ரூ.3000 உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகன பழுது பார்ப்பு நிலையம் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.3000 உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகன பழுது பார்ப்பு நிலையம் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், செப்டம்பர் 21,2016, சென்னை : தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ரூ.3 ஆயிரம் உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகன பழுது பார்ப்பு நிலையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர்  ஜெயலலிதா அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டின் பொருளாதாரம் சிறக்கவும், வேலைவாய்ப்புகள் பெருகவும், தொழிற்கல்வி அவசியம்  என்பதால், எனது தலைமையிலான அரசு  தொழிற்கல்வியை ஊக்குவிப்பதிலும், தொழிற்  திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் நலன் பேணும் வகையில்

விபத்தில் மரணமடைந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் ; ரூ. 3லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு

விபத்தில் மரணமடைந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் ; ரூ. 3லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு

புதன், செப்டம்பர் 21,2016, சென்னை ; சாலை விபத்தில் மரணமடைந்த திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றியம் கண்டிய கவுன்டனூர் அ.தி.மு.க கிளைக்கழக செயலாளர் வி.முத்துசாமி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்தார்.மேலும் விபத்தில் இறந்த அந்த அ.தி.மு.க.நிர்வாகி குடும்பத்திற்கு கட்சி சார்பில் ரூ 3லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.  அ.தி.மு.க பொதுச்செயலாளரும்,தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,  திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றியம் கண்டிய கவுன்டனூர் கிளைக்கழக

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடியில் விலையில்லா மின்சக்கரங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடியில் விலையில்லா மின்சக்கரங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், செப்டம்பர் 21,2016, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி செலவில் விலையில்லா மின் சக்கரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மேலும், தமிழகத்தில் இயங்கி வரும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளில் ரூ.14 கோடியே 20 லட்சம் செலவில் நவீன இயந்திரங்கள் நிறுவ முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘பூம்புகார்’ என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களால்  செய்யப்பட்ட கைவினை பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்போராட்டத்திற்கு வெற்றி ; காவேரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்போராட்டத்திற்கு வெற்றி ; காவேரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதன், செப்டம்பர் 21,2016, புதுடெல்லி ; காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு இன்று முதல் 6000 கன அடி வீதம் 27-ம் தேதி வரை தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகத்தான வெற்றியாகும். காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழக

சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை ; முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை ; முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

புதன், செப்டம்பர் 21,2016, சென்னை ; சைதாப்பேட்டை சின்னமலை – விமான நிலையம்  இடையே மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கணிசமான ரெயில் தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் மேம்பாலம் பணிகள் முடிந்தன. அங்கு கடந்த ஆண்டு