முதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து வருகிறார் : புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக  குணமடைந்து வருகிறார் : புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

திங்கள், அக்டோபர் 10,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22ந் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அப்பல்லோ மருத்துவ மனையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து இன்று மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக மருத்துவர்கள்  தெரிவித்தனர். மேலும் அப்பல்லோ நிறுவன தலைவர் மருத்துவர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வெங்கையா நாயுடு, நாராயணசாமி,ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் நலம் விசாரிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வெங்கையா நாயுடு,  நாராயணசாமி,ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் நலம் விசாரிப்பு

திங்கள், அக்டோபர் 10,2016,  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 18–வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் நலம் விசாரித்தனர். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி

முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்றுவர் ; தமிழிசை சவுந்தரராஜன்

முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்றுவர் ; தமிழிசை சவுந்தரராஜன்

ஞாயிறு, அக்டோபர் 09,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார். முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்றுவர் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து நேற்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, முதலமைச்சர் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவர்

முதலமைச்சரின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சரின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார்  எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்

ஞாயிறு, அக்டோபர் 09,2016, திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.விரைவில் முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து பணிக்கு திரும்ப வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு நேற்று மாலை சென்றார்.  முதல்வர் உடல்நிலை குறித்த தகவல்களை மருத்தவர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். முதல்வரை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார், இடைக்கால முதலமைச்சர் தேவையில்லை : வைகோ

முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார், இடைக்கால முதலமைச்சர் தேவையில்லை : வைகோ

ஞாயிறு, அக்டோபர் 09,2016, முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தமிழகத்துக்கு இடைக்கால முதலமைச்சர் என யாரையும் நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ  மருத்துவர்களிடம் நேற்று நேரில் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய வைகோ, முதலமைச்சர் நலமாக உள்ளார். அதிமுக தொண்டர்களின் கவலை நீங்கும்.

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி தருமபுரியில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி சிறப்பு வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி தருமபுரியில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி சிறப்பு வழிபாடு

சனி, அக்டோபர் 08,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி தருமபுரியில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி சிறப்பு வழிபாடு செய்தனர். உடல் நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா  சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 22ந் தேதி முதல் சிகிச்சைப் பெற்று வருகிறார்.அவர்  பூரண குணமடைய  வேண்டி தருமபுரி மாவட்டம் பாளையம்புதுரில் உள்ள வெங்கடரமணசுவாமி கோவில், நத்தஅள்ளி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலிலும்  அதிமுக.வினர் சிறப்பு வழிபாடு செய்தனர். திருமுறைகள் ஓதியும், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி மாற்றுத் திறனாளி குழந்தைகள் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி மாற்றுத் திறனாளி குழந்தைகள் சிறப்பு வழிபாடு

சனி, அக்டோபர் 08,2016, தூத்துக்குடி ; தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாநகர வடக்கு பகுதி அதிமுக சார்பில் தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்பி மக்கள் பணியாற்ற வேண்டி சிறப்பு கூட்டு வழிபாடு நடைப்பெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி

தமிழக ஆளுநருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு ; விவசாயிகளின் நலன்காக்க காவேரி விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை

தமிழக ஆளுநருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு ; விவசாயிகளின் நலன்காக்க காவேரி விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை

சனி, அக்டோபர் 08,2016, தமிழகத்தின் மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை மாநில பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலையில் சந்தித்துப் பேசினார். காவிரி விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாக ஆளுனர் மாளிகை தெரிவித்துள்ளது. கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பின் பேரில், மூத்த அமைச்சர்கள் ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் டாக்டர் பி.ராம மோகன ராவுடன் கவர்னர் மாளிகைக்கு நேற்று மாலை சென்றனர். இந்த சந்திப்பின் போது தமிழக

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்,வதந்திகளை நம்பவேண்டாம் : அப்பல்லோ மருத்துவமனையில் ராகுல் காந்தி பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்,வதந்திகளை நம்பவேண்டாம் : அப்பல்லோ மருத்துவமனையில்  ராகுல் காந்தி பேட்டி

சனி, அக்டோபர் 08,2016, சென்னை ; முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்தார். மேலும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டும் ட்விட்டர் மூலம் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, வாழ்த்து தெரிவித்திருந்தார்.