Senthamangalam (ST)

Senthamangalam (ST) (State Assembly Constituency)

Senthamangalam (ST) is a state assembly constituency in Tamil Nadu, India newly formed after constituency delimitations 2008. It is included in the Namakkal parliamentary constituency.

Total Voters:

Male: 1,14,890
Female: 1,18,018
Transgender: 8
Total: 2,32,916

 

 

கொல்லிமலையை சுற்றி பார்க்க மினி பேருந்து வசதி: அதிமுக வேட்பாளர் சந்திரசேகரன் வாக்குறுதி

மே 15,2016,

கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க மினி பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.சந்திரசேகரன் தெரிவித்தார்.

கொல்லிமலை ஒன்றியம் குண்டூர்நாடு ஊராட்சி, நாமக்கல் ஒன்றியத்தில் உள்ள வசந்தபுரம் ஊராட்சியில் சின்னவேப்பநத்தம், பெரியவேப்பநத்தம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த அவர் பேசியது: முதல்வரின் சிறப்பு திட்டமான அம்மா திட்ட முகாம் குறித்து பொதுமக்கள் அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் வாகனத்தில் அதுகுறித்து தகவல் தெரிவிக்க புதிதாக வாகனம் ஒன்று வாங்கி தொகுதி முழுவதும் செயல்பட ஏற்பாடு செய்வேன். கொல்லிமலை பகுதியில் இதுவரை 10,400 பேருக்கு சாதிசான்றிதழ் வாங்கி கொடுத்துள்ளேன். மேலும் அந்தந்த பகுதியில் அவர்களுக்கு சாதி சான்றிதழ் எளிதாக கிடைக்கும் வகையில் அதிகாரிகளை அங்கேயே அழைத்து சிறப்பு முகாம்களை நடத்தி சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வேன்.

சேந்தமங்கலத்தில் அரசு கலைக்கல்லூரி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அதேபோல சேந்தமங்கலம் கொல்லிமலை அடிவார பகுதியில் மா விளைச்சல் அதிகமாக உள்ளது. அந்த பழங்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு ஏற்படுத்துவேன். கொல்லிமலைக்கு மாற்றுப்பாதை வழியான முள்ளுக்குறிச்சி வழியாக அறப்பளீஸ்வரர் கோவில்வரை மேலும் ஒரு கூடுதல் பேருந்து இயக்க ஏற்பாடு செய்வேன்.

கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை, மாசில்லா அருவி, நம்அருவி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, எட்டுக்கையம்மன் கோவில், சந்தன அருவி போன்ற பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் சற்று சிரமப்பட்டு வருகின்றனர். அதை போக்கும் விதமாக மினி பேருந்து வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

அதிமுக வேட்பாளர் சி.சந்திரசேகரனை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து வாக்கு சேகரிப்பு

மே 06,2016,

அடுத்த முதல்வர் எனக் கூறும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அவரவர் போட்டியிடும் தொகுதியிலேயே வெற்றி பெற முடியாது என நடிகர் சிங்கமுத்து தெரிவித்தார்.

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.சந்திரசேகரனை ஆதரித்து கொல்லிமலையில் பல்வேறு மலைக் கிராமங்களில் நடிகர் சிங்கமுத்து வியாழக்கிழமை திறந்த வேனில் நின்றபடி வாக்குச் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியது: கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா கொண்டு வந்த நலத் திட்டங்களால் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, குழந்தை பராமரிப்பு பொருள்கள் என மக்களின் தேவைகளை அறிந்து ஜெயலலிதா நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வித் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி கல்வியில் தமிழக மாணவர்கள் முன்னேற வழிவகுத்தவர் ஜெயலலிதா.

தமிழகம் அமைதிப் பூங்காவாகவும், பொற்கால ஆட்சி தொடரவும், இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வேட்பாளர் சந்திரசேகரன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பிரதிநிதியாக இருந்து பணியாற்றி வருகிறார். இவர் வெற்றி பெற்றால் எந்த நேரத்திலும் அணுகிக் குறைகளைத் தெரிவிக்கலாம். அவரே மக்களைத் தேடி வந்து அரசு திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவார் என்றார்.

அதிமுக வேட்பாளர் சி.சந்திரசேகரன் சீராப்பள்ளி பேரூராட்சி பகுதிகளில் வாக்குச் சேகரிப்பு

மே 03,2016,

சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.சந்திரசேகரன் சீராப்பள்ளி பேரூராட்சி பகுதிகளில் திங்கள் கிழமை வாக்குச் சேகரித்தார்.

இப் பேரூராட்சி பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று அவர் வாக்குச் சேகரித்தார். அவருடன் நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். அப்போது, முதல்வர் வெளியிடப்போகும் தேர்தல் அறிக்கையை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் எதிர்பார்த்து அச்சத்தில் உள்ளனர்.

அதிமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு பல கட்சிகள் தேர்தல் களத்தில் காணாமல் போகும் என்றார். முன்னாள் எம்எல்ஏ கே.கலாவதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 28,2016,

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.சந்திரசேகரன் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தார்.

கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பேரம்மாவூர், வடுகப்பட்டி, தொட்டியத்தொரு, கல்குறிச்சி, வெள்ளாளபட்டி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தெருத்தெருவாக நடந்து சென்று வாக்குச் சேகரித்தார். பேரம்மாவூரில் பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்குச் சேகரித்தார்.

கிராமப்புற மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு, குடியிருப்பு என அடிப்படை தேவைகளை கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். ஏழை மக்களின் துயர் துடைக்கும் இந்த ஆட்சி தொடர தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஒன்றியச் செயலர் ஜி.பி.வரதராஜ், பேரவைச் செயலர் ஆர்.ஆர்.பி.சுரேஷ். இளைஞரணிச் செயலர் சந்திரசேகரன், அவைத் தலைவர் சுப்ரமணி, பேரூர் செயலர்கள் பழனிச்சாமி, ராஜேந்திரன், ஊராட்சித் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் வலையபட்டி பகுதியில் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 27,2016,

சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.சந்திரசேகரன் வலையபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார்.

 நாமக்கல் – திருச்சி சாலையில் வலையப்பட்டி, என்.புதுப்பட்டி, ராமனுடையான்பட்டி, மேலப்பட்டி, ஜங்களாபுரம், வடக்கிமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று வாக்குச் சேகரித்தார்.

 அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரவும், கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும்  தன்னை ஆதரிக்குமாறு வாக்காளர்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்குச் சேகரித்தார்.

 

சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 26,2016,

சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.சந்திரசேகரன் எருமபட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

எருமபட்டி பேரூராட்சி, 5 சாலை, பழனி நகர், கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று வாக்குச் சேகரித்தார். ஜெயலலிதா அரசின் சாதனை திட்டங்கள் தொடரவும், ஏழை மக்களின் வாழ்க்கை மேம்படவும் அதிமுக வேட்பாளரான தன்னை ஆதரிக்குமாறு துண்டு பிரசுரம் வழங்கி கேட்டுக் கொண்டார். இதில் எருமபட்டி பேரூராட்சித் தலைவர் பாலு என்ற பாலுசாமி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜெகதீசன், ஒன்றியச் செயலர் வரதராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

 

அதிமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வேட்பாளர் சி.சந்திரசேகரன் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 24,2016,

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.சந்திரசேகரன் காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட ராசாகவுண்டன்பட்டி, தொட்டியபட்டி, நஞ்சுண்டாபுரம், காளப்பநாயக்கன்பட்டி பேருந்து நிலையம், கோபால் கடை, புதூர், இச்சிக்குட்டை, ஆத்துகுட்டிபள்ளம், ரெட்டி காலனி, தேர் புளிய மரம், பாலமுனியப்பன் கோயில், துத்திக்குளம் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் வீதிவீதியாக நடந்து சென்று அதிமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வேட்பாளர் சி.சந்திரசேகரன் வாக்குச் சேகரித்தார். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர்.

சேந்தமங்கலம் ஒன்றியச் செயலர் ஜி.பி.வரதராஜன், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலர் பழனிச்சாமி, ஒன்றிய இளைஞரணிச் செயலர் சந்திரசேகர், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், ஒன்றிய மகளிர் அணிச் செயலர் வள்ளியம்மாள் உள்ளிட்ட அதிமுகவினர் சந்திரசேகரனுடன் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

சேந்தமங்கலம் தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

சேந்தமங்கலம்-ராசிபுரம் மெயின் ரோடு சினிமா தியேட்டர் அருகில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவில் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரசேகரன், சாந்தி ராஜமாணிக்கம் எம்.எல்.ஏ., மாவட்ட இணை செயலாளர் கலாவதி, சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜி.பி.வருதராஜன், பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் ரவி, பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், துணை தலைவர் ரமேஷ், ஒன்றிய பேரவை செயலாளர் ஆர்.ஆர்.பி.சுரேஷ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Santhi.R DMDK 76637

History of Namakkal District

Namakkal Fort

Namakkal is a historic town with reference back to at least 7th century. The name Namakkal derives from Namagiri, which is the name of the single rock formation at the center of the town.Two cave temples at Namakkal were called as Adiyendra Visnugrha (Ranganatha swamy Temple) and Adiyanavaya Visnugrha (Narasimha swamy Temple).These Rock cut shrines were built by King Gunaseela of Adhiyaman clan descendant. Because of his marriage relations with Pallavas the temples were built of Pallava Architectural style during 7th century. Generally, Namakkal is considered to be a Vaishnava Kshetram, and there is no Shiva temple in the town until a few years ago. The rock is enormous – 65 meters high and more than a kilometre in circumference. Over this massive rock, is a fort. The fort over the rock were built by Ramachandra Nayakar, a small king who ruled Namakkal during 16th century. It is believed that Tippu Sultan hide himself in this fort for some time to escape the British. The fort was not built by Tippu Sultan but he occupied it for a brief period of time.Later the fort was captured by British. The front side of the hill is called Thiru. Vi. Ka. Paarai and used by taxis as their stand. Mahatma Gandhi held a public meeting in 1933 in Namakkal under the slope of the Namakkal rock. It is one of the few places in Tamil Nadu, that has not been seriously affected by famine and war.

It is a part of Kongu Nadu (Kongu Desam) region of Tamil Nadu which was hotly contested and coveted by both the ancient Pallavas and the Pandyas. Namakkal was in the hands of Atiakula King called Gunasila who has marriage with Pallava King. Later the taluk was overrun by the Cholas in the Kongu Mandalam .After the struggle between the Cheras, Cholas and Pandiyas, the Hoysalas rose to power and had control till the 14th century followed by Vijayanagar Kings till 1565 AD. Then the Madurai Nayakas came to power in 1623 AD. Two of the Polygons of Thirumalai Nayak namely, Ramachandra Nayaka and Gatti Mudaliars ruled the Salem area. The Namakkal Fort is reported to have been built by Ramachandra Nayakas. After about 1625 AD, the area came successively under the rule of Muslim Sultans of Bijapur and Golkonda Mysore kings and then the Marathas, when about the year 1750 AD. Hyder Ali came to power. During this period, it was a history of power struggle between Hyder Ali and later Tippu, with the British. The Rock Fort in Namakkal is a special feature of the Town. The Fort covers an area of one and half acres of flat surface and is accessible from South-West by a flight of narrow steps. Namakkal was held by Killdhar (Caption) on Hyder Ali until it was captured by British in 1768. For a brief period during late 18th and early 19th century Namakkal was under Tiruchirappalli district of British Rule. Later Namakkal was transferred back to Salem District.

Namakkal is declared Eco-Friendly town, know as an Industrial hub and one of the pilgrimage centres in down south. In the heart of the town a hillock of single rock and a fort on the top acknowledged as a National Monument. the hillock known as Namagiri lend its name to the town. Namakkal is an eminent town right from Himalaya and down to Kanyakumari because of Kavingnar Ramalingam Pillai, the poet and enthusiastic devotee of Namagiriamman, Sri Narahari Aachar and the Mathematic wizard Ramanujar, are born and brought up from here. The hillock also known as Sri Salagramam means the image of Maha Vishnu or a divine stone.

 

Namakkal District MapNamakkal Area:

Area Sq. Km: 3.420

Namakkal Population:

Male: 869,280
Female: 857,321
Total: 1,726,601

Literacy Rates

Male: 82.64 %
Female: 66.57 %
Total: 74.63 %