடக்கும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ''அமைச்சரிடம் அரசின் மீது கமல் விமர்சனம் வைத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்த அரசில் குழப்பத்தை விளைவித்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என பல்வேறு முயற்சிகளில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 15 , 2017 ,செவ்வாய்க்கிழமை,  சென்னை : நாட்டின் 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார். பின், அவரது உரையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் அவர் தேசியக்

தொண்டர் உணர்வை புரிந்து ஆட்சி நடத்துங்கள் : மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு

தொண்டர் உணர்வை புரிந்து ஆட்சி நடத்துங்கள் : மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு

ஆகஸ்ட் 15 , 2017 ,செவ்வாய்க்கிழமை, மதுரை : அட்டை கத்தியோடு யுத்தம் நடத்த வேண்டாம். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சி நடத்துங்கள் என மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார். மதுரை மாவட்டம், மேலூரில் அதிமுக (அம்மா அணி) சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பேசியதாவது:- எம்ஜிஆர் 1972-ம் ஆண்டில் என்ன காரணத்துக்காக அதிமுகவை தொடங்கினாரோ, அதில் கண்ணும்

இன்று 71-வது சுதந்திர தினவிழா : கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார்

இன்று 71-வது சுதந்திர தினவிழா : கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார்

ஆகஸ்ட் 15 , 2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை : 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார். நாடு முழுவதும் 71-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்கரை காமராசர் சாலையில் கோட்டைக்கு கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 8.30 மணிக்கு தேசிய