AIADMK Current News – Latest Breaking News on AIADMK

Check out the latest News! Get breaking news updates on the dynamic rule of our Puratchi Thalaivi Amma and the achievements of AIADMK party.

கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று சூழ்ச்சியை முறியடிப்பார்கள் : எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று சூழ்ச்சியை முறியடிப்பார்கள் : எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஆகஸ்ட் 10 , 2017 ,வியாழக்கிழமை, விழுப்புரம் : குழப்பத்தையும், சூழ்ச்சியையும் கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று முறியடிப்பார்கள் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கைப்பரப்பு செயலாளருமான தம்பிதுரை சிறப்புரையாற்றினார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில்

சென்னையில் கள்ளத்துப்பாக்கியுடன் தி.மு.க. பிரமுகர் கைது

சென்னையில் கள்ளத்துப்பாக்கியுடன் தி.மு.க. பிரமுகர் கைது

ஆகஸ்ட் 09 , 2017 ,புதன்கிழமை, சென்னை :  திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பிரபல ஓட்டல் அருகில் கள்ளத்துப்பாக்கியுடன் தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கள்ளத்துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.சென்னை போலீசாருடன் இணைந்து ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரும் கள்ளத்துப்பாக்கி கும்பலை கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுராந்தகத்தை சேர்ந்த குமார்

அ.தி.மு.க. தொண்டர் மகள் திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருள்களை வழங்கி ஓ.பன்னீர்செல்வம் உதவி

அ.தி.மு.க. தொண்டர் மகள் திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருள்களை வழங்கி ஓ.பன்னீர்செல்வம் உதவி

ஆகஸ்ட் 09 , 2017 ,புதன்கிழமை, சென்னை : திருச்சி விமான நிலையத்தில் கத்தியுடன் வந்ததால் கைதான அ.தி.மு.க. தொண்டர் சோலைராஜன் மகள் திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருள்களை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கி உதவி செய்து உள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றபோது  அவரை வழியனுப்ப வந்த தொண்டர்கள்  கூட்டத்தில் சோலைராஜன் என்பவர் கத்தியுடன் பிடிபட்டார். பாதுகாப்பு படைவீரர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க வந்ததாக

தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சிபெரும் வகையில் 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய சி.டி வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சிபெரும் வகையில் 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய சி.டி வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஆகஸ்ட் 09 , 2017 ,புதன்கிழமை, சென்னை : நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பயிற்சிபெற 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய சி.டி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சென்னை வட்டார பண்பாடு, தொன்மை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று  நடைபெற்றது.கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பள்ளிக்கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- அரசுத்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக பள்ளிக் கல்வித்துறை உள்ளது. மூன்று மாதத்துக்குள் கல்வித்

80 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது

80 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது

ஆகஸ்ட் 09 , 2017 ,புதன்கிழமை, தஞ்சை : தி.மு.க., முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி யின் மகன், அன்பழகன், 80 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளார்.  தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் முன்னாள் தி.மு.க அமைச்சர் கோ.சி. மணி இவர் திமுக அமைச்சரவையில் முக்கிய இலாக்காவை வைத்து இருந்தவர். இவருக்கு மதியழகன், இளங்கோவன், அன்பழகன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மதியழகன் இறந்து விட்டார்.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை

ஆகஸ்ட் 08 , 2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை :  விடுமுறை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். வரும் 14ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியும், 15ம் தேதி சுதந்திர தின விழாவும் கொண்டாடப்பட உள்ளது. இத்துடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களும் இணைந்துள்ளதால் 4 நாட்கள் தொடர்ந்து அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதனால்

விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

ஆகஸ்ட் 07 , 2017 , திங்கட்கிழமை,  சென்னை : விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையுடன் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் 10-வது வார்டு திமுக செயலர் ஜி.ராஜேஷ் தலைமையில் 250 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் கே.பழனிசாமி வீட்டில் நேற்று காலை நடந்தது. அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர்பழனிசாமி