Perambalur(SC)

Achievements of MLA Mr. Tamizhselvan R

Giving Away Assistance to Beneficiary

Distribution of Free Laptops

Distribution of Free Sarees and Dhoties

Free Mixie Grinder & Fan Distribution

Providing Pulse Polio Drops

Distribution of Free Sewing Machines

 

MLA Mr. Tamizhselvan R

 

 

MLA Mr. Tamizhselvan R

 

 

 

Father Name Raju
Party AIADMK
Date of Birth 9th July 1973
Place of Birth Perambalur
Marital Status Married
Education B.A.
Address B1D, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
No.54, 3rd Ward, Elambalur Post, Perambalur Taluk and District-621 212.
Telephone 044-25383789
+91 9842244917
E-mail mlaperambalur@tn.gov.in
Facebook https://www.facebook.com/profile.php?id=100006695626232

Perambalur Constituency (State Assembly Constituency)

Perambalur is a state assembly constituency in Tamil Nadu. It is a Scheduled Caste reserved constituency.

Total Voters:

Male: 1,35,127
Female: 1,40,792
Transgender: 13
Total: 2,75,932

 

பெரம்பலூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 12,2016,

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் சட்டப்பேரவை (தனி) தொகுதிக்குள்பட்ட எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, எளம்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்த தமிழ்ச்செல்வன் பேசியது:

கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எளம்பலூர் அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை தொடங்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் துணை சுகாதார மையம் மற்றும் தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க கால்நடை கிளை மருந்தகம், சமுதாயக்கூடம் அமைக்கப்படும். இந்த கிராம மக்களின் வசதிக்காக கூடுதலாக போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். அனைத்து பகுதிகளுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் விநியோகம் விரிவாக்கப்படும். மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.

பிரசாரத்தின்போது, மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, ஒன்றியக் குழுத் தலைவர் து. ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இரா. வடிவேல், எசனை பன்னீர்செல்வம், பாடாலூர் ஊராட்சித் தலைவர் அ. வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

இரூரில் வட்டார மருத்துவமனை அமைக்க நடவடிக்கை:பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் உறுதி

மே 11,2016,

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இரூரில் வட்டார மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன்.

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர், இரூர், ஆலத்தூர், மருதடி, நாரணமங்கலம் ஆகிய கிராமங்களில் வீடுவீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வன் பேசியது:

அதிமுக ஆட்சியில் பாடாலூரில் பால் பண்ணை அமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. குன்னம் வட்டத்திலிருந்து, ஆலத்தூர் வட்டம் தனியாக பிரிக்கப்பட்டு அதற்காக ரூ. 1.50 கோடியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக அரசு ஐ.டி.ஐ. கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 100 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இரூர் ஊராட்சியில் கால்நடை மருந்தகம், துணை சுகாதார நிலையம் உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இரூரில் வட்டார மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், கருவூல அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரூர் ஆஞ்சநேயர் மலையைச் சுற்றி தார்ச் சாலை அமைக்கப்படும்.

இரூர்- ஆலத்தூர் குறுக்குவழிச் சாலை, இரூர் தெரணி சாலை ஆகியவை தார்ச் சாலையாக மாற்றப்படும். ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றார் அவர். பிரசாரத்தின்போது, ஒன்றியச் செயலர் என்.கே. கர்ணன், ஒன்றியக் குழுத் தலைவர் ரா. வெண்ணிலா, ஊராட்சித் தலைவர் ஸ்டாலின், முன்னாள் ஊராட்சித் தலைவர் செ. வீரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பெரம்பலூரில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 10,2016,

பெரம்பலூர் சட்டப்பேரவை (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் திங்கள்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 8, 9, 10 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரித்த வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:

அதிமுக ஆட்சியின் நலத் திட்டங்களால் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், மருதையாற்றின் குறுக்கே நீர்த் தேக்கம் அமைக்கும் திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணி மற்றும் விரிவான ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த நீர்த் தேக்கம் கட்டி முடிக்கப்படும்.ஆறுகள், ஏரிகள், குளங்கள் தூர்வாருதல் மற்றும் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம் அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தேவைக்கேற்ப புதிய வட்டங்கள் மற்றும் வருவாய் கோட்டங்கள் ஏற்படுத்தப்படும். மக்களைத் தேடி அரசு என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா திட்டம் மற்றும் அம்மா சேவை மையம் ஆகியவை செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். எனவே, நலத் திட்டங்கள் தொடர அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். எனவே, மீண்டும் எனக்கு பொதுமக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர். பிரசாரத்தின்போது, முன்னாள் மாவட்டச் செயலர் மா. ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், ஒன்றியக்குழுத் தலைவர் து. ஜெயக்குமார், நகரச்செயலர் ஆர். பூபதி, கட்சி நிர்வாகிகள் செல்வக்குமார், அன்பழகன், சங்கு சரவணன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் எம். வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

வேப்பந்தட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 09,2016,

வாலிகண்டபுரம், தம்பை, வண்ணாரம்பூண்டி, வெங்கனூர், உடும்பியம், கள்ளப்பட்டி, பெரியம்மாபாளையம், தழுதாழை, வெங்கலம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மூலம், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். 5 ஆண்டுகளில் பெரம்பலூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியைக் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

அதிமுக தேர்தல் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் வழங்கப்படும். தரிசு நிலங்கள் சீர்திருத்தப்பட்டு, நீராதார அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பயிர் சாகுபடி செய்ய வழிவகை காணப்படும்.

நீடித்த, நிலையான, கரும்பு உற்பத்தித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர் சாகுபடிக்கு தரமான இடுபொருள்கள் உரிய நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பெற தமிழகத்தில் மீண்டும் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். எனவே, எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர். பிரசாரத்தின்போது. வேப்பந்தட்டை ஒன்றியச் செயலர் சிவப்பிரகாசம், வேப்பந்தட்டை ஒன்றியக்குழுத் தலைவர் க. ஜெயலட்சுமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலர் எம். வீரபாண்டியன், அகில இந்திய சமத்துவக் கட்சி மாவட்டத் தலைவர் சி.எம். சின்னசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 08,2016,

பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகளுக்கு உள்பட்ட மேலக்குணங்குடி, பாரதிநகர், மேற்கு நம்தைவெளி, பூபதி குட்டை, சின்ன வெண்மணி எம்ஜிஆர் சிலை, காந்தி நகர், மாரியம்மன் கோயில், பூலாம்பாடி புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து அவர் பேசியது: பூலாம்பாடி 7-வது வார்டில் ரூ. 2 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 2 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ரூ. 1 லட்சத்தில் கடம்பூர் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 1.50 லட்சத்தில் கரிகாலன் தெருவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. காந்திநகரில் ரூ. 6.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 2.10 கோடியில் புதிய கிணறுகள், மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ. 45 லட்சத்தில் குரங்கு தோப்பு சாலையில் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 15 லட்சத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 85 சதவீதப் பணிகளை நிறைவேற்றியுள்ளேன். மீதமுள்ள பணிகளையும், இதுபோன்ற பல்வேறு திட்டங்களையும் பெற எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

பிரசாரத்தின்போது, ஒன்றியச் செயலர் சிவபிரகாஷம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் என். சேகர், மகளிரணி நிர்வாகி லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 07,2016,

பெரம்பலூர் சட்டப்பேரவை (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட, ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள கண்ணப்பாடி, நத்தக்காடு, தேனூர், தொட்டியப்பட்டி, மாவிலிங்கை, கூட்டனூர், நாட்டார்மங்கலம், மலையடிவாரம், செட்டிக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் ஆலத்தூர் ஒன்றியத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், இப்பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு ரூ. 1 கோடியில் செட்டிக்குளத்தில் சின்ன வெங்காய குளிர்பதன கிடங்கு தொடங்கப்பட்டுள்ளது. ஆலத்தூர் வட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் 125 மாணவர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையத்துக்கு விடுதியுடன் கூடிய வகுப்பறை, பனிமனை மற்றும் அலுவலகக் கட்டடங்களுக்காக ரூ. 9.8 கோடி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாடாலூரில் ரூ. 48 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பால் குளிர்வு மையத்தில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படும். நாளடைவில் 4 லட்சம் லிட்டர் அளவிற்கு திறன் உயர்த்தப்படும்.இதேபோல, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, விடுபட்ட வளர்ச்சிப் பணிகளை தொடர, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய மீண்டும் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.

பிரசாரத்தின்போது, ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவர் ரா. வெண்ணிலா, ஒன்றிய செயலர் என்.கே. கர்ணன், பாடாலூர் ஊராட்சித் தலைவர் அ. வேல்முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

பெரம்பலூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 06,2016,

பெரம்பலூர் சட்டப்பேரவை (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொகுதிக்குள்பட்ட ரெங்கநாதபுரம், கீழக்கணவாய், தம்பிரான்பட்டி, புதுவேலூர், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி, களரம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம், சரவணபுரம், மேலப்புலியூர், நாவலூர், திருப்பெயர், ஆலம்பாடி, சொக்கநாதபுரம், செஞ்சேரி ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை ரூ. 3 கோடியில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. எளம்பலூர் மற்றும் எசனை கிராமங்களில் அரசு மருத்துவமனைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. ரெங்கநாதபுரம், செங்குணம், பொம்மனப்பாடி மற்றும் சோமண்டாபுதூர் ஆகிய கிராமங்களில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்பாடி கிராமத்தில் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடமும், குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளன.நெடுவாசல், புதுநடுவலூர், அம்மாபாளையம், திருப்பெயர் ஆகிய கிராமங்களில் உயர்நிலை பாலத்துடன் கூடிய தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர்பந்தல் முதல் பெரம்பலூர் வரை புறவழிச்சாலையும், தேசிய நெடுஞ்சாலை முதல் செங்குணம் வரை புதிய தார்ச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அதிமுகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர். ஒன்றியக்குழுத் தலைவர் து. ஜெயக்குமார், கட்சி நிர்வாகிகள் செல்வக்குமார், எம். ராணி, கு. லட்சுமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

“அம்மா உணவகத்தால் ஏழை, எளிய மக்களுக்குப் பயன் : அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன்

மே 05,2016,

அம்மா உணவகத்தால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன்.

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குரும்பலூர் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.

குரும்பலூர் பேரூராட்சி, பாளையம், குரும்பலூர், மேட்டாங்காடு, ஈச்சம்பட்டி, கே.புதூர், மூலக்காடு, புது ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் கூறியது:

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு தரப்பு மக்களுக்கு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. விலையில்லா மிக்ஸி, மின் விசிறி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கியுள்ளார். பெரம்பலூர் தொகுதியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களில் விலை குறைந்த உணவுப் பொருள்கள் விற்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பயனடைந்துள்ளனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப் பை, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கி வருகிறார்.

ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த தங்கம், இப்போது தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. குரும்பலூர் பேரூராட்சியில் வசித்து வருவோருக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, மின்விளக்கு வசதிகள், குரும்பலூர் பேரூராட்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை பெற, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.

பிரசாரத்தின்போது, குரும்பலூர் நகரச் செயலர் வி. செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் எம். வீரபாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர் து. ஜெயக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், வார்டு செயலர்கள் செல்வராஜ், சுப்ரமணி, சீதா, கணேசன், செல்வராஜ், மருதை, அழகேசன், கிளைச் செயலர் ராமையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

வேப்பந்தட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

பெரம்பலூர் சட்டப்பேரவை (தனி) தொகுதிக்குள்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, என்.புதூர், சாத்தனவாடி, மேட்டுப்பாளையம், வாலிகண்டபுரம், வல்லாபுரம், பிரம்மதேசம், வி.ஆர்.எஸ்.புரம், அ. குடிக்காடு, அனுக்கூர், சிறுவயலூர், அழகாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களிடம் வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:

மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் முதல்வர் ஜெயலலிதா சிந்தித்து செயல்பட்டு வருகிறார். முதல்வர் ஜெயலலிதா எப்போதும் மக்களுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகிறார். காவிரியில் தமிழக உரிமையை நீதிமன்றம் மூலம் நிலைநாட்டியது, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தியது, காலணி முதல் கணினி வரை இலவசமாக அளித்தது, திருமணத்துக்கு உதவித்தொகை, தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு, மாடு என அதிமுக அரசு திட்டங்களால் பயனடையாதவர்களே இல்லை என்ற நிலையை அதிமுக தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது.

இதுபோன்ற திட்டங்கள் தொடரவும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் அதிமுக தலைமையிலான ஆட்சி தொடரவும் எனக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரசாரத்தின்போது, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் என். சேகர், மாநில மீனவரணி செயலர் தேவராஜன், மகளிரணி நிர்வாகிகள் ராணி, லட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 03,2016,

பெரம்பலூர் சட்டப்பேரவை (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவையூர், ரஞ்சன்குடிகோட்டை, மங்கலமேடு, எறையூர், பேரையூர், தைக்கால், வள்ளியூர், மரவநத்தம், பிம்பலூர், இனாம் அகரம், திருவாளந்துறை, பசும்பலூர், வி. களத்தூர் ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து அவர் பேசியது:கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், விலையில்லா வெள்ளாடுகள், கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதன் மூலம், உலகத்தில் நிகழும் அன்றாட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு கல்வித்திறனை அதிகரித்து வருகின்றனர். வேப்பந்தட்டையில் ஊராட்சி ஒன்றியத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமங்கள்தோறும் தார் மற்றும் மெட்டல் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து பெற வேண்டுமானால் அதிமுக சார்பில் போட்டியிடும் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.

பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வனுக்கு கிராமப்புற பெண்கள் ஆரத்தி எடுத்து, இனிப்பு வழங்கினர். பிரசாரத்தின்போது, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் என். சேகர், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் எம். வீரபாண்டியன், மகளிரணி நிர்வாகிகள் ராணி, லட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகர் தியாகு பிரசாரம்

ஏப்ரல் 27, 2016,

கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மாணவர்களின் கல்வித் தரம் மேம்பட்டுள்ளது என்றார் திரைப்பட நடிகர் தியாகு.

பெரம்பலூர் சட்டப்பேரவை (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வனை ஆதரித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை,  துறைமங்கலம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்து அவர் மேலும் பேசியது:

நான் கடந்த 25 ஆண்டுகளாக திமுகவில் இருந்தேன். கருணாநிதி எனக்காக ஒன்றும் செய்யவில்லை. நடிகர்களை நம்பித்தான் திமுக வளர்ந்தது.பெண்களின் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளித்து ஆட்சி செய்பவர் முதல்வர் ஜெயலலிதா. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களின் நலனுக்காக விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகள், மாணவர்களுக்கு மடிக் கணினிகள், சீருடை, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டங்களை தொடர்ந்து பெற வேண்டுமானால், ஜெயலலிதாவை முதல்வராக்க, இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் நடிகர் தியாகு.

நகர்மன்றத் தலைவர் சி.ரமேஷ், தொகுதிச் செயலர் ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் மா. வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் : வேட்பாளர் தமிழ்செல்வனை அறிமுகப்படுத்தி வைத்து அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சு

அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் : வேட்பாளர் தமிழ்செல்வனை அறிமுகப்படுத்தி வைத்து அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சுஏப்ரல் 18, 2016,

பெரம்பலூரில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் கட்சி செயல் வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் வேட்பாளர் தமிழ்செல்வனை அறிமுகப்படுத்தி வைத்து அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார். மாவட்ட செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன், பாராளுமன்ற  உறுப்பினர்கள் சந்திரகாசி, மருதராஜா, முன்னாள் மாவட்ட  செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பேசினர். இதில் மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் மற்றும் கிளை பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து வாக்கு சேகரிப்பு

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து வாக்கு சேகரிக்கும் பணியினை தொடங்கினர்.

வாக்கு சேகரிக்கும் பணி

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக இரா. தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று கவுல்பாளையம் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, அரசின் திட்டங்கள், நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். இதில் மருதராஜா எம்.பி., நகர்மன்ற தலைவர் ரமேஷ், மாவட்ட அணி நிர்வாகிகள் ராஜாராம், செல்வக்குமார், கட்சி பிரமுகர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து இரா. தமிழ்ச்செல்வன் இனிப்பு வழங்கினார்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Tamizhselvan.R AIADMK 98497
Thirteenth 2006-2011 Rajkumar.M DMK 60478
Twelfth 2001-06 Rajarethinam.P ADMK 67074
Eleventh 1996-01 Devarajan, M. DMK 64918
Tenth 1991-96 Sezhian T. ADK 76202
Ninth 1989-91 R. Pitchaimuthu CPI 34829
Eighth 1984-89 K. Nallamuthu INC 57021
Seventh 1980-84 Raju, J. S. DMK 28680
Sixth 1977-80 S.V. Ramasamy ADK 37400
Fifth 1971-77 J. S. Raju DMK 39043

History of Perambalur District

Ranjankudi Fort

Perambalur is a municipality town in the state of Tamil Nadu. It is the administrative headquarters of Perambalur district and Perambalur Taluk (Sub-District). Perambalur is the central town of Tamil Nadu. Perambalur district is bounded on the North by Cuddalore and Salem, South by Trichy, East by Ariyalur, West by Trichy and Salem. There are a set of 11th century Buddhists images around the villages of Perambalur called Perambalur Buddhas.

Once there was a power struggle between Hyder Ali and later Thippu Sultan with the British. After the death of Thippu Sultan, the British took the civil and military Administration of the Carnatic in 1801. Thus Tiruchirappalli came in to the hands of the English and the District was formed in 1801. In 1995 Tiruchirappalli was trifurcated and the new Perambalur and Karur districts were formed.

In the Government Order G.O (Ms) NO. 683 Dated. 19.11.2007 Government passed orders that Perambalur District be reorganised and bifurcated again into two districts Perambalur and Ariyalur, out of which Perambalur district with Headquarters at Perambalur consists of one Revenue Division of Perambalur and three Taluks of Perambalur, Kunnam and Veppanthattai. It is bounded on the North by Cuddalore and Salem Districts, South by Tiruchirappalli, East by Ariyalur District, West by Tiruchirappalli and Salem Districts.

Now Perambalur has many schools, polytechnic colleges, 9 engineering colleges, one private medical college with multi speciality hospital and one government medical college. There are some Arts and science colleges also situated in & around perambalur. Perambalur has a central library with internet facilities.

 

Perambalur District Map

Perambalur Area:

Area Sq. Km: 1,756

Perambalur Population:

Male: 282,157
Female: 283,066
Total: 565,223

Literacy Rates

Male: 82.87%
Female: 65.90%
Total: 74.32%