Viralimalai

Achievements of MLA Mr. C. Vijayabaskar

Provided New Medical Equipments

Providing Pulse Polio Drops

Providing Pulse Polio Drops

New Buses for TNSTC

New Ration Shop Opening Ceremony

Distributing Free Milch Cows and Goats

Distribution of Free Bicycles

Opening Ceremony of The Assistant Director(Husbandry Department) Office

Distribution of Relief Materials to Fire Affected Peoples

Community 'Valaikappu' Programme

Planting Trees Under Trees Planting Scheme

Opening Ceremony of Part Time Library

Distribution of Free Laptops

New Buses for TNSTC

Distribution of AMMA Mobile Phones

New Buses for TNSTC

Opening Ceremony of Aavin Milk Plant

 

MLA Mr. C. Vijayabaskar

 

 

MLA Mr. C. Vijayabaskar

 

 

 

Father Name R.Chinnathambi
Party AIADMK
Date of Birth 8th April 1974
Place of Birth Illuppur
Education M.B.B.S.
Marital Status Married; One Child.
Address Chennai: B1C, M.L.As Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: No. 14/28, Sowrashtra Street, Illuppur Post, Pudukkottai-622 102.
Telephone Chennai–Residence: 044-25367414
Office: 04339-212145
Mobile: +91 94433 88155; 97509 66601
E-mail mlaviralimalai@tn.gov.in
Facebook https://www.facebook.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-C-1423757771174622/

Viralimalai (State Assembly Constituency)

Viralimalai is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu.

Total Voters:

Male: 1, 00,114
Female: 98,986
Total: 1, 99,103

 

இளைஞர்களுக்கு மேலும் பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் :அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வாக்குறுதி

மே 14,2016,

வரும் காலங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளுடன் சேர்ந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார் விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் விராலிமலை ஒன்றியத்துக்குள்பட்ட ராஜகிரி, நம்பம்பட்டி, வானதிரையான்பட்டி, விராலூர், கொடும்பாளூர், ராமகவுண்டன்பட்டி, பகவான்பட்டி, செவனம்பட்டி மற்றும் இலுப்பூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் மேலும் பேசியது:

விராலிமலை மற்றும் இலுப்பூர் பகுதிகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அம் முகாம்களின் மூலம் விராலிமலைத் தொகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

விராலிமலையில் செயல்படும் புதிய தொழிற் பயிற்சி பள்ளி மூலம் இளைஞர்களுக்கு தரமான தொழிற்பயிற்சி மற்றும் கல்வி வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மாத்தூரில் புதியதாக சிப்காட் தொழிற்சாலை வளாகம் அமைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தவிர,விராலிமலையில் ஐடிசி நிறுவனத்தால் புதிய தொழிற்சாலை தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3000-க்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். தொழில் வளர்ச்சியை பெருக்கவும் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

விராலிமலை தொகுதி அடைந்துள்ள மேம்பாடு அளப்பரியது:அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர் பேச்சு

மே 13,2016,

அன்னவாசல் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர்  பேசியது:

விராலிமலை தொகுதியில் போட்டியிடும் நான் அனைத்து சமூகத்தினருடனும் கனிவுடனும் பாசத்தோடும் பழகி வருபவன். என் உயிர் மூச்சு உள்ள வரை விராலிமலை மண்ணுக்காக உண்மையாக உழைப்பேன். தற்போது 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் விராலிமலை தொகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளேன்.

இன்று விராலிமலை தொகுதி அடைந்துள்ள மேம்பாடு அளப்பரியதாகும்.

இலுப்பூர் தனி கோட்டமாகவும், விராலிமலை தனி வட்டமாகவும் பிரிக்கப்பட்டு பொதுமக்களின் சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை உதவி இயக்குநர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், புதிய பேருந்துப் பணிமனை, நுகர்பொருள் வாணிபக் கிட்டங்கி போன்றவையும் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் ஆகிய பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. குடுமியான்மலையில் புதிய அரசு வேளாண் கல்லூரி மற்றும் பட்டயக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. விராலிமலையில் புதிய தொழில் நுட்பப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.இதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 12,2016,

விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குன்றாண்டார்கோவில் ஒன்றியத்திற்குள்பட்ட தாயினிப்பட்டி, இலுப்பகுடிப்பட்டி, லெக்கனாப்பட்டி, ஒடுக்கூர், வடுகப்பட்டி, மேலப்புதுவயல், உடையமழவராயன்பட்டி, இளையாவயல், குளத்தூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் மேலும் பேசியது: விராலிமலை தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வசதி,சாலை, பேருந்து நிழற்குடை, அங்கன்வாடி மைய கட்டடம், ரேஷன் கடை, சமுதாயக் கூடம், கலையரங்கம், புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவை ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், அன்னவாசல்,குளத்தூர் மற்றும் இலுப்பூரிலிருந்து சென்னை, திருப்பதி ஆகிய ஊர்களுக்கு புதிய பேருந்து வழித்தடம், இலுப்பூரில் பேருந்து பணிமனை மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளது. அன்னவாசல் பொது மருத்துவமனையில் புதிய நம்பிக்கை மையம்,கொடும்பாளூர் மற்றும் பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனையாக தரம் உயர்த்தியது. முக்கணாமலைப்பட்டி, ராப்பூசல், ராசநாயக்கன்பட்டி,மதியநல்லூர், புல்வயல், ஆவூர், பாலாண்டாம்பட்டி, தென்னலூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விராலிமலை தொகுதியின் உண்மையான, சுறுசுறுப்பான, விசுவாசமான வேலைக்காரனாக செயல்பட்டுள்ளேன். மாநிலத்திலேயே முதன்மைத் தொகுதியாக விராலிமலை தொகுதியை மாற்றிட என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். கார்த்திக் பிரபாகரன், குன்றாண்டார்கோவில் ஒன்றிய செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நலத்திட்டங்கள் தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: விஜயபாஸ்கர்

மே 11,2016,

விராலிமலை தொகுதி அன்னவாசல் ஒன்றியப்பகுதிகளில் அதிமுக வேட்பாளரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

அன்னவாசல் ஒன்றியத்திற்குள்பட்ட மாங்குடி, அகரப்பட்டி, மண்ணவேளாம்பட்டி, ஆரியூர், திருவேங்கைவாசல், மதியநல்லூர், சித்தன்னவாசல், மலம்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் மேலும் பேசியது: அதிமுக ஆட்சியில் முதியோர் ஓய்வூதியத் தொகையினை ரூ.500 லிருந்து ரூ.1000 மாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டது. தற்போதைய அதிமுக தேர்தல் அறிக்கையில் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும் மகளிருக்கு பேறு கால விடுமுறை 9 மாதங்களாக உயர்த்தப்படும். தாலிக்குத் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தப்படும். பெண்கள் ஸ்கூட்டர், ஆட்டோ வாங்க 50 சதவீத மானியம் என எண்ணற்ற திட்டங்களையும் வாக்குறுதிகளாக அளித்துள்ளார். கடந்த தேர்தலில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும்,சொல்லாத மேலும் பல மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்கள். தற்போதைய அருமையான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மீண்டும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் வி. ராமசாமி, அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் பி. சாம்பசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விராலிமலை மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்

மே 09,2016,

விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் உயிர் மூச்சு உள்ள வரை விராலிமலை மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் உண்மையோடும் விசுவாசத்துடனும் உழைப்பேன் என்றார்.

விராலிமலை கிழக்கு ஒன்றியம், நீர்பழனி, ஆவூர், பேராம்பூர், பாலண்டாம்பட்டி, களமாவூர், நடுப்பட்டி, ஆலங்குடி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அவர் மேலும் பேசியது:

விராலிமலைத் தொகுதியில் போட்டியிடும் நான் என் உயிர் மூச்சு உள்ள வரை விராலிமலை தொகுதி வளர்ச்சிக்கு உண்மையாக உழைப்பேன். கடந்த 5 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளேன். 

கடந்த காலங்களில் விராலிமலை தொகுதி கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் இன்று விராலிமலை தொகுதி அடைந்துள்ள மேம்பாடு அளப்பரியதாகும். கடந்த 5 ஆண்டுகளில் இலுப்பூர் தனி கோட்டமாகவும், விராலிமலை தனி வட்டமாகவும் பிரிக்கப்பட்டு பொதுமக்களின் சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், கால்நடை உதவி இயக்குநர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், புதிய பேருந்து பணிமனை, நுகர்பொருள் வாணிப கிட்டங்கி போன்றவையும் செய்துதரப் பட்டுள்ளன. மேலும் விராலிமலை,அன்னவாசல், இலுப்பூர் ஆகிய பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள்,புதிய கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மீண்டும் வாய்ப்பு அளித்தால் விராலிமலை தொகுதியில் இன்னும் பல திட்டங்களை கொண்டு வந்து சாதனை படைப்பேன் என்றார்.  ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி(கிழக்கு),தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பாக்குடியில் மின் நிலையம் அமைத்தவர் ஜெயலலிதா :அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர்

மே 05,2016,

அரசின் அளவில்லா திட்டங்கள் பெற்ற விராலிமலை தொகுதி வளர்ச்சி பெற்ற தொகுதிகளில் முன்னோடியாக திகழ்கிறது என்றார் அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர்.

கோங்குடிப்பட்டி, பாக்குடி, நாங்குப்பட்டி, மாங்குடி, விளாப்பட்டி, சீத்தப்பட்டி, சூரியூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான சி. விஜயபாஸ்கர் மேலும் பேசியது: கடந்த 2011-ல் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற போது தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு நிலவியது. முதல்வரின் ஆளுமை திறத்தால் படிப்படியாக மின்வெட்டு நீங்கி மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு இன்று திகழ்ந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் ஜெயலலிதா பாக்குடியில் ரூ. 16 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையத்தை நிறுவி அண்மையில் திறந்து வைத்தார்.

ஆகவே இன்று இப்பகுதியில் தடையில்லாமல் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. மேலும், பாக்குடி – கோங்குடிப்பட்டி ஊர்களுக்கிடையே இணைப்பு பாலம் விரைவாக முடித்து போக்குவரத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. என்றுமே மக்கள் நலனில் அக்கறையுள்ளது அதிமுக அரசு. இதேபோல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திட எம்ஜிஆர் கண்ட வெற்றிச்சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

வாக்கு சேகரிப்பின்போது, விராலிமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் மு. திருமூர்த்தி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஏ.வி. ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

அதிமுக ஆட்சியில் கல்வியில் விராலிமலை தொகுதி முன்னேற்றம்:அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர்

மே 04,2016,

விராலிமலை தொகுதி மேற்கு பகுதியில் அதிமுக வேட்பாளர்சி. விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

அகரப்பட்டி, மீனவேலி, கசவனூர், கொடும்பாளூர்,பொய்யாமணி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது அவர் மேலும் பேசியது:

அதிமுக ஆட்சியில் குறிப்பாக மாநிலத்திலேயே கல்வித் துறையில் வேகமாக முன்னேறிய தொகுதியாக விராலிமலை விளங்குகிறது. விராலிமலை தொகுதிக்குள்பட்ட குடுமியான்மலையில் புதிய வேளாண்மைக் கல்லூரியும், விராலிமலையில் புதிய தொழில் நுட்பக் கல்லூரியும் (ஐடிஐ) தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் குடுமியான்மலை, திருநல்லூர், கிளிக்குடி, மீனவேலி உள்ளிட்ட பகுதிகளில் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், கொடும்பாளூர், மண்டையூர், செவல்பட்டி, மலைக்குடிப்பட்டி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், விராலிமலை ஒன்றியத்தில் அசேபா தனியார் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட 12 பள்ளிகள் அரசு பள்ளிகளாக மாற்றி சிறப்பு ஆணையிடப்பட்டு, அப்பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பின் தங்கிய மாணவர்கள் மற்றும் ஆதி திராவிட மாணவர்கள் தங்கி படிக்க வயலோகம் மற்றும் விராலிமலையில் புதிய மாணவர் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன, அன்னவாசல் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மகளிர் உயர்நிலைப் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

வாக்கு சேகரிப்பின்போது, முன்னாள் மாவட்ட செயலாளர் வி. ராமசாமி, விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் மு. சுப்பையா, அட்மா சேர்மன் எஸ். பழனியாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

 

விராலிமலை தொகுதியில் :பேருந்து செல்லாத கிராமங்களே இல்லை:விஜயபாஸ்கர் பெருமிதம்

மே 03,2016,

அதிமுக ஆட்சியில் விராலிமலை தொகுதியில் பேருந்துகள் செல்லாத கிராமங்களே இல்லை என்றார் அமைச்சரும், இந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளருமான சி. விஜயபாஸ்கர்.

விராலிமலை தொகுதி அன்னவாசல் ஒன்றியத்தில் திங்கள்கிழமை அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டர். பொத்தையம்பட்டியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், கிளிக்குடி, ஆலத்தூர், கதவம்பட்டி, தளிஞ்சி, எண்ணை, பரம்பூர், சீத்தப்பட்டி, வெளியங்குடி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு செயல்படுத்திய திட்டப் பணிகள் ஏராளம். குறிப்பாக, விராலிமலை தொகுதி இன்று தன்னிறைவு பெற்ற தொகுதியாக விளங்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அள்ளித்தந்த பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்தான் காரணம்.

அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி, குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், சாலைவசதி இல்லாத பல கிராமங்களுக்கு தார்ச் சாலை வசதி, பயணியர் நிழற்குடை என பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளால் இன்று தன்னிறைவு பெற்ற தொகுதியாக விராலிமலை விளங்குகிறது என்றார் அவர்.

இதைத்தொடர்ந்து, மாம்பட்டியில் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, அங்குள்ள வெள்ளையம்மாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையின் பிரசாதம் வழங்கப்பட்டது. வாக்கு சேகரிப்பின்போது, முன்னாள் மாவட்டச் செயலாளர் வி. ராமசாமி, அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் பி. சாம்பசிவம், அன்னவாசல் ஒன்றியக் குழுத் தலைவர் இளவரசி வசந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

 

விராலிமலை முதன்மை தொகுதியாக மாற்றப்படும்: அதிமுக வேட்பாளர்  சி. விஜயபாஸ்கர்

மே 02,2016,

வளர்ச்சி திட்டங்களால் வளம் பெற்ற விராலிமலை முதன்மை தொகுதியாக மாற்றப்படும் என்றார் அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர்.

ஆவூர்,வேலூர்,மேலபச்சக்குடி,கத்தலூர்,மதயானைப்பட்டி,டி.நல்லூர்,மாத்தூர், மண்டையூர்,குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பின் போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான சி. விஜயபாஸ்கர் மேலும் பேசியது:

விராலிமலை தொகுதிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் 100% முடிக்கப்பட்டுள்ளது. ஆவூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், வரலாற்று சிறப்பு பெற்ற ஆவூர் தேவாலயத்தின் திருத்தேருக்கு புதிய சக்கரங்கள் மட்டுமன்றி சிறுபான்மை கிறிஸ்தவர்களின் புனித தலமான இஸ்ரேலுக்கு செல்ல அரசு செலவில் புனித திட்டம் ஆகியவற்றை முதல்வர் செய்து தந்துள்ளார். இலுப்பூரிலிருந்து ஆவூர் வழியாக மாத்தூர் செல்லும் சாலையை விரிவுபடுத்தி திருச்சி செல்வதற்கு நவீன இணைப்பு சாலை, ஆவூரில் கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட  பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அதிமுக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன.விராலிமலை தொகுதியை மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் முன்னேற்றிச் செல்ல வரும் தேர்தலில் எம்ஜிஆர் கண்ட வெற்றிச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.  விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் மு. திருமூர்த்தி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஏ.வி. ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

விராலிமலை பகுதிகளில் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு

மே 01,2016,

விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விராலிமலை ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விராலிமலை, விராலூர், ராஜகிரி, தென்னம்பாடி, தேராவூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் மேலும் பேசியது:

விராலிமலை தொகுதிக்குள்பட்ட அனைத்துக் கிராமங்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் தமிழக அரசால் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் முடிந்துள்ளன. இத்திட்டத்தின் மூலம் விராலிமலை ஒன்றியத்தில 504 கிராமங்களும் அன்னவாசல் ஒன்றியத்தில் 395 கிராமங்களும் பயன்பெறும். இத்திட்டத்துக்காக பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து உரையாற்றும் வாய்ப்பளித்த நீங்கள், இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு, பணிகள் முடிந்த நிலையில், அதை முதல்வராக ஜெயலலிதா திறந்து வைக்கும்போது உங்களுடைய எம்எல்ஏவாக நான் செயல்பட எனக்கு வாய்ப்பளியுங்கள் என்றார் அமைச்சர்.

ஒன்றியச் செயலர் மு. சுப்பையா (மேற்கு) ஆத்மா குழுத் தலைவர் எஸ். பழனியாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆ. பெரியசாமி, மணிமாலாசெந்தில், கூட்டுறவு சங்கத் தலைவர் வி. முருகேசன், இயக்குநர் ஜெ.ஆர். அய்யப்பன், வெல்கம்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும்

ஏப்ரல் 30, 2016

விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அன்னவாசல் ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

கோதண்டராமபுரம், பெருமாநாடு, புல்வயல், வயலோகம், தச்சம்பட்டி, குடுமியான்மலை, வெட்டுக்காடு, பரம்பூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் மேலும் பேசியது: விராலிமலை தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக அனைத்து கிராமங்களுக்கும் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றித் தர முடியுமோ அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறேன். இன்னும் 5 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கி வெற்றி பெறச் செய்தால், தொகுதிக்குள்பட்ட கிராமங்கள் அனைத்திலும் அனைத்து அடிப்படை வசதிகளையும்,நிறைவேற்ற வேண்டிய பணிகளையும் கண்டிப்பாக உடனுக்குடன் நிறைவேற்றித் தருவேன். உங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன் என்றார். பிரசாரத்தின் போது முன்னாள் மாவட்ட செயலாளர் வி. ராமசாமி, அன்னவாசல் ஒன்றிய செயலாளர் பி. சாம்பசிவம்,ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்பையா, ஊராட்சி செயலர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

 

விராலிமலையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

விராலிமலையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்ஏப்ரல் 23, 2016

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நாளை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதையடுத்து விராலிமலை தேர்தல் அலுவலகத்தில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, அட்மா சேர்மன் பழனியாண்டி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேட்பாளரும் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசினார். கூட்டத்தில், விராலிமலை ஒன்றியத்தில் இருந்து இருபதாயிரம் பேரும், அன்னவாசல் ஒன்றியத்தில் இருந்து இருபதாயிரம் பேரும் என விராலிமலை சட்டமன்ற தொகுதியில் இருந்து நாற்பதாயிரம் பேர் சென்று முதல்-அமைச்சரை வரவேற்பதுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. இதில் விராலிமலை ஒன்றிய, மண்டல, பூத்கமிட்டி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கவுன்சிலர் முத்துச்சாமி, நகர செயலாளர் செந்தில் நன்றி கூறினர்.

 

விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத எஃகு கோட்டை – வேட்பாளர் விஜயபாஸ்கர் பேச்சு

அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்ஏப்ரல் 18,2016,

அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் விராலிமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பழனியாண்டி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விராலிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:– விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத எஃகு கோட்டையாகும். விராலிமலை சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற வைத்தீர்கள். இன்னும் சுறுசுறுப்போடும்,வேகத்தோடும்,துடிப்போடும் இந்த தொகுதி மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க சாதனைத் திட்டங்களை இந்த தொகுதிக்கு தமிழக முதல்–அமைச்சர் செய்து கொடுத்துள்ளார்கள். தொடர்ந்து உங்களுக்கு பணியாற்றிட நீங்கள் ஒற்றுமையோடு உழைத்து ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.முடிவில் நகர செயலாளர் செந்தில் நன்றி கூறினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறந்து தேர்தல் பிரசாரம் தொடக்கம்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை விராலி மலை ஒன்றிய செயலாளர் (கிழக்கு) சுப்பையா திறந்து வைத்தார். பின்னர் தேர்தல் அலுவலகத்திலிருந்து அமைச்சரும், வேட்பாள ருமான விஜயபாஸ்கர் திறந்த வேனில் சோதனை சாவடி , சன்னதி தெரு, கடை வீதி , கோரி மேடு ஆகிய பகுதிகளில் கட்சியினருடன் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் விராலிமலை ஒன்றிய செயலாளர் (மேற்கு) ராஜகிரி , திருமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பழனியாண்டி, விராலிமலை நகர செயலாளர் செந்தில், கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விராலிமலை உள்ள கோவில்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் சாமி தரிசனம் செய்தார்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Vijaya Basker. C AIADMK 77285

History of Pudukkottai District

King's Palace

Pudukkottai is the administrative headquarters of Pudukkottai District in the South Indian state of Tamil Nadu. Located on the banks of River Vellar, it has been ruled, at different times, by the Early Pandyas, Thondaimans, and the British. It is situated about 395 kilometres (245 mi) southwest of the state capital Chennai and about 55 kilometres (34 mi) southwest of Tiruchirappalli. The people in the city are employed majorly in teritiary sector activities. Tamil Nadu’s first women Asiad Santhi Soundarajan is from Pudukkottai.

Pudukkottai District is well endowed with natural resources of land and sea, bounded by the marine hedge of Bay of Bengal in the east conjoined by the southern districts viz, Trichy, Sivaganga, Ramanathapuram and Thanjavur. It admeasures an area of 4663.29sq.kms with a coastal length of 42 kms.

Being the district headquarters, Pudukkottai accommodates the district administration offices, government educational institutes, colleges and schools. Pudukkottai is a part of Pudukkottai constituency and elects its member of legislative assembly every five years, and a part of the Tiruchirappalli constituency that elects its member of parliament.

The city is administered by a selection-grade municipality established in 1912 as per the Municipal Corporation Act. The city covers an area of 21.25 km2 and had a population of 143745 in 2011. Roadways is the major mode of transport to the city, while it has also got rail connectivity. The nearest airport is Tiruchirappalli International Airport, located at a distance of 45 km from the city.

 

Pudukkottai District Map

Pudukkottai Area:

Area Sq. Km: 4,644

Pudukkottai Population:

Male: 803,188
Female: 815,157
Total: 1,618,345

Literacy Rates

Male: 85.56%
Female: 69.00%
Total: 77.19%