Tiruvadanai

Tiruvadanai is a state assembly constituency in Tamil Nadu

Total Voters:

Male: 1,37,351
Female: 1,34,583
Transgender: 28
Total: 2,71,962

 

திருவாடானை தொகுதியில் நடிகர் கருணாஸ் மனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் போட்டியிட, அதிமுகவின் கூட்டணிக் கட்சியான முக்குலத்தோர் புலிப்படை சார்பில், அதன் நிறுவனத் தலைவரும், நடிகருமான கருணாஸ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 சென்னை சாலிகிராமத்தில் தேவராஜ் நகர் சத்தியமூர்த்தி தெருவில் பூர்ணா அபார்ட்மென்டில் வசித்து வரும் நடிகர் கருணாஸ், திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், தொகுதி தேர்தல் அலுவலர் ராஜசேகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது இவருடன், முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன், ஒன்றியச் செயலர்கள் அசோக்குமார், வ.து.ந. ஆனந்த், கே.சி. ஆணிமுத்து ஆகியோரும் இருந்தனர்.

 

ஆர். எஸ். மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளர் கருணாஸ் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 23,2016,

திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலம் சுற்று வட்டார பகுதியில் அதிமுக வேட்பாளர் கருணாஸ் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

திருவாடானை தாலுகா ஆர். எஸ். மங்கலம் ஒன்றியம், தும்படாகோட்டை, சோழந்தூர், மங்கலம் போன்ற 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார். மேலும் ஆர். எஸ். மங்கலம் பள்ளிவாசலில் உள்ளூர் முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இதில் ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய குழு தலைவர் வதுந.ஆனந்த் நகர் செயலாளர் அஸ்மல்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

திருவாடானைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 22,2016,

திருவாடானைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நடிகர் கருனாஸ் வாக்கு சேகரித்தார்.

 திருவாடானை தாலுகா என். எம். மங்கலத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் மக்களவை உறுப்பினர் அன்வர்ராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து திருவாடானைத் தொகுதி வேட்பாளரும் நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டார். இதன் பின்னர் திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பனைக்குளம் பகுதியில் கருணாஸ் பிரசாரம் செய்தார். அவர் தேர்போகி கிராமத்தில் நூறுநாள் பணிபுரியும் செய்யும் பெண்களிடம் வாக்கு சேகரித்தார். இதில், மாவட்ட செயலாளர் தர்மர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, ஆர். எஸ். மங்கலம் ஒன்றிய செயலளர் வ.து.ந.ஆனந்த், ஒன்றிய செயலாளர் மதிவாணன், செங்கை ராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

திருவாடானைத் தொகுதி வேட்பாளர்  கருணாசை ஆதரித்து  ராமேசுவரத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

ஏப்ரல் 17,2016,

ராமநாதபுரத்தில் அதிமுகவினரின் செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

யாதவ திருமண மகாலில் நடைபெற்ற கூட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.சி.ஆணிமுத்து வரவேற்று பேசினார். கூட்டத்தில் நடிகரும், தி ருவாடானைத் தொகுதி வேட்பாளருமான கருணாஸ் கலந்து கொண்டு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ.அன்வர் ராஜா, கருணாஸ் வெற்றி பெறத் தேவையான யுக்திகளை விளக்கி பேசினார்.

இக்கூட்டத்தில் ராமநாதபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மண்டபம் பேரூராட்சித் தலைவர் தங்க மரைக்காயர், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், மாவட்ட,நகர, ஒன்றியக் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

திருவாடானை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கருணாஸ் பிரசாரம்

Tiruvatanai-seat---Digg-Alliance-candidateKarunas_SECVPFதிங்கள் , ஏப்ரல் 11,2016,

தொண்டி,

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கருணாஸ் பிரசாரம் செய்தார்.

வேட்பாளர் கருணாஸ்

திருவாடானை தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நடிகர் கருணாஸ் திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். முன்னதாக வேட்பாளர் நடிகர் கருணாசுக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து தலைமையில் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அ.தி.மு.க. தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அவர் பிரசாரம் செய்தார்.

திருவாடானை சன்னதி தெருவில் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, தொகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் மதிவாணன், யூனியன் தலைவர் முன்னியம்மாள் ராஜேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கடம்பாகுடி கணேசன், துணை செயலாளர் மருதுபாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். தேர்தல் அலுவலகத்தை ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா திறந்து வைத்தார்.

பிரசாரம்

பிரசாரத்தின்போது அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கருணாஸ் பேசியதாவது– திருவாடானை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா அவருடைய ஆசி பெற்ற வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளார். அவருடைய நல்லாசியுடன் இந்த தொகுதியில் பிரசாரத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவோடு தொடங்கிஉள்ளேன். 2016 சட்டமன்ற தேர்தலில் உலக அரங்கமே வியக்கும் வண்ணம் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று இந்தியாவில் இதுவரை யாரும் பெறமுடியாத மிக பெரிய வெற்றியை பெற்று புதிய சகாப்தம் படைக்கும். திருவாடானை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்புடன் அயாராது உழைத்து இரட்டை இலை சின்னத்தை அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற செய்து மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவின் மலர்ப்பாதங்களில் சமர்பிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் வ.து.ந.ஆனந்த், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ஆர்.எஸ்.மங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அ.தி.மு.க.வினர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கூட்டணி வேட்பாளர் கருணாசுக்கு வாக்கு சேகரித்தனர். தொடர்ந்து தேவகோட்டையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பார்க்கவ குல சங்கத்தின் நிர்வாகிகள் சீனிவாசன், அழகமடை போஸ் உள்பட பலரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து கருணாஸ் ஆதரவு திரட்டினார்.

ஆதரவு

இதேபோல கட்டிவயல் ஊராட்சி தலைவரும், தமிழக கிறிஸ்தவ அகமுடையார் சங்கத்தின் மாநில பொது செயலாளருமான எட்டுகுடி மரியஅருள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அவருடன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சர்புதீன், துணை செயலாளர் கருப்பையா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் செங்கை ராஜன், இளைஞரணி செயலாளர் பாண்டி, மாணவரணி செயலாளர் சண்முகநாதன், இளைஞர் பாசறை செயலாளர் ராம்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கந்தவேல், தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வக்கீல் சுரேஷ், ஒன்றிய பொருளாளர் ஜெயராமன், ஊராட்சி தலைவர் காளை, கூட்டுறவு சங்க தலைவர் சரவணன் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Thangavelan Suba DMK 64165
Thirteenth 2006-2011 Ramasamy.K.R INC 55198
Twelfth 2001-06 Ramasamy K.R. TMC(M) 43536
Eleventh 1996-01 Ramasamy, Kr. TMC(M) 68837
Tenth 1991-96 Ramasamy Ambalam INC 65723
Ninth 1989-91 Eramasamy Ambalam Kr. INC 38161
Eighth 1984-89 Sornalingam, K. INC 47618
Seventh 1980-84 Anguchamy, S. ADK 34392
Sixth 1977-80 Kr. Rm. Kariya Manickam Ambalam INC 32386
Fifth 1971-77 Pr. Shanmugham DMK 40417

History of Ramanathapuram District

Pamban Bridge

Ramanathapuram also known as Ramnad, is a city and a municipality in Ramanathapuram district in the Indian state of Tamil Nadu. It is the administrative headquarters of Ramanathapuram district and the second largest town (by population) in Ramanathapuram district.

In 1910, Ramanathapuram was formed by clubbing portions from Madurai and Tirunelveli district. Shri J.F. BRYANT I.C.S was the first collector. And this district was named as Ramanathapuram. During the British period this district was called “Ramnad”. The name continued after independence. Later the district was renamed as Ramanathapuram to be in conformity with the Tamil Name for this region.

Tourists visit Ramnad to see the Raja Palace, still occupied by the former Sethupaty Raja and his family. Although no longer in power, the family contributes to the community by setting up schools and hospitals. Ramanathapuram is close to Rameswaram and Devipattinam, both important pilgrimage centres.Uchipuli, a main tourist place, which connects through airways Ariyamaan Beach is one among the popular entertainment beaches in Uchipuli. Puduvalasai, Panaikulam, Alagankulam beaches are also popular in Ramnad.

 

Ramanathapuram District Map

Ramanathapuram Area:

Area Sq. Km: 4,104

Ramanathapuram Population:

Male: 682,658
Female: 670,787
Total: 1,353,445

Literacy Rates

Male: 87.81%
Female: 73.52%
Total: 80.72%