Mudukulathur

MLA Mr. M. Murugan

 

 

MLA Mr. M. Murugan

 

 

 

Father Name Muthu Thevar
Party AIADMK
Date of Birth 1972-05-02
Place of Birth Mudukulathur
Marital Status Married
Address Chennai:          C6F, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002
Mofussil:         No.12/6/46(1), Pillaimar Street, Mudukulathur-623 704
Telephone Chennai–Residence:   044-25366625
Mobile:              +91 9443360906
E-mail mlamudukulathur@tn.gov.in
Education H.S.C

Mudukulathur (State Assembly Constituency)

Mudukulathur is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu. It is a component of Ramanathapuram Lok sabha constituency.

Total Voters:

Male: 1,49,918
Female: 1,47,566
Transgender:8
Total: 2,97,492

 

முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 11,2016,

முதுகுளத்தூர் தொகுதியில் கமுதி, சாயல்குடி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

 கமுதி,சாயல்குடி நகரில் உள்ள வார்டுகளில் பொதுமக்களிடையே அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். முதுகுளத்தூரில் எம்.எல்.ஏ. முருகன் தலைமையில் வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வாக்குகள் சேகரித்தார். அப்போது, முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலர் ஷங்கரபாண்டியன், தொகுதி கழக செயலர் காளிமுத்து, கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், மாடசாமி, ஒன்றியச் செயலர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  தொடர்ந்து, கமுதியில் உள்ள முக்கியமான வீதிகளில் வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி வாக்குகள் சேகரித்தார். அவருடன்,  ஒன்றியச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக் குழுத் தலைவர் டி. பாலு, நகரச் செயலர் இக்பால், மாவட்டக் கவுன்சிலர் சதன்பிரபாகர், பாசறை செயலர் வி.கே.சி. முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் சென்று வாக்கு சேகரித்தனர்.

  சாயல்குடி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் வாக்குகளை சேகரித்த வேட்பாளருடன், ஒன்றியக் குழுத் தலைவர் வீ. மூக்கையா, ஒன்றியச் செயலர்கள் முனியசாமி பாண்டியன், அந்தோணிராஜ், கூட்டுறவு தலைவர் முகம்மது ரபீக் உள்ளிட்டோர் சென்றனர்.

கமுதி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

மே 10,2016,

கமுதி ஒன்றியத்தில் திங்கள்கிழமை வாக்கு சேகரிக்கச்சென்ற அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமிக்கு உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது.

முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கமுதி ஒன்றியம் எருமைக்குளம், கரிசல்குளம், கே.வேப்பங்குளம், குண்டுகுளம், கமுதி மெயின் கடைவீதி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகாமுனியசாமி பொதுமக்களிடம்  வாக்குகள் சேகரித்தார். அப்போது அப்பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதாகக் கூறி உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது அதிமுக ஒன்றியச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக்குழுத் தலைவர் டி.பாலு, நகரச் செயலாளர் இக்பால், மாவட்ட கவுன்சிலர் சதன்பிரபாகர், இளைஞர் பாசறைச் செயலர் வி.கே.சி முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூரில்..  முதுகுளத்தூர் நகர் கடை வீதிகளிலும், 14 வார்டுகளிலும்  வாக்காளர்களிடம் அதிமுக நிர்வாகிகள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமையில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

இதில் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி, மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் ஷங்கரபாண்டியன், தொகுதி ச்செயலாளர் காளிமுத்து, கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், மாடசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.

முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 08,2016,

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி சனிக்கிழமை வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆத்திகுளம், மேலக்கன்னிசேரி, நல்லூர், மணலூர், எம்.கொட்டகுடி, மேலக்கொடுலூர் ஊராட்சிகள் என 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்ற வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி, அப்பகுதிகளில் பொது மக்களிடையே அதிமுகவுக்கு ஆதரவு தரும்படி பிரசாரம் செய்தார்.

வாக்கு சேகரிப்பின்போது, சட்டப்பேரவை உறுப்பினர் எம். முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம். சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலர் ஆர். கருப்பசாமி, ஜெ. பேரவை மாவட்டப் பொருளாளர் மலைக்கண்ணன், கவுன்சிலர்கள் என பலரும் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

சாயல்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 07,2016,

சாயல்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்தார்.

   முதுகுளத்தூர் தொகுதிக்குள்பட்ட சாயல்குடி ஒன்றியம், எஸ்.கீரந்தை, எஸ்.தரைக்குடி, கன்னிராஜபுரம், கொண்டுநல்லான்பட்டி, டி.கரிசல்குளம், கொக்கரசன்கோட்டை ஊராட்சிகள் என 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

 அப்போது, அனைவரும் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

  வேட்பாளருடன், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம். சுந்தரபாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர் வீ. மூக்கையா, துணைத் தலைவர் பத்மநாதன், ஒன்றியச் செயலர்கள் அந்தோணிராஜ்(சாயல்குடி), முனியசாமி பாண்டியன் (கடலாடி) உள்பட பலர் சென்று வாக்கு சேகரித்தனர்.

கமுதி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 06,2016,

கமுதி ஒன்றியத்தில் முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகாமுனியசாமி வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தார்.

முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கமுதி ஒன்றியம் கே.பாப்பங்குளம், அரிசிக்குழுதன், முதல்நாடு, முஸ்டக்குறிச்சி, உடைகுளம், கே.நெடுங்குளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வேட்பாளர் எம்.கீர்த்திகாமுனியசாமி சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் அவருக்கு வாக்களிப்பதாகக் கூறி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக் குழுத் தலைவர் டி.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூரில் அதிமுக ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம்

மே 05,2016,

முதுகுளத்தூரில் அதிமுக ஊழியர் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அன்வர்ராஜா எம்.பி. தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ், முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகாமுனியசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் பேசியது: தேர்தலில் வெற்றி பெற, அதிமுகவினர் சேர்ந்து களத்தில் பணி ஆற்ற வேண்டும். வெற்றிபெறுவதற்கு இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். இத்தேர்தல் திமுகவினரை தோல்வி அடையச் செய்வதற்கு நல்ல சந்தர்ப்பம் இதை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மாவட்டச் செயலாளர் ஆர்.தர்மர், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் சுதந்திரகாந்தி இருளாண்டி (முதுகுளத்தூர்), வீ.மூக்கையா (கடலாடி), டி.பாலு (கமுதி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக பிரசாரம்

மே 04,2016,

முதுகுளத்தூர் ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தார்.

முதுகுளத்தூர் தொகுதியான செல்வநாயகபுரம், ஆனைசேரி, கீழக்குளம், சாம்பக்குளம், ஏ.நெடுங்குளம்,பெருங்கருணை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று பொது மக்களிடத்தில் வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வாக்குகள் சேகரித்தார்.

அவருடன், சட்டப்பேரவை உறுப்பினர் எம். முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எம். சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலர் ஆர். கருப்பசாமி, மாவட்டக் கவுன்சிலர் கே. கர்ணன், அண்ணா தொழிற்சங்க செயலர் என். ரவிச்சந்திரன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

சாயல்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 03,2016,

சாயல்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகாமுனியசாமி திங்கள் கிழமை வாக்குகள் சேகரித்தார்.

முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாயல்குடி ஒன்றியம் அல்லிக்குளம், வெள்ளம்பல், பிள்ளையார்குளம், ஒச்சத்தேவன் கோட்டை, எஸ்.வாகைக்குளம், செவல்பட்டி என 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகாமுனியசாமி வாக்குகள் சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஏ முனியசாமி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலர்கள் பி.அந்தோனிராஜ்(சாயல்குடி), என்.கே.முனியசாமிபாண்டியன்(கடலாடி), மாவட்ட கவுன்சிலர் கர்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூக்கம்மாள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

கமுதி ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி வெள்ளிக்கிழமை மூன்றாம் கட்டமாக வாக்கு சேகரித்தார்.

   கமுதி ஒன்றியம், மேட்டுப்பட்டி, சேர்ந்தகோட்டை, ஓ.கரிசல்குளம், கோவிலாங்குளம், கொம்பூதி உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

   அப்போது, மாவட்டச் செயலர் ஆர். தர்மர், எம்.எல்.ஏ. எம். முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம். சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலர் மீனாட்சிசுந்தரம், தொகுதி கழகச் செயலர் காளிமுத்து மற்றும் மாவட்டக் கவுன்சிலர்கள் சதன்பிரபாகர், முத்துராமலிங்கம், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலர் ஷங்கரபாண்டியன், பாசறை செயலர் வி.கே.சி. முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட, அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த கீர்த்திகா முனியசாமி, தொகுதியின் தேர்தல் துணை அலுவலர் கே.கே. கோவிந்தனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின்போது, கமுதி பாசறை செயலர் வி.கே.சி. முத்துராமலிங்கம் முன்மொழிந்தார்.

வேட்பாளருடன், மாவட்டச் செயலர் ஆர். தர்மர், எம்.எல்.ஏ. முருகன், தொகுதி செயலர் காளிமுத்து, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம். சுந்தரபாண்டியன், மாவட்டக் கவுன்சிலர் சதன்பிரபாகர் ஆகியோர் இருந்தனர்.

 இவரது கணவர் முனியசாமி மாற்று வேட்பாளராக தேர்தல் துணை அலுவலர் கே.கே. கோவிந்தனிடம் மனு தாக்கல் செய்தார்.

வேட்பாளரின் சொத்து மதிப்பு விவரம்

கையிருப்பு ரூ. 1 லட்சம், வங்கிக் கணக்கில் ரூ.1,28,630. அசையும் சொத்து மதிப்பு ரூ. 47 லட்சத்து 11 ஆயிரத்து 802. அசையா சொத்து ரூ. 3 லட்சம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 28,2016,

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி இரண்டாம் கட்டமாக புதன்கிழமை வாக்குகள் சேகரித்தார்.

  முதுகுளத்தூர் ஒன்றியம் காமராஜபுரம், காக்கூர், உடைகுளம், மேலத்தூவல், விளங்குளத்தூர், வெண்ணீர்வாய்க்கால் என 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்ற   அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.

  அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் எம். முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, ஜெ. பேரவை மாவட்டப் பொருளாளர் மலைக்கண்ணன், முதுகுளத்தூர் ஒன்றியச் செயலர் ஆர். கருப்பசாமி, ஒன்றியக் கவுன்சிலர்கள் தூரி. மாடசாமி, செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

கமுதி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 25,2016,

கமுதி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகாமுனியசாமி இரண்டாம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் சேகரித்தார்.

கமுதி ஒன்றியம் சடையனேந்தல், மருதங்கநல்லூர், பசும்பொன், உலகநடை நந்திசேரி, பேரையூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று அவர் வாக்குகள் சேகரித்தார். அப்போது நந்திசேரி கிராமத்தினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்பு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகி 120க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக் குழுத் தலைவர் டி.பாலு உள்ளிட்ட பலர் சென்றனர்.

 

கடலாடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 24,2016,

கடலாடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

கடலாடி ஒன்றியம் சித்திரங்குடி, கிடாத்திருக்கை, எஸ்.பி.கோட்டை, இளஞ்செம்பூர் உள்பட 23-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்குகள் கேட்டார். அப்போது, அவருக்கு கிராமத்தினர் வரவேற்பு அளித்தனர்.

உடன், சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலர் முனியசாமிபாண்டியன், துணைச் செயலர் சண்முகபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் சென்றனர்.

 

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி வாக்குகள் சேகரிப்பு

ஏப்ரல் 23,2016,

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி  2 ஆம் கட்டமாக வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்தார்.

முதுகுளத்தூர் அருகே வெங்கலக்குறிச்சி, பொசுக்குடி, திருவரங்கம், கொழுந்துறை உள்பட 29-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகாமுனியசாமி வாக்குகள் சேகரித்தார். வாக்குகள் சேகரிப்பின் போது மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னால் மாவட்ட செயலாளர் எம்.ஏ முனியசாமி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலாளர் ஆர்.கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் சதன்பிரபாகர், கர்ணன், பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

சாயல்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு

ஏப்ரல் 22,2016,

சாயல்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தார்.

சாயல்குடி ஒன்றியம் ஏர்வாடி, இதம்பாடல்,சிக்கல், ராஜாக்கள்பாளையம், ஆய்க்குடி உள்பட 32 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று அவர் வாக்குகள் சேகரித்தார். அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன்,முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஏ முனியசாமி,சாயல்குடி ஒன்றிய செயலாளர் பி.அந்தோனிராஜ், மாவட்ட கவுன்சிலர் சதன்பிரபாகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் மலைக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

கமுதியை தனி மாவட்டமாக்க அதிமுக வேட்பாளர் உறுதி

ஏப்ரல் 21,2016,

கமுதியை தனி மாவட்டம் ஆக்குவதற்கு முயற்சி செய்வதாக அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி உறுதியளித்தார்.

கமுதி ஒன்றியத்தில் மூன்றாம் நாளாக புதன்கிழமை அவர் வாக்குகள் சேகரித்தார். கோட்டைமேடு, கே.எம்.கோட்டை,சிங்கம்பட்டி, நீராவி கரிசல்குளம் உள்பட 28-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர், கமுதி ஒன்றியத்தில் தொழிற்சாலை சார்ந்த நிறுவனங்களை உருவாக்கி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி முன்னேற்றம் அடைய வழிவகுப்பதாகவும், கமுதியை தனி மாவட்டமாக மாற்ற முயற்சி செய்வேன் என்றும் உறுதியளித்தார். அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஏ முனியசாமி, மாவட்ட ஊராட்சி குழுதலைவர் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக்குழுத்தலைவர் டி.பாலு உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

 

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 21,2016,

முதுகுளத்தூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி  2வது நாளாக செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தார்.

காத்தாகுளம், கீழமானாங்கரை, கருமல், தேரிருவேலி, தாலியரேந்தல் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்ற அவர் வீடுவீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.ஏ முனியசாமி, ஒன்றியச் செயலர் ஆர்.கருப்பசாமி, மாவட்டக் கவுன்சிலர் சதன்பிரபாகர், நகர் அவைத் தலைவர் வி.கருப்பசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

 

முதுகுளத்தூரில் அதிமுக ஆலோசனை கூட்டம்

ஏப்ரல் 20,2016,

முதுகுளத்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு எம்.பி.அன்வர்ராஜா தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்டச் செயலர் ஆர்.தர்மர், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் முனியசாமி, ஒன்றியச் செயலர் ஆர்.கருப்பசாமி, தொகுதி செயலாளர் காளிமுத்து, மாவட்டக் கவுன்சிலர்கள் கர்ணன், சதன்பிரபாகர், நகர் அவைத் தலைவர் வி.கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஏப்ரல் 18,2016,

முதுகுளத்தூர் அருகே ஆப்பனூர் ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயிலில் அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினார். இதில், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. எம். முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, ஒன்றியச் செயலர் ஆர். கருப்பசாமி, ஒன்றியக்குழுத் தலைவர் ஐ. சுதந்திரகாந்தி இருளாண்டி, மாவட்ட கவுன்சிலர் என். சதன்பிரபாகர், ஆப்பனூர் ஊராட்சித் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

மேலக்கொடுமலூர் முருகன் கோயிலில் அதிமுக வேட்பாளர் சிறப்பு வழிபாடு

ஏப்ரல் 17,2016,

மேலக்கொடுமலூர் முருகன் கோயிலில் முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினார்.

முதுகுளத்தூர் தொகுதியில் வெற்றி பெற வேண்டியும், முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டியும் இந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் வேட்பாளருடன் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.ஏ முனியசாமி, ஒன்றிய செயலாளர் ஆர்.கருப்பசாமி, ஒன்றியக்குழுத் தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி மாவட்ட கவுன்சிலர் என்.சதன்பிரபாகர், ஒன்றியக் கவுன்சிலர் உடை எம்.சிவக்குமார், பாசறை செயலாளர்கள் மாரி,வி.கே.சி முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் வாழ்க்கைத்தரம் உயர பாடுபடுவேன் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்குறுதி

Poor-simple-people-farmers--The-best-standard-of-living_SECVPFபுதன், ஏப்ரல் 13,2016,

கமுதி,

ஏழை–எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபடுவேன் என்று முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி உறுதி அளித்தார்.

வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி கமுதியில் அனைத்து சமுதாய சங்கங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டினார். கமுதி மறவர் சங்கம், அகமுடையார் சங்கம், சத்ரிய நாடார் உறவின்முறை, கிறிஸ்தவ பரத உறவின்முறை, விஸ்வகர்ம உறவின்முறை, கவுரவ செட்டியார் உறவின்முறை உள்பட சமுதாய நிர்வாகிகளையும், பிரமுகர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

முன்னதாக அவர் முத்துமாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், கிறிஸ்தவ ஆலயம் போன்றவற்றில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து வேட்பாளர் கூறியதாவது– முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆசியுடன் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அனைத்து சமுதாய மக்களின் எண்ணங்களை, குறைகளை நிவர்த்தி செய்து கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். ஏழை–எளிய மக்கள், மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபடுவேன்.

வேலை வாய்ப்புகள்

விவசாய குடும்பத்தில் பிறந்த நான் விவசாயிகளின் கவலைகளையும், கஷ்டங்களையும் போக்க பாடுபடுவேன். பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர முதல்–அமைச்சர் ஜெயலலிதா அரும்பாடுபட்டு வருகிறார். அவரது வழியில் நானும் தொண்டாற்றுவேன். முதுகுளத்தூர் தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவேன். இவ்வாறு அவர் பேசினார்.

அவருடன் முருகன் எம்.எல்.ஏ., இளைஞரணி மாநில இணை செயலாளர் சதன் பிரபாகர், கமுதி ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், யூனியன் தலைவர் பாலு, ஒன்றிய பாசறை செயலாளர் முத்துராமலிங்கம், கருப்புச்சட்டை முருகேசன், கந்து இக்பால், சதிஷ்குமார், குப்பம்மாள், அமுல்ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஏப்ரல் 13,2016,

முதுகுளத்தூர், பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் நடைபெற்றன.

முதுகுளத்தூரில்… அதிமுக கட்சி அலுவலகத்தில், வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர்,ஒன்றிய செயலாளர் ஆர்.கருப்பசாமி, ஒன்றியக்குழு தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். அறிமுக கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் சதன்பிரபாகர்,நகர் அவைத் தலைவர் வி.கருப்பசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.செய்யதுகாதர், வழக்குரைஞர் பிரிவு செயலர் அறியப்பன், ஜெயலிலிதா பேரவை மாவட்ட பொருளாளர் மலைக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் இந்து சமுதாய சங்கத்தினர் மற்றும் பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 12,2016,

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் இந்து சமுதாய சங்கத்தினர் மற்றும் பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

 முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் எம்.கீர்திகா முனியசாமி இந்து சமுதாய சங்கத் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய ஜமாத் தலைவர்களை சந்தித்து  தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கூறி வாக்குகள் சேகரித்தார். வாக்குகள் சேகரிப்பின் போது சட்டப்பேரவை உறுப்பினர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஏ முனியசாமி, கவுன்சிலர்கள் சீனிமுகம்மது, செந்தில்குமார்,மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர்  சங்கரபாண்டியன்,மேலவை பிரதிநிதி பழனிச்சாமி, ஒன்றிய பொருளாளர் பழனிவேல், நகர் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வம்,ராமர் உள்ளிட்டோர் இருந்தனர்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Murugan M AIADMK 83225
Thirteenth 2006-2011 Murugavel.K. DMK 51555
Twelfth 2001-06 Patinetampatian. K ADMK 49554
Eleventh 1996-01 S. Balakrishnan TMC(M) 41850
Tenth 1991-96 Balakrishnan S. INC 40065
Ninth 1989-91 Kather Batcha Alias Vellachamy, S. DMK 30787
Eighth 1984-89 Muthuvel, K. IND 32199
Seventh 1980-84 Dhanukkodi Thevar,K. IND 42711
Sixth 1977-80 S. Balakrishnan INC 17709
Fifth 1971-77 Kadher Batcha Alias Vellaichind IND 18267

History of Ramanathapuram District

Pamban Bridge

Ramanathapuram also known as Ramnad, is a city and a municipality in Ramanathapuram district in the Indian state of Tamil Nadu. It is the administrative headquarters of Ramanathapuram district and the second largest town (by population) in Ramanathapuram district.

In 1910, Ramanathapuram was formed by clubbing portions from Madurai and Tirunelveli district. Shri J.F. BRYANT I.C.S was the first collector. And this district was named as Ramanathapuram. During the British period this district was called “Ramnad”. The name continued after independence. Later the district was renamed as Ramanathapuram to be in conformity with the Tamil Name for this region.

Tourists visit Ramnad to see the Raja Palace, still occupied by the former Sethupaty Raja and his family. Although no longer in power, the family contributes to the community by setting up schools and hospitals. Ramanathapuram is close to Rameswaram and Devipattinam, both important pilgrimage centres.Uchipuli, a main tourist place, which connects through airways Ariyamaan Beach is one among the popular entertainment beaches in Uchipuli. Puduvalasai, Panaikulam, Alagankulam beaches are also popular in Ramnad.

 

Ramanathapuram District Map

Ramanathapuram Area:

Area Sq. Km: 4,104

Ramanathapuram Population:

Male: 682,658
Female: 670,787
Total: 1,353,445

Literacy Rates

Male: 87.81%
Female: 73.52%
Total: 80.72%