Thirumayam

MLA Mr. P.K. Vairamuthu

 

 

MLA Mr. P.K. Vairamuthu

 

 

 

Father Name Shri. P. Kumara samy devar
Party AIADMK
Date of Birth 12th October 1954
Place of Birth Virachilai Village
Education P.U.C.
Marital Status Married; Two Children.
Address Chennai: B6B, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: No. 6/66, Arasamarathu Street, Virachilai Post, Thirumayam Taluk, Pudukottai District-622 412.
Telephone Chennai–Residence: 044-25368402
Mobile: +91 9443951731
E-mail mlathirumayam@tn.gov.in
Facebook https://www.facebook.com/vairamuthubamla.admk

Thirumayam (State Assembly Constituency)

Tirumayam is a state assembly constituency in Tamil Nadu.

Total Voters:

Male: 1, 01,468
Female: 1, 04,038
Total: 2, 05,506

“நல்லாட்சி தொடர அதிமுகவை ஆதரியுங்கள்’:திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்து

மே 15,2016,

தமிழகத்தில் நல்லாட்சி தொடர அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றார் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்து.

திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாக்கு சேகரித்த அவர் பேசியதாவது:

நான் வெற்றிபெற்றால் பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக்கி அனைத்து வசதிகளையும் பெற்றுத் தந்து தன்னிறைவு பெறச் செய்வேன். வாரச்சந்தை வணிக வளாகம் கட்டப்படும். வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியினருக்கு சாலை, குடிநீர் வசதிகள் செய்துதரப்படும். பொன்னமராவதியில் மின்மயானம் அமைக்கப்படும், அரசு கல்லூரி அமைக்கப்படும். எனவே, தமிழகத்தில் நல்லாட்சி தொடரவும், திருமயம் தொகுதி முன்மாதிரி தொகுதியாக மாறவும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றார்.

தொடர்ந்து பொன்னமராவதி நாட்டுக்கல், வலையர்வளவு, வையாபுரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். ஒன்றியக்குழு தலைவர் சி.அழகுசுப்பையா, பேரூராட்சித் தலைவர் ஆர்.எம்.ராஜா, நகரச் செயலர் பி.எல்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமயம் அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

மே 14,2016,

திருமயம் தொகுதியில் அரிமளம்,திருமயம் ஒன்றியத்துக்குள்பட்ட 88 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரே நாளில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து வாக்கு சேகரித்தார்.

அரிமளம் ஒன்றியத்தில் சிவபுரம், மலுக்கன்பட்டி, மேலதேமுத்துபட்டி, இளங்குடிபட்டி ஆகியவற்றிலும், திருமயம் ஒன்றியத்தில் ந.புதூர், செட்டியாபட்டி, கப்பத்தான்பட்டி, லெம்பலக்குடி, சோழம்பட்டி, நல்லிப்பட்டி, திருவம்பட்டி, அரசம்பட்டி, கீழகுளத்துபட்டி, ராங்கியம்மெட்டு, மேலூர் கவுண்டர் தெரு, சேந்தன்பட்டி உள்பட 88 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் செய்து வாக்குக்கேட்டு பேசியது:

விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு முதல்வர் திருமயம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளார். திருமயம் தொகுதியில் 769 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ. 301 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணி நிறைவடைந்து சோதனை ஒட்டம் நடைபெற்றுள்ளது. ஜெயலலிதா மீண்டும் 6 ஆவது முறையாக தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பெற்று இத்திட்டத்தை திறந்து வைப்பார். கடந்த 15 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராதவர் ரகுபதி. இவருக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். நான் மீண்டும் திருமயம் தொகுதி எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றவுடன் கொள்ளிடம், காவிரி உபரிநீரை இந்தத் தொகுதி விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இதில்,முன்னாள் அமைச்சர் எம். ராதாகிருஷ்ணன், அரிமளம் ஒன்றிய நிர்வாகிகள் ஆர்.சந்திரன். பி.எல்.பழனியப்பன், எம்.எம்.கணேசன், எஸ்.திலகர், திருமயம் ஒன்றிய நிர்வாகிகள், அழ.ராமு, முத்துசாமி, ஆர்.எம்.கருப்பையா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரிமளம் தாலுகா உருவாக்கப்படும்:அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து

மே 11,2016,

அரிமளத்தை தலைமையிடமாகக் கொண்ட தனித் தாலுகா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திருமயம் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து.

அரிமளம் ஒன்றியம், ராயவரம் ஏ. செட்டிபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் பங்கேற்று மேலும் பேசியது: கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் காவிரிக்கூட்டு குடிநீர்த் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை சுமார் ரூ. 350 கோடியில் செயல்படுத்தியுள்ளேன். அரிமளத்தை தனி தாலுகாவாக ஆக்குவது குறித்தும், ராயவரம் பகுதியில் காகிதத்தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். உங்களில் ஒருவனாக உங்களுக்காகத் தொண்டாற்றிடக் காத்திருக்கிறேன். அதிமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டைதாரருக்கு இலவச கைப்பேசி,தாலிக்கு 1 பவுன் தங்கம், பெண்களுக்கு மொபெட்,ஸ்கூட்டர் வாங்க 50 சத மானியம், 100 யூனிட் வரை வீடுகளுக்கு இலவச மின்சாரம். கல்விக்கடன் ரத்து, விவசாயக் கடன் தள்ளுபடி, படிப்படியாக மது விலக்கு அமல், பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இத்திட்டங்கள் அனைத்தையும் பெற்று பயனடைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.தொடர்ந்து, ராயவரம் கடைவீதி, செல்லாயிபுரம், சொக்கலிங்கபுரம்,வாசுகிபுரம்,ஆயிங்குடி,குருந்தங்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்குகள் சேகரித்தார் இதில், நிர்வாகிகள் பழனியப்பன், எம்.எம். கணேசன், எஸ்.திலகர், முன்னாள் அமைச்சர் எம். ராதாகிருஷ்ணன், புதுப்பட்டி முருகன்,ஒன்றிய,நகர,ஊராட்சிக் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

திருமயம் தொகுதியில் ரூ. 350 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றம் :அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து

மே 07,2016,

திருமயம் தொகுதியில் ரூ. 350 கோடியில் மக்களின் அத்தியாவசியத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து.

திருமயம் அருகே விராச்சிலையில் அவர் அளித்த பேட்டி:

769 கிராமங்கள் பயன் பெறும் வகையில் ரூ.301 கோடி நிதியில் செயல்பட உள்ள காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் முதன்மையானது. திருமயம் அரசு தலைமை மருத்துவமனை அறுவைச் சிகிச்சை அரங்கு ரூ.50 லட்சத்தில் நவீனமயமாக்கியது. ரூ.1 கோடியில் திருமயத்தில் போக்குவரத்துக் கழகப் பணிமனை, ரூ.2.80 கோடியில் திருமயத்தில் நீதிமன்ற வளாகம், நற்சாந்துபட்டி, காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தலா ரூ. 1 கோடி செலவில் தரம் உயர்த்தியது.

கூடலூர் – பனையப்பட்டி இடையே ரூ.2.50 கோடியில் புதிய மேம்பாலம், பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம்,போக்குவரத்து காவல் துறை பிரிவு அமைக்க அனுமதி, பொன்னமராவதி, ஆலவயல் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.2.50 கோடியில் புதிய கட்டடம், காரையூர் அரசுப் பள்ளிக்கு ரூ.1 கோடியில் கூடுதல் கட்டடம், ரூ. 2.50 கோடியில் பொன்னமராவதியில் புதிய தாலுகா அமைத்தது. சேரனூர்-குடுமியான்மலை இடையே ரூ.6 கோடியில் புதிய மேம்பாலம். அறந்தாங்கி – புதுவயல் சாலையில் ரூ. 2 கோடியில் புதிய பாலம், மத்திய கூட்டுறவு வங்கியின் கல்லூர் கிளைக்கு ரூ.2.50 கோடியில் புதிய கட்டடம், பொன்னமராவதி மற்றும் அரிமளத்தில் வேளாண் அலுவலகங்கள், மேலத்தானியம் மற்றும் விராச்சிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருமயத்தில் மகளிர் காவல் நிலையம், மாணவியர் விடுதி, துளையானூர்,ராங்கியம்,அரிமளம்,ஆலவயல் உள்ளிட்ட ஊர்களில் கால்நடை மருந்தகங்கள், மேலத்தானியம்,கீழாநிலைக்கோட்டையில் மாணவர்(ஆதி)தங்கும் விடுதி,வார்பட்டு அரசு பள்ளிக்கு கட்டடம், அரிமளம் – தல்லாம்பட்டியில் புதிய துணை மின் நிலையம்,அரிமளம் மகளிர் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தியது,பொன்னமராவதி நகரப்பட்டியில் புதிய துணை மின் நிலையங்கள்,கீழாநிலைக்கோட்டையில் மாணவர்(பி.வ) தங்கும் விடுதி போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

திருமயத்தில் காகித ஆலை அமைக்கப்படும்:அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்து

மே 05,2016,

திருமயம் தொகுதியில் காகித ஆலை அமைக்கப்படும் என்றார் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து.

திருமயம் தொகுதியில் அரிமளம் ஒன்றியத்துக்குள்பட்ட நமணசமுத்திரத்தில் புதன்கிழமை தேர்தல் பிரசார நிகழ்வில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

திருமயம் தொகுதியில் 769 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ 301 கோடி செலவில் பணிகள் நிறைவடைந்து சோதனை ஒட்டம் நடைபெற்றுள்ளன. விரைவில் திருமயம் தொகுதியில் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடத்தி வரும் கல்வி நிலையங்களில் இலவசக் கல்வி அளித்திருக்கிறாரா என்பதை மக்கள் அறிவார்கள். நான் வெற்றி பெற்றதும், திருமயம் தொகுதியில் அதிகமாக உள்ள தைல மரங்கள், சவுக்கு மரங்கள் ஆகியவைகளை பயன்படுத்திடும் வகையில் காகித ஆலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். நான் சாதாரண விவசாயி. என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆகவே முதல்வர் கட்சியில் பல்வேறு பதவிகளை வழங்கியதுடன், திருமயம் தொகுதி வேட்பாளராக மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார். கடந்த உள்ளாட்சி, மக்களவை ஆகிய தேர்தல்களில் அதிமுக-வுக்கு மகத்தான வெற்றியை அளித்ததைப் போல இந்தப் பேரவைத் தோóதலிலும் மகத்தான வெற்றியை வாரி வழங்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, சிவபுரம்,வடக்கிப்பட்டி,லேணாவிலக்கு,அரசநாயகிபுரம்,முனசந்தை,பெருங்குடி உள்பட 52 கிராமங்களுக்கு நேரில் சென்று வாக்கு சேகரித்தார். இதில், முன்னாள் அமைச்சர் எம். ராதாகிருஷ்ணன், அரிமளம் பகுதி நிர்வாகிகள், பழனியப்பன், எம்.எம். கணேசன், ஆர். சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமயம் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றப்படும்: அதிமுக வேட்பாளர் உறுதி

மே 03,2016,

திருமயம் சட்டப்பேரவை தொகுதி அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்ற தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றப்படும் என்றார் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதிக்கு உள்பட்ட பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து அவர் பேசியது:

கடந்த 2011-ல் இத்தொகுதியில் போட்டியிட்டு 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நான், பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளேன். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன். அதேபோல, இந்தத் தேர்தலிலும் என்னை வெற்றிபெறச் செய்தால் திருமயம் தொகுதியை அனைத்து வசதிகளையும் பெற்ற தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்.

அதிமுகவிலிருந்து வளர்ச்சி பெற்று துரோகம் செய்துவிட்டு திமுகவுக்குச் சென்றவர்தான் அந்தக் கட்சியில் போட்டியிடுகிறார். 15 ஆண்டுகள் கழித்து ஓட்டுக்காக உங்களை தேடி வருகிறார். அவரை தோற்கடித்து திமுகவின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். என்னை வெற்றிபெறச் செய்தால் உங்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன் என்றார்.

தொடர்ந்து, காயாம்பட்டி, எழுவன்குறை, எம்.உசிலம்பட்டி, மேலத்தானியம், முள்ளிப்பட்டி, ஆலம்பட்டி, கார்ணாப்பட்டி, நெரிஞ்சிக்குடி, நல்லூர், கூடலூர் உள்ளிட்ட 63 கிராமங்களில் பி.கே. வைரமுத்து வாக்கு சேகரித்தார்.ஒன்றியக் குழுத் தலைவர் சி. அழகுசுப்பையா, பேரூராட்சித் தலைவர் ஆர்எம். ராஜா, நகரச் செயலர் பிஎல். ராஜேந்திரன், மீனவரணி ஒன்றியச் செயலர் காசி கண்ணப்பன், ஊராட்சித் தலைவர்கள் பி. மாரிமுத்து, லதா சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

“விவசாயிகளின் நலன் காக்கப்படும்’: அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து

மே 02,2016,

திருமயம் தொகுதி விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து.

திருமயம் அருகே குழிபிறைப்பட்டியில் சனிக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த அவர் மேலும் பேசியது: விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் தான் மாநில விவசாய பிரிவு செயலர், மாவட்டச் செயலர் ஆகிய பதவிகளை ஜெயலலிதா வழங்கியதுடன் திருமயம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார்.

திருமயம் தொகுதியில் 769 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ. 301 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்து சோதனை ஒட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிடும். 15 ஆண்டுகளாக தொகுதிப் பக்கமே வராத திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்து கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.

திருமயம் தொகுதி எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துக் கூறி கொள்ளிடம், காவிரி உபரிநீரை திருமயம் தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றார். இதையடுத்து,பேரையூர், நல்லாம்பட்டி, கோவில்பட்டி, அம்பாள்நகர்,காமராஜர் தெரு, கும்மங்குடி, மலையலிங்கபுரம்,கொப்பரம்பட்டி, புதுக்குறிச்சிவயல், பழுவினிப்பட்டி,பனையப்பட்டி அம்பலக்கல் தெரு உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்குகள் சேகரித்தார்.

முன்னாள் அமைச்சர் எம். ராதாகிருஷ்ணன், ஒன்றிய நிர்வாகிகள், எ.ஏல்.ராமு,முத்துராமன்,முத்துசாமி, ஏபிஎம்.நாகராஜ், ஷேக் அலி, அடைக்கலம்காத்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

“வாரச்சந்தை வணிக வளாகம் கட்டித்தரப்படும்’

ஏப்ரல் 30,2016,

பொன்னமராவதியில் வாரச்சந்தை வணிக வளாகம் கட்டித் தரப்படும் என்றார் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்து.

பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடியில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்த அவர் மேலும் பேசியது: நான் சாதாரண விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன். 2011 தேர்தலில் என்னை 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள். தொடர்ந்து, தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். என்னால் முடிந்த அளவு தொகுதிக்கான வளர்ச்சிப்பணி ஆற்றியுள்ளேன். எனவே, மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட, மக்கள் பணியாற்ற அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கியுள்ளார். எனவே என்னை வெற்றி பெறச்செய்தால் இத்தொகுதியில் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேரூராட்சியை நகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். பொன்னமராவதியில் வாரச்சந்தை வணிக வளாகம் கட்டித் தரப்படும் என்றார்.

தொடர்ந்து செவலூர், கோவனூர், சுந்தரசோழபுரம், கொன்னைப்பட்டி, செம்பூதி, தச்சம்பட்டி, கொப்பனாபட்டி, காட்டுப்பட்டி, கருகப்பூலாம்பட்டி உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குகள் சேகரித்தார்.

உடன் ஒன்றியக்குழு தலைவர் சி.அழகுசுப்பையா, பேரூராட்சித் தலைவர் ஆர்எம்.ராஜா, நகரச்செயலர் பிஎல்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

திருமயம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

திருமயம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருமயம், ஏப்ரல்

திருமயம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமு தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் முத்துராமன் வரவேற்றார். கூட்டத்தில் திருமயம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.கே.வைரமுத்து எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.எம்.கருப்பையா, ஊராட்சி செயலாளர் வெங்கட் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வெங்களுர் மணி நன்றி கூறினார்.

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Vairamuthu. P.K. AIADMK 78913
Thirteenth 2006-2011 Subburam, Rm INC 47358
Twelfth 2001-06 Radakrishnan. M. ADMK 58394
Eleventh 1996-01 Chinnaiah V. TMC(M) 53552
Tenth 1991-96 S. Regupathy ADK 72701
Ninth 1989-91 V. Sobiah DMK 32374
Eighth 1984-89 Pushparaju T. INC 65043
Seventh 1980-84 Sundararaj, N. INC(I) 39479
Sixth 1977-80 N. Sundararaj INC 20694
Fifth 1971-77 A. Thiagarajan DMK 38630
Forth 1967-71 Ponnambalam DMK 44511

History of Pudukkottai District

King's Palace

Pudukkottai is the administrative headquarters of Pudukkottai District in the South Indian state of Tamil Nadu. Located on the banks of River Vellar, it has been ruled, at different times, by the Early Pandyas, Thondaimans, and the British. It is situated about 395 kilometres (245 mi) southwest of the state capital Chennai and about 55 kilometres (34 mi) southwest of Tiruchirappalli. The people in the city are employed majorly in teritiary sector activities. Tamil Nadu’s first women Asiad Santhi Soundarajan is from Pudukkottai.

Pudukkottai District is well endowed with natural resources of land and sea, bounded by the marine hedge of Bay of Bengal in the east conjoined by the southern districts viz, Trichy, Sivaganga, Ramanathapuram and Thanjavur. It admeasures an area of 4663.29sq.kms with a coastal length of 42 kms.

Being the district headquarters, Pudukkottai accommodates the district administration offices, government educational institutes, colleges and schools. Pudukkottai is a part of Pudukkottai constituency and elects its member of legislative assembly every five years, and a part of the Tiruchirappalli constituency that elects its member of parliament.

The city is administered by a selection-grade municipality established in 1912 as per the Municipal Corporation Act. The city covers an area of 21.25 km2 and had a population of 143745 in 2011. Roadways is the major mode of transport to the city, while it has also got rail connectivity. The nearest airport is Tiruchirappalli International Airport, located at a distance of 45 km from the city.

 

Pudukkottai District Map

Pudukkottai Area:

Area Sq. Km: 4,644

Pudukkottai Population:

Male: 803,188
Female: 815,157
Total: 1,618,345

Literacy Rates

Male: 85.56%
Female: 69.00%
Total: 77.19%