Paramakudi (SC)

MLA Mr. S. Sundararaj

 

 

MLA Mr. S. Sundararaj

 

 

Father Name SANNASI
Party AIADMK
Date of Birth 18th April 1950
Place of Birth Karumal
Marital Status Married
Address Chennai:          C9C, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002
Mofussil:         No. 2/96, D2, Singarathoppu, Paramakudi, Ramanathapuram District-623 707
Telephone Chennai–Residence:   044-25361506
Mofussil–Residence: 04564-226460
E-mail mlaparamakudi@tn.gov.in
Education M.B.B.S

Paramakudi (SC) (State Assembly Constituency)

Paramakudi is a state assembly constituency in Tamil Nadu. It is a Scheduled Caste reserved constituency. It is a component of Ramanathapuram Lok sabha constituency.

Total Voters:

Male: 1,22,894
Female: 1,23,252
Transgender: 20
Total: 2,46,166

 

பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 14,2016,

பரமக்குடி தொகுதிக்குள்பட்ட நயினார்கோவில், போகலூர், அபிராமம், பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

  நயினார்கோவில் ஒன்றியச் செயலர் ப. குப்புச்சாமி தலைமையில், கட்சி நிர்வாகிகளுடன் அந்த ஒன்றியத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தார்.  தொடர்ந்து, பரமக்குடி ஒன்றியச் செயலர் கே. முத்தையா தலைமையில், பார்த்திபனூர் ஊராட்சி, அபிராமம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் சென்று அதிமுக அரசின் சாதனை திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்தார். அதேபோல், போகலூர் ஒன்றியச் செயலர் ஜி. நாகநாதன் தலைமையில், அப்பகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா வாக்கு சேகரித்தார்.

 மாலையில், பரமக்குடி நகரில் கெளரியம்மன் கோயில் தெரு, பகவத்சிங் ரோடு, பெரியகடை வீதி உள்பட முக்கிய வீதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி பிரசாரம் மேற்கொண்டார்.

 வேட்பாளருடன், நகரச் செயலர் எஸ்.வி. கணேசன், தலைமைக் கழகப் பேச்சாளர் எம்.கே. ஜமால், மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஏ. பாதுஷா. முன்னாள் மாவட்டச் செயலர் சோமாத்தூர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் எம். நாகராஜன் உள்பட பலரும் சென்றனர்.

பரமக்குடி நகரில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 13,2016,

பரமக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா வியாழக்கிழமை பரமக்குடி நகர் மற்றும் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

       பரமக்குடி ஒன்றியத்தில் பார்த்திபனூர் ஊராட்சி மற்றும் அபிராமம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் அவர் சென்று அதிமுக அரசின் சாதனை திட்டங்களை விளக்கி வாக்குச் சேகரித்தார். இதனைத் தொடர்ந்து மாலையில் பரமக்குடி நகரில் தெற்கு பள்ளிவாசல், சந்தைக்கடை, ஆர்ச் பகுதி, காந்திசிலை பெரியகடை வீதி உள்பட நகரின் முக்கிய வீதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.

     பிரசாரத்தில் அவர் பேசியது: ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 80 கோடியில் 4 இடங்களில் முதல்வர் தடுப்பணைகள் கட்டித் தந்துள்ளார். இதனால் வீணாக கடலில் கலக்கும் மழைநீர் முற்றிலும் தடுக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மூடப்பட்ட அச்சங்குளம் நூற்பாலை ரூ.28 கோடியில் புனரமைக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.   அதிமுக அரசு மீண்டும் ஆட்சியில் அமர அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.  அதிமுக நகர் செயலாளர் எஸ்.வி.கணேசன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஏ.பாதுஷா, எஸ்.பாலுச்சாமி செட்டியார், விவசாய அணி செயலாளர் ஐ.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் சோமாத்தூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

பரமக்குடி தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன்: அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

மே 12,2016,

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்ற பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளரான டாக்டர் எஸ்.முத்தையா பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

 பரமக்குடி நகர் மற்றும் ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை அவர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். சின்னக்கடைத் தெரு, எஸ்.எஸ்.கோவில் தெரு, வாணியர் தெரு மற்றும் செளராஷ்ட்ர மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீடு,வீடாக வழங்கி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியது: மருத்துவச் சேவையின் மூலம் இப்பகுதி மக்களிடம் எளிமையாகப் பழகி வந்த எனக்கு பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்தியுள்ளார். நான் இத்தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்ற பாடுபடுவேன். மேலும் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதுடன், பெண்கள் சுய தொழில் துவங்கிட வேண்டிய வசதிகள் செய்து தரவும் பாடுபடுவேன் என்றார்.

பிரசாரத்தில் அதிமுக நகர் செயலாளர் எஸ்.வி.கணேசன், ஒன்றியச் செயலாளர் கே.முத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ.பாதுஷா, முன்னாள் மாவட்டச் செயலாளர் சோமாத்தூர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் எம்.நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கட்சியின் தலைமை கழக பேச்சாளர் எம்.கே.ஜமால் தலைமையில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எம்.எஸ்.திலகர், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பொருளாளர் கே.அப்துல்மாலிக், அவைத் தலைவர் நயினாமுகம்மது ஆகியோர் அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கி நகரில் பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்தனர்.

பரமக்குடியில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு

மே 10,2016,

பரமக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையாவுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

  அதிமுக தலைமை கழகப் பேச்சாளர் எம்.கே.ஜமால், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ஜபருல்லாகான், பொதுக்குழு உறுப்பினர் எம்.நாகராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் கே.அப்துல்மாலிக், அவைத் தலைவர் நயினாமுகம்மது ஆகியோருடன் ஐந்துமுனை சந்திப்பு, அண்ணாநகர், அலங்கார மாதா தெரு, பகவத்சிங் சாலை உள்ளிட்ட நகரில் முக்கிய வீதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். அவர் சென்ற தெருக்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

 அப்போது அவர் பேசியது:அதிமுகவின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டவுடன் ஏழை, எளிய மக்களும், பெண்களும் உற்சாகமாக உள்ளனர்.

 இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சியினர் பொய் பிரசாரத்தை அவிழ்த்து விடுகின்றனர்.

 அமைதி, வளம், வளர்ச்சி என்ற மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அதிமுக அரசு மீண்டும் ஆட்சியமைக்க எனக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பரமக்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 08,2016,

பரமக்குடி ஒன்றியம் மற்றும் அபிராமம் பேரூராட்சி பகுதிகளில் சனிக்கிழமை அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

பரமக்குடி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் காலை 8 மணியிலிருந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையைக் கண்டு எதிர்க்கட்சியினர் கலங்கிப் போய் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல், இந்த முறையும் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சி தொடர மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

வேட்பாளருடன், பரமக்குடி ஒன்றியச் செயலர் கே. முத்தையா, மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஏ. பாதுஷா, பார்த்திபனூர் தங்கவேல், ஒன்றியக் கவுன்சிலர் எஸ். ராமு யாதவ் ஆகியோரும் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தனர்.

பரமக்குடி நகர் மற்றும் ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 07,2016,

பரமக்குடி நகராட்சி மற்றும் ஒன்றியங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

  பரமக்குடி நகராட்சி பகுதியில் காலை 8 மணியளவில் தனது பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர், காந்தி நகர், எஸ்.எஸ்.கோவில் தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தார். இவருடன், நகரச் செயலர் எஸ்.வி. கணேசன், தலைமை கழகப் பேச்சாளர் எம்.கே. ஜமால், நகர்மன்ற உறுப்பினர் கே. அப்துல்மாலிக் ஆகியோரும் சென்றிருந்தனர்.

  தொடர்ந்து, மாலையில் பரமக்குடி ஒன்றியச் செயலர் கே. முத்தையா, மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஏ. பாதுஷா, ராமு யாதவ் ஆகியோருடன் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தார்.

   அப்போது வேட்பாளர் பேசியதாவது: கடந்த 2011 தேர்தலின் போது ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது  வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, விவசாயக் கடன் தள்ளுபடி என எழை, எளிய கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இத்

திட்டங்கள் நிறைவேறிட அதிமுகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அதிமுக வேட்பாளர் எஸ்.முத்தையா கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு

மே 06,2016,

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நயினார்கோவில் ஒன்றியத்தில் வியாழக்கிழமை அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா கட்சி நிர்வாகிகளுடன் கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

நயினார்கோவில் அதிமுக ஒன்றியச் செயலாளர் ப.குப்புச்சாமி தலைமையில் அரசு வழக்குரைஞர் நவநாதன், பொதுக்குழு உறுப்பினர் எம்.நாகராஜன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஜி.ரஜினிகாந்த், ஒன்றியக் கவுன்சிலர் கோவிந்தன் ஆகியோர் வேட்பாளர் முத்தையாவுடன் சென்றனர். நயினார்கோவில் ஒன்றியம் வாகவயல் கிராமத்தில் தொடங்கி மருதூர், அரியாங்கோட்டை, கருப்பூர், குன்றத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு அவர்கள் சென்று வாக்குகளை சேகரித்தனர். அப்போது வேட்பாளர் கூறியது: கடந்த 5 ஆண்டுகால அதிமுக அரசு தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளது. குறிப்பாக கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திடும் வகையில் 4 வெள்ளாடுகள், கறவை மாடுகள், வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடுகள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, இலவச பேருந்து வசதி என பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றித் தந்தவர் முதல்வர் ஜெயலலிதா. அவரது ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர்ந்திட அவரது பிரதிநிதியாக நிறுத்தப்பட்டுள்ள எனக்கு அனைத்து சமுதாய மக்களும் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சத்திரக்குடியில் பேருந்து நிலையம்: அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

மே 03,2016,

பரமக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா திங்கள்கிழமை போகலூர் ஒன்றிய பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது சத்திரக்குடியில் பேருந்து நிலையம் அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்தார்.

 போகலூர் ஒன்றியத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா தொடங்கினார். ஒன்றியக்குழுத் தலைவர் ஜி.நாகநாதன் தலைமையில் அவைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் கே.சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் தென்னவனூர் சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜாராம் பாண்டியன், பாஸ்கரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். போகலூர் ஊராட்சி, தென்னவனூர், தெய்வேந்திரநல்லூர், கீழக்கோட்டை, முத்துவயல், சத்திரக்குடி உள்பட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

 அப்போது சத்திரக்குடியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என வேட்பாளர் உறுதியளித்தார்.

எமனேசுவரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 01,2016,

பரமக்குடி தொகுதியிலுள்ள எமனேசுவரம் பகுதியில் சனிக்கிழமை அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

அதிமுக நகர் செயலர் எஸ்.வி. கணேசன் தலைமையில், நகர்மன்ற துணைத் தலைவர் டி.என். ஜெய்சங்கர், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பொருளாளர் கே. அப்துல் மாலிக், பொதுக்குழு உறுப்பினர் எம். நாகராஜ், அவைத் தலைவர் நயினாமுகம்மது, மாவட்டப் பிரதிநிதி கனகராஜ், நகர் துணைச் செயலர் ரவி ஆகியோருடன் வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா, எமனேசுவரம் 8 ஆவது வார்டு முழுவதும் வாக்கு சேகரித்தார்.

அப்போது வீடுவீடாகச் சென்ற அவர், மக்களின் தேவையை அறிந்து உடனுக்குடன் திட்டங்களை நிறைவேற்றும் அதிமுக அரசுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பரமக்குடி நகரில் அதிமுகவினர் பிரசாரம்

ஏப்ரல் 30,2016,

பரமக்குடி நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா வெள்ளிக்கிழமை பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட மேற்கு பகுதியில், அதிமுக மாவட்டச் செயலர் ஆர். தர்மர் தலைமையில், நகர்மன்ற துணைத் தலைவர் டி.என். ஜெய்சங்கர், நகர் செயலர் கணேசன், தலைமை கழகப் பேச்சாளர் எம்.கே. ஜமால், பொதுக்குழு உறுப்பினர் எம். நாகராஜன், அர்பன் வங்கி தலைவர் வடிவேல்முருகன் ஆகியோர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தனர்.  அப்போது வேட்பாளர் பொதுமக்களிடம் கூறியது: பரமக்குடி தொகுதி அதிமுகவின் கோட்டை என நிரூபிக்கும் வகையில்ஸ அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்யவேண்டும். இதன்மூலம், மேலும் பல நல்ல திட்டங்களால் நம் தொகுதி மேம்படும் எனக் கேட்டுக்கொண்டார்.

  பிரசாரமானது, சேதுபதி நகரில் தொடங்கி மணி நகர், முல்லை நகர், காட்டுப் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

பரமக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட, அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிமுக சார்பில் டாக்டர் எஸ். முத்தையா கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சு. சமீரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன், அமைச்சர் எஸ். சுந்தரராஜ், ஒன்றியச் செயலர்கள் கே. முத்தையா, ஜி. நாகநாதன், ப. குப்புச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

 அவரது வேட்பு மனுவில், அசையா சொத்துகளாக வீடு மற்றும் மருத்துவமனை ரூ. 1.65 கோடியும், குடும்பச் சொத்தாக வீட்டுமனை நிலங்கள் ரூ. 1.76 கோடியும், அசையும் சொத்தாக வங்கிக் கணக்கு உள்பட ரூ. 30,80,400, தனது பெயரில் கடன் ரூ. 23,36,623 உள்ளதாகவும், மனைவி சாந்தி பெயரில் அசையா சொத்தாக ரூ. 17,65,000 உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

பரமக்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 28,2016,

பரமக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா, கிராமம் கிராமமாகச் சென்று புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.

  பரமக்குடி அதிமுக ஒன்றியச் செயலர் கே. முத்தையா தலைமையில், முன்னாள் மாவட்டச் செயலர் சோமாத்தூர் சுப்பிரமணியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் பாலசிங்கம், மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஏ. பாதுஷா, வழக்குரைஞர் பிரிவு வெங்கடேசன், ஊராட்சிமன்றத் தலைவர் ரேணுகா தங்கவேல் மற்றும் கட்சி தொண்டர்களுடன் வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா கிராமம் கிராமமாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

  பொதுவக்குடி கிராமத்தில் தொடங்கி தெளிச்சாத்தநல்லூர், அன்டக்குடி, சோமநாதபுரம், நண்டுப்பட்டி, குழவிப்பட்டி, வெங்காளூர், சங்கங்கோட்டை, கீழப்பார்த்திபனூர் உள்பட பல்வேறு கிராமங்களின் அதிமுக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர்.  அப்போது வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா பேசியது: கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் சாதனைத் திட்டங்களால், தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் மக்கள் அமைதியுடன் வாழ்ந்திடவும், நல்லாட்சி மலர்ந்திடவும் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக்  கேட்டுக்கொண்டார்.

 

அதிமுக வெற்றி உறுதி: எம்.பி.

ஏப்ரல் 26,2016,

அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என, பரமக்குடி காந்தி சிலை முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா பேசினார்.

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் எஸ்.முத்தையா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு அன்வர்ராஜா பேசியது: மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றிபெற்று இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக திகழ்கிறது. நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவின் வெற்றி உறுதியாகி விட்டது, தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் அனைவரும் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையாவுக்கு வாக்களித்து ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என பேசினார்.

கூட்டத்திற்கு நகர் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். தலைமைக் கழக பேச்சாளர் எம்.கே.ஜமால், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆ.பாலுச்சாமி, எம்.எஸ்.திலகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் திசைநாதன், நெல்லை பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பரமக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 25,2016,

பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக வேட்பாளர் எஸ்.முத்தையா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 பரமக்குடி வைகை ஆற்றின் வலதுபுறம் உள்ள அணுகு சாலைப் பகுதியில் அதிமுக நிர்வாகிகளுடன், அவர் சித்திரைத் திருவிழாவுக்கு சென்ற பொதுமக்களிடம் சனிக்கிழமை இரவு வாக்குச் சேகரித்தார். அப்போது இளைஞர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலையம், ரயில்வே பீடர் சாலை, அண்ணாநகர், கொல்லம்பட்டரை தெரு, உழவர் சந்தை பகுதியில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்குச் சேகரித்தார்.

 அப்போது நகர் செயலர் எஸ்.வி.கணேசன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பொருளாளர் கே.அப்துல்மாலிக், இலக்கிய அணி செயலர் எம்.எஸ்.திலகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.நாகராஜன், மீனவரணி விஜி, செந்தில் உள்பட பலர் உடன் சென்றனர்.

 

அதிமுக வேட்பாளர் எஸ்.முத்தையா வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 24,2016,

பரமக்குடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் எஸ்.முத்தையா வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவில் தொடங்கி மலையான்குடியிருப்பு, ஜீவாநகர், கமலாநேரு நகர் ஆகிய பகுதிகளிலும், பரமக்குடி நகரில் சந்தைக்கடைத் தெரு, மாதவன் நகர், பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் வீடு, வீடாகச் சென்று அவர் வாக்குச் சேகரித்தார்.

இதையடுத்து, பரமக்குடி ஒன்றியத்தில் வேந்தோணி, முத்துச்செல்லாபுரம், குருவிப்பொட்டல், எஸ்.காவனூர் ஆகிய கிராமங்களில் வாக்குச் சேகரித்தார்.

உடன் நகர் செயலர் கணேசன், நிர்வாகிகள் எம்.கே.ஜமால், திசைநாதன், வரதன், கனகராஜ், ஒன்றியச் செயலர் கே.முத்தையா மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

 

“அதிமுக ஆட்சியில் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்”

ஏப்ரல் 23,2016,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிரதிநிதியாக நினைத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என வாக்காளர்களிடம் பரமக்குடி அதிமுக வேட்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.

 இத்தொகுதியின் அதிமுக  வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா வெள்ளிக்கிழமை பரமக்குடி நகர் மற்றும் ஒன்றியத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியது: முதல்வர் ஜெயலலிதாவின் முன்னோடி திட்டங்களால் தமிழகம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. பெண் கல்வி அவசியம் என்பதை உணர்ந்து பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ. 25 ஆயிரமும், பட்டம் படித்த பெண்களுக்கு ரூ. 50 ஆயிரமும் தாலிக்கு தங்கமும் வழங்கினார்.

இதனால் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகமெங்கும் பெண்களின் கல்வி உயர்ந்துள்ளது. வாய்ப்பளித்த மக்களுக்கு சேவை செய்யாதவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். இதனையே அனைவரும் விரும்புகின்றனர். மக்களுக்குத் தேவையான திட்டங்களையும், வருங்காலங்களில் தேவைப்படும் திட்டங்களையும் நிறைவேற்றும் ஒரே தலைவி முதல்வர் ஜெயலலிதா. அவரது ஆட்சி மீண்டும் மலர்ந்திட அவரது பிரதிநிதியாக நிறுத்தப்பட்டுள்ள எனக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

 

மக்களின் தேவைகளை அறிந்து  உடனுக்குடன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றவும் பாடுபடுவேன் : பரமக்குடி அதிமுக வேட்பாளர்

ஏப்ரல் 22,2016,

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா பொதுமக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

 பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் சங்கீதா, விவசாய அணி மாவட்ட செயலாளர் ஐ.கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் எஸ்.சரவணபாண்டியன், இளைஞரணி ஒன்றிய செயலாளர் கே.சுப்பிரமணி, இளைஞரணி பி.முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் எஸ்.முத்தையா 36-ஆவது வார்டில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கிருந்து பங்களா ரோடு, திருவரங்கம் சாலை, பர்மா காலனி, காமராஜர் தெரு, சந்தைக்கடை ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வாக்குச் சேகரித்தார்.  பிரச்சாரத்தின்போது அவர் பேசியது: பரமக்குடி தொகுதி மக்கள் பயன்பெரும் வகையில் ரூ 10 கோடியில் வைகை ஆற்றின் இருகரைகளிலும் அணுகு சாலையும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ. 37 கோடியில் ரயில்வே மேம்பாலமும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கிடவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் வெள்ள நீர் கொண்டு செல்லும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 80 கோடியில் 4 இடங்களில் தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுபோன்ற நல்ல பல திட்டங்கள் கிடைத்திடவும், இப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து  உடனுக்குடன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றவும் பாடுபடுவேன் என அவர் பேசினார். வாக்குச் சேகரிப்பின் போது கட்சியின் நகர், கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

போகலூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையாவுக்கு உற்சாக வரவேற்பு

ஏப்ரல் 21,2016,

பரமக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையாவுக்கு புதன்கிழமை போகலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

போகலூர் ஒன்றியக்குழு தலைவர் ஜி.நாகநாதன், மாவட்ட கவுன்சிலர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக வேட்பாளர் எஸ்.முத்தையா அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக எமனேசுவரம் பகுதியில் நகர் செயலாளர் எஸ்.வி.கணேசன், தலைமைக் கழக பேச்சாளர் எம்.கே.ஜமால் தலைமையில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து போகலூர் ஒன்றியத்திற்கு வாக்குச் சேகரிக்கச் சென்ற அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். போகலூரில் தொடங்கி சேமனூர், அரியகுடி, உரத்தூர், எஸ்.கொடிக்குளம் உள்பட பல்வேறு கிராமங்களுக்கும் அவர் சென்று பொதுமக்களிடம் வாக்குக் கேட்டார்.

அப்போது அவர் பேசுகையில், வரும் காலங்களில் என்னென்ன தேவை என்பதை அரசுக்கு எடுத்துக்கூறி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன். சத்திரக்குடியில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிவரும் பேருந்து நிறுத்தம் அமைக்கவும், பின்தங்கிய இம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திடவும் பாடுபடுவேன். மீண்டும் ஜெயலலிதா முதல்வராக எனக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

 

அ.தி.மு.க. அசைக்க முடியாத பேரியக்கம்: பரமக்குடிதொகுதி வேட்பாளர் டாக்டர் முத்தையா பேச்சு

தமிழ்நாட்டில் மீண்டும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி - அன்வர்ராஜா எம்.பி. ஏப்ரல் 21,2016,

தமிழ்நாட்டில் மீண்டும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என அன்வர்ராஜா எம்.பி. பேசினார்.

ஆதரவு

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் முத்தையா பரமக்குடி சவுராஷ்டிரா சபை மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவருக்கு பல்வேறு அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து ஆயிரவைசிய ஜவுளி வியாபாரிகள் திருமண மகாலில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் கணேசன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து அன்வர்ராஜா எம்.பி. பேசியதாவது:– தற்போது நடைபெற உள்ள தேர்தல் வித்தியாசமான தேர்தல். இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு மிகவும் சாதகமான களம். அ.தி.மு.க.வின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டதாகும். கடந்த சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகிய அனைத்திலும் அ.தி.மு.க. வாக்கு வங்கிகள் உயர்ந்துள்ளன. அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. குறிப்பாக பெண்கள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாக்களித்து அவரை மீண்டும் முதல்–அமைச்சராக்க வேண்டும் என முடிவு செய்து திரண்டு விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

பேரியக்கம்

அதனை தொடர்ந்து பரமக்குடி தொகுதி வேட்பாளர் டாக்டர் முத்தையா பேசியதாவது:– மக்கள் பணியாற்றக்கூடிய பணியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா எனக்கு வழங்கிஉள்ளார். தொண்டர்கள் எந்தநேரமும் என்னை அணுகலாம். தொண்டர்களின் தொண்டனாக இருந்து பணியாற்றுவேன். அ.தி.மு.க. அசைக்க முடியாத பேரியக்கம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்–அமைச்சராக்க நாம் பாடுபடுவேம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஜமால், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், கூட்டுறவு சங்க வீட்டு வசதி சங்க தலைவர்கள் திலகர், திசைநாதன், துணை தலைவர் உதுமான் அலி, பொதுக்குழு உறுபபினர் நாகராஜன், மீனவரணி செயலாளர் விஜயராஜன், அவை தலைவர் நயினா முகமது, துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், மணிவாசகம், முன்னாள் நகர் செயலாளர் வரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வடிவேல் முருகன் நன்றி கூறினார்.

 

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஏப்ரல் 13,2016,

முதுகுளத்தூர், பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் நடைபெற்றன.

பரமக்குடியில்… நயினார்கோவிலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் அவைத் தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், ஒன்றிய செயலாளர் பா.குப்புச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ஜி.ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் கடந்த 5 ஆண்டு கால தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார். பரமக்குடி வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையாவை, மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா அறிமுகம் செய்து வைத்து பேசினார். கூட்டத்தில் நயினார்கோவில் ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

பரமக்குடி தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தையா உறுதி

பரமக்குடி தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தையா உறுதிசெவ்வாய், ஏப்ரல் 12,2016,

பரமக்குடி,

பரமக்குடி தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் முத்தையா கூறினார்.

தடுப்பணைகள்

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.முக. வேட்பாளர் டாக்டர் முத்தையா எமனேசுவரம் சவுராஷ்டிரா சபை, சவுராஷ்டிரா சமூக நலச்சங்கம், சவுராஷ்டிரா சமாஜ் சேவா சங்கம் ஆகியவற்றுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் ராமநாதபுரம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ், பொருளாளர் செய்யது இபுராகீம், துணை செயலாளர் பைசல் ரசீது, நகர் செயலாளர் சாகுல்ஹமீது, ஒருங்கிணைப்பாளர் ஹபீப் ரகுமான் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அவரிடம் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அயராது உழைப்போம் என்றும், இஸ்லாமியர்களின் வாக்குகளை முழுமையாக பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்வோம் என்றும் உறுதி அளித்தனர். தொடர்ந்து வேட்பாளர் முத்தையா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நகர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். எமனேசுவரம் பகுதியில் வாக்குசேகரித்து வேட்பாளர் டாக்டர் முத்தையா பேசியதாவது:– முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போதெல்லாம் பரமக்குடி தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ரூ.80 கோடியில் 4 தடுப்பணைகள், ரெயில்வே மேம்பாலம், வைகை ஆற்றின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் போன்றவை அமைக்கப்பட்டுஉள்ளன.

வாழ்க்கை தரம்

பரமக்குடி தொகுதியில் உள்ள கிராமப்புற ஏழை மாணவ–மாணவிகளுக்காக அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட்டுஉள்ளது. இருண்டு கிடந்த தமிழகத்தை மீட்டு மின் உற்பத்தியை சீராக்கி மின் தட்டுப்பாடே இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலும், அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், மகளிர் சுய உதவிக்குழு, வாழ்ந்து காட்டுவோம் என பல திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றி வைத்துள்ளார். இந்த நிலை தொடர பொதுமக்கள் அ.தி.முக.வுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும். பரமக்குடி தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவருடன் தலைமை கழக பேச்சாளர் ஜமால், நகர் செயலாளர் கணேசன், சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், நகர் மீனவரணி செயலாளர் விஜயராஜன், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் திசைநாதன், அவை தலைவர் நயினா முகமது, மாவட்ட பிரதிநிதி கனகராஜ், முன்னாள் நகர் செயலாளர் வரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Sundararaj.S (Dr) AIADMK 86150
Thirteenth 2006-2011 Ramprabhu.R INC 51075
Twelfth 2001-06 Ramprabhu R TMC(M) 53746
Eleventh 1996-01 Thisaiveeran, U. DMK 44472
Tenth 1991-96 Sundararaj S. ADK 63577
Ninth 1989-91 Sundararaj, S. ADK(JL) 37494
Eighth 1984-89 Balauchamy, K. ADK 54401
Seventh 1980-84 Thavasi, R. ADK 43710
Sixth 1977-80 K. Ugrapandian ADK 27303
Fifth 1971-77 Siraimeettan T. K. DMK 42614

History of Ramanathapuram District

Pamban Bridge

Ramanathapuram also known as Ramnad, is a city and a municipality in Ramanathapuram district in the Indian state of Tamil Nadu. It is the administrative headquarters of Ramanathapuram district and the second largest town (by population) in Ramanathapuram district.

In 1910, Ramanathapuram was formed by clubbing portions from Madurai and Tirunelveli district. Shri J.F. BRYANT I.C.S was the first collector. And this district was named as Ramanathapuram. During the British period this district was called “Ramnad”. The name continued after independence. Later the district was renamed as Ramanathapuram to be in conformity with the Tamil Name for this region.

Tourists visit Ramnad to see the Raja Palace, still occupied by the former Sethupaty Raja and his family. Although no longer in power, the family contributes to the community by setting up schools and hospitals. Ramanathapuram is close to Rameswaram and Devipattinam, both important pilgrimage centres.Uchipuli, a main tourist place, which connects through airways Ariyamaan Beach is one among the popular entertainment beaches in Uchipuli. Puduvalasai, Panaikulam, Alagankulam beaches are also popular in Ramnad.

 

Ramanathapuram District Map

Ramanathapuram Area:

Area Sq. Km: 4,104

Ramanathapuram Population:

Male: 682,658
Female: 670,787
Total: 1,353,445

Literacy Rates

Male: 87.81%
Female: 73.52%
Total: 80.72%