உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், செப்டம்பர் 14,2016, சென்னை : உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடமிருந்து வரும் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்பார்வையிட 5 பேர் கொண்ட குழுவும், மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் வழங்க நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலையும் அவர் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:- தமிழகத்தில் உள்ளாட்சி

தூத்துக்குடியில் பண்ணை பசுமை கடைகள் மூலம் 2 ஆண்டுகளில், 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை ; சாதனை விழாவில், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு பங்கேற்பு

தூத்துக்குடியில் பண்ணை பசுமை கடைகள் மூலம் 2 ஆண்டுகளில், 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை ; சாதனை விழாவில், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு பங்கேற்பு

செவ்வாய், செப்டம்பர் 13,2016, முதலமைச்சர்  ஜெயலலிதாவின் சிறப்பான திட்டமான பண்ணை பசுமை காய்கறி கடை, தூத்துக்குடியில் பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 2 ஆண்டுகளில் 10 கோடி ரூபாய்க்கு இந்த கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஏழை-எளியோருக்கு மலிவான விலையில் தரமான பசுமையான காய்கறிகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா, பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடை திட்டத்தை தொடங்கி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் முக்கிய நகரங்களில்

தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் : கர்நாடக முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் : கர்நாடக முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

செவ்வாய், செப்டம்பர் 13,2016, சென்னை ; கர்நாடகத்தில் வசிக்கும் தமிழக மக்களுக்கும், அவர்களின் சொத்துகளுக்கும் வழங்கபடும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது., கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், அங்கு வசிக்கும் பல லட்சம் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்களது சொத்து

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 2-வது நாளாக அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சிகளை அழிக்கும் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 2-வது நாளாக அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சிகளை அழிக்கும் பணி தீவிரம்

செவ்வாய், செப்டம்பர் 13,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னை அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் 2-ஆவது நாளாக நேற்றும் “ஸ்கைரோனமஸ்” பூச்சி ஒழிப்புப் பணிகளை, அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து பொதுமக்களிடமும் கேட்டறிந்தனர். சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பம், முத்தமிழ்நகர், மூகாம்பிகை நகர், கொரட்டூர், சீனிவாசபுரம், காந்திநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் “ஸ்கைரோனமஸ்” எனப்படும் ஒருவகை பூச்சிகள் திடீரென அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதிமுக கட்சிப் பொறுப்பிலிருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக கட்சிப் பொறுப்பிலிருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், செப்டம்பர் 13,2016, அதிமுகவின் கட்சிப் பொறுப்புகளிலிருந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை நீக்கம் செய்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கழக செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் திரு. நத்தம் இரா.விஸ்வநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுதாக அறிவித்துள்ளார்.