Kunnam

Kunnam is a state assembly constituency in Tamil Nadu, India newly formed after constituency delimitations 2008. It is included in the Chidambaram parliamentary constituency.

Total Voters:

Male: 1, 26,996
Female: 1, 27,889
Transgender: 11
Total: 2, 54,896

 

கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை: குன்னம் அதிமுக வேட்பாளர் பேச்சு

மே 09,2016,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆதனூர், திம்மூர், கொட்டரை, இலுப்பைக்குடி, குரும்பாபாளையம், மதுராகுடிகாடு, சீராநத்தம், தொண்டப்பாடி, சடைக்கன்பட்டி, அழகிரிபாளையம், மருதையான்கோயில், ஜமீன்பேரையூர் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் பேசியது:

ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளின் கல்வித் தரம் மேம்பட வேப்பூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், குன்னத்திலிருந்து வேப்பூர் வரை தேசிய நெடுஞ்சாலைக்கு நிகரான சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இத்தொகுதியில் என்னை வெற்றிபெறச் செய்தால் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். பிரசாரத்தின்போது, சிதம்பரம் எம்.பி. மா. சந்திரகாசி, ஒன்றிய செயலர் என்.கே. கர்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்:குன்னம் அதிமுக வேட்பாளர் உறுதி

மே 03,2016,

தன்னை வெற்றிப் பெற செய்தால், தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்றார் அதிமுக வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரன்.

பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குன்னம் தொகுதிக்குள்பட்ட கவுல்பாளையம், சித்தளி, பேரளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்த அவர் மேலும் பேசியது:

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டதன் மூலம், இப்பகுதியை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சாலை வசதிகள், கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழக மக்களின் நலன்கருதி முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதன்மூலம், அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கு முதல்வர் ஜெயலலிதா சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மீண்டும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான நல்லாட்சி மலர எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நான் வெற்றி பெற்றால், ஒவ்வொரு கிராமத்திலும் தேவையான அடிப்படை பணிகளை ஓராண்டுக்குள் செயல்படுத்துவேன் என்றார் அவர். பிரசாரத்தின்போது, கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

குன்னம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 27,2016,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிறுகுடல், பச்சையம்மன் நகர், கீழப்புலியூர், கே.புதூர், எஸ். குடிகாடு, முருக்கன்குடி, நமையூர், பொன்னகரம், நல்லூர், மிளாகநத்தம், பெருமத்தூர், வைத்தியநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் பேசியது:

குன்னம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வேப்பூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. கீழப்புலியூர், பச்சையம்மன் நகர் ஆகியப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். குடிநீர் வசதியில்லாத கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் அ. அருணாசலம், மாவட்ட ஊராட்சித் தலைவர் சகுந்தலா கோவிந்தன் உள்ளிட்ட உடன் சென்றனர்.

அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்குன்னம், ஏப்ரல்

குன்னம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மேலமாத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரனை அறிமுகப்படுத்தி வைத்து அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார். கூட்டத்தில் எம்.பிக்கள் சந்திரகாசி, மருதராஜா, தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் செந்துறை ஒன்றிய செயலாளர் சுரேஷ், லப்பைக்குடிக்காடு பேரூர் செயலாளர் அப்துல்பாரூக் மற்றும், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார். முடிவில் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் நன்றி கூறினார்.

 

குன்னம் தொகுதி அ.தி.மு.க.தேர்தல் அலுவலகம் திறப்பு: வேட்பாளர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பு

kunnam-Assembly-constituencies-Digg-Candidates-opened_SECVPFஞாயிறு, ஏப்ரல் 10,2016,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக ராமச்சந்திரன் அறிவி¢க்கப்பட்டார். அவர் நேற்று ஆலத்தூர் ஒன்றிய பகுதியான மேலமாத்தூர் கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். இதில் சந்திரகாசி எம்.பி., முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந¢திரன், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் கர்ணன், வேப்பூர் கிருஷ்ணசாமி, செந்துறை சுரேஷ் உள்பட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக மேலமாத்தூரில் குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை சந்திரகாசி எம்.பி. திறந்து வைத்தார்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Sivasankar.S.S DMK 81723

History of Perambalur District

Ranjankudi Fort

Perambalur is a municipality town in the state of Tamil Nadu. It is the administrative headquarters of Perambalur district and Perambalur Taluk (Sub-District). Perambalur is the central town of Tamil Nadu. Perambalur district is bounded on the North by Cuddalore and Salem, South by Trichy, East by Ariyalur, West by Trichy and Salem. There are a set of 11th century Buddhists images around the villages of Perambalur called Perambalur Buddhas.

Once there was a power struggle between Hyder Ali and later Thippu Sultan with the British. After the death of Thippu Sultan, the British took the civil and military Administration of the Carnatic in 1801. Thus Tiruchirappalli came in to the hands of the English and the District was formed in 1801. In 1995 Tiruchirappalli was trifurcated and the new Perambalur and Karur districts were formed.

In the Government Order G.O (Ms) NO. 683 Dated. 19.11.2007 Government passed orders that Perambalur District be reorganised and bifurcated again into two districts Perambalur and Ariyalur, out of which Perambalur district with Headquarters at Perambalur consists of one Revenue Division of Perambalur and three Taluks of Perambalur, Kunnam and Veppanthattai. It is bounded on the North by Cuddalore and Salem Districts, South by Tiruchirappalli, East by Ariyalur District, West by Tiruchirappalli and Salem Districts.

Now Perambalur has many schools, polytechnic colleges, 9 engineering colleges, one private medical college with multi speciality hospital and one government medical college. There are some Arts and science colleges also situated in & around perambalur. Perambalur has a central library with internet facilities.

 

Perambalur District Map

Perambalur Area:

Area Sq. Km: 1,756

Perambalur Population:

Male: 282,157
Female: 283,066
Total: 565,223

Literacy Rates

Male: 82.87%
Female: 65.90%
Total: 74.32%