தஞ்சை விபத்தில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தஞ்சை விபத்தில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,16 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை, சென்னை : தஞ்சை மாவட்டம் வல்லத்தில் அரசு பேருந்து – லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் சரகம், ஆலக்குடி மேம்பாலம் அருகே திருச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், இரும்பு கம்பி

அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெரும் 960 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் காமராஜர் விருது : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெரும் 960 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் காமராஜர் விருது : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூலை ,16 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை,  விருதுநகர் : விருதுநகர் கே.வி.எஸ்.பள்ளி வளாகத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வித்திருவிழா நேற்று  நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை தாங்கினார்.விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை, தென்காசி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

பெருந்தலைவர் காமராஜரின் 115வது பிறந்த நாள் விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 115வது பிறந்த நாள் விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை

ஜூலை ,16 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை,  சென்னை : பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தமிழக அரசு சார்பில் சென்னையில் காமராஜர் சாலையில் (கடற்கரை சாலை) கலங்கரை விளக்கம் அருகே உள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அதைச் சுற்றி மலர் மாலைகளால் அலங்கரித்தும் வைத்திருந்தனர்.நேற்று காலை அங்கு வந்த

பால் உற்பத்தியாளர் சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பால் உற்பத்தியாளர் சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,15 ,2017 ,சனிக்கிழமை,  சென்னை : பால் உற்பத்தியாளர் சங்கங்களில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:- நடப்பாண்டில், 49 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் 150 கால்நடை மருத்துவ நிலையங்கள் நபார்டு வங்கியின் நிதியுதவிடன் புதிதாகக் கட்டப்படும். நடப்பாண்டில், 93.86 லட்சம் கால்நடைகளுக்கு நோய்த்

ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா இ- கிராமம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா இ- கிராமம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,15 ,2017 ,சனிக்கிழமை, சென்னை : தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஊர், அம்மா இ கிராமம் எனத் தேர்வு செய்யப்பட்டு அங்கு வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் பல்வேறு துறைகளின் திட்டங்களை முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார். 49கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் 150 கால்நடை மருத்துவ நிலையங்கள் கட்டப்படும். பால் உற்பத்தியாளர் சங்கப் பணியாளர்களுக்குக் கூடுதலாக மாதம் இருநூறு ரூபாய் வழங்கப்படும். நாகப்பட்டினம்

செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஜூலை ,14 ,2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்‍கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.  நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சுகாதாரத்துறைக்‍கு என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்‍கப்பட்டது. இதன்மூலம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் என இதுவரை 21 ஆயிரத்து 23 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 190 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தக்காளி, வெங்காயம் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

தக்காளி, வெங்காயம் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

ஜூலை ,14 ,2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ சட்டப்பேரவையில் தெரிவித்தார்.  சட்டப்பேரவையில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, வறட்சி மற்றும் பல்வேறு சூழ்நிலை காரணமாக தக்காளி, சிறிய வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. கிலோ ரூ.40-க்கு