அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறையை 9 மாதமாக உயர்த்திய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி பாராட்டு

அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறையை 9 மாதமாக உயர்த்திய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  தமிழக பாரதிய ஜனதா கட்சி பாராட்டு

சனி, செப்டம்பர் 03,2016, அரசு பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறையை 9 மாதங்களாக நீட்டித்து தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 2-வது நாளாக மண்டல ஊடக ஆசிரியர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் வகையில் தயாரிக்கப்பட்ட புத்தகத் தொகுப்பை மத்திய அமைச்சர் திரு. வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிற்சங்கங்கள்

போக்குவரத்து துறையில் 1600 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

போக்குவரத்து துறையில் 1600 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, செப்டம்பர் 02,2016, சென்னை:அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில் ஒரு போக்குவரத்துக் கழகத்தில் 200 பணியிடங்கள் என்ற வீதத்தில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 1,600 பணியிடங்கள் கருணை அடிப்படையில் நிரப்பப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் நேற்று  முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த   அறிக்கை வருமாறு:- மக்களை இணைப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், சாலைப் போக்குவரத்து

சட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது’; தி.மு.க. உறுப்பினருக்கு, சபாநாயகர் தனபால் எச்சரிக்கை

சட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது’; தி.மு.க. உறுப்பினருக்கு, சபாநாயகர் தனபால் எச்சரிக்கை

வெள்ளி, செப்டம்பர் 02,2016, சென்னை:சட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்று தி.மு.க. உறுப்பினருக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். சட்டசபையில் நேற்று வருவாய்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் பிச்சாண்டி பேசினார். அவர் பட்டாக்கள் முறையாக வழங்கப்படவில்லை என்றும், அம்மா திட்ட முகாம் மூலம் எந்தவிதமான பலனும் இல்லை என்றும் குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கீட்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ‘இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை, இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். இந்த

நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “மக்கள் தலைவர்” விருது ; அமெரிக்காவின் Festival of Globe அமைப்பு வழங்கியது

நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “மக்கள் தலைவர்” விருது ; அமெரிக்காவின்  Festival of Globe அமைப்பு வழங்கியது

வெள்ளி, செப்டம்பர் 02,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் சேவைகளைப் பாராட்டி, அவருக்கு “மக்கள் தலைவர்” என்ற பட்டத்தை அமெரிக்க நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சிலிக்கான் வேலி என்ற இடத்தில் கடந்த மாதம் 13, 14-ம் தேதிகளில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அமெரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் ரமேஷ் ஜப்ரா நிறுவிய Festival of Globe அமைப்பின் சார்பில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அவரது மக்கள் நலத்திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஆகியவற்றுக்காக

இந்தியாவிற்கே வழிகாட்டியாக இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை,முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார் ; அமைச்சர் .R.B.உதயகுமார் தகவல்

இந்தியாவிற்கே வழிகாட்டியாக இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை,முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார் ; அமைச்சர் .R.B.உதயகுமார் தகவல்

வெள்ளி, செப்டம்பர் 02,2016, இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை, இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்தி வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் திரு.R.B.உதயகுமார் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று  வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் திரு.R.B.உதயகுமார், இணையவழி பட்டா வழக்கும் திட்டத்தின்மூலம் இதுவரை 8 லட்சம் பட்டாக்கள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். மக்களின் குறைகளை தீர்க்க, அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் வகையில், வருவாய் கிராமங்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தைக் கொண்டுசென்று

அரியலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி வழங்கப்பட்டது

அரியலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி வழங்கப்பட்டது

வெள்ளி, செப்டம்பர் 02,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அரியலூரில் 40க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், ஆதரவற்ற மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள், மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, அரியலூர் மாவட்டத்தில் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்துவரும் 42

மாவீரன் பூலித்தேவன் 301-வது பிறந்த நாள் : திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மாவீரன் பூலித்தேவன் 301-வது பிறந்த நாள் : திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வெள்ளி, செப்டம்பர் 02,2016, திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் மாவீரன் பூலித்தேவன் 301-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவனின் 301-வது பிறந்த நாளையொட்டி, நேற்று நெற்கட்டும்செவல் கிராமத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் திரு.G.பாஸ்கரன், திருமதி V.M. ராஜலட்சுமி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மு. கருணாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ரூ.1,438 கோடிக்கு புதிய திட்டங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் ரூ.1,438 கோடிக்கு புதிய திட்டங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, செப்டம்பர் 02,2016, சென்னை : பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளை நவீன சிகிச்சை கருவிகளோடு மேம்படுத்த ரூ.1438 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.  இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ்  முதல்வர் ஜெயலலிதா சமர்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தரமான மருத்துவ சேவையை அனைத்து மக்களும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பெற்றிட வேண்டும் என்ற அடிப்படையில்,  எனது தலைமையிலான அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி