உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் கூறினார். மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை மானிய கோரிக்கை மீது சட்டசபையில் நடந்த விவாதத்தின் முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் விஜயபாஸ்கர் பதிலளித்து பேசுகையில் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில்; மருத்துவ உலகில் மிக முக்கியமான மைல்கல்லாக விளங்குவது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆகும். பிற மாநிலங்களெல்லாம் பின்பற்றக்

மக்களின் வரிப்பணத்தை வீணடித்த தி.மு.க. உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட்டை ரத்து செய்ய முடியாது : சபாநாயகர் தனபால் திட்டவட்டம்

மக்களின் வரிப்பணத்தை வீணடித்த தி.மு.க. உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட்டை ரத்து செய்ய முடியாது : சபாநாயகர் தனபால் திட்டவட்டம்

சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2016, சட்டப்பேரவையை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு பேரவைத் தலைவர் மன்றாடிக் கேட்டுக்கொண்டும், அதற்கு செவிமடுக்காமல், அவையை நடத்த விடாமல் மக்களின் வரிப்பணத்தை தி.மு.க. உறுப்பினர்கள் வீணடித்தனர். எனவே, அவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய சபாநாயகர் தனபால் மீண்டும் மறுத்துவிட்டார். தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையை தொடர்ந்து நடத்தவிடாமல் இடையூறு செய்ததோடு, பேரவைத் தலைவரை ஒருமையில் பேசியும், பேரவைக்குள் அமர்ந்துகொண்டு விதிமுறைகளுக்கு புறம்பாக கேலி செய்யும் சைகைகளை காண்பித்தும், அராஜக செயலில் ஈடுபட்டனர். மக்களின்

சம்பா சாகுபடிக்காக ரூ.64.30 கோடி மானியம்,நடவு இயந்திரத்துக்காக ஏக்கருக்கு ரூ.2000 ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சம்பா சாகுபடிக்காக ரூ.64.30 கோடி மானியம்,நடவு இயந்திரத்துக்காக ஏக்கருக்கு ரூ.2000 ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2016, சென்னை : காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாததால் நேரடி நெல் சாகுபடி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், சம்பா சாகுபடிக்காக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். விவசாயிகள் நெல் விதைப்பு மேற்கொள்வதற்காக தரிசு உழவுப் பணிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும் என்றும், விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகள் பெற ஏதுவாக விதைகளுக்கு கிலோ

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் 1.58 கோடி பேருக்கு அடையாள அட்டை ; அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் 1.58 கோடி பேருக்கு அடையாள அட்டை ; அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2016, முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.58 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று அவர் கூறியதாவது; முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.3,221 கோடியில் 15,56,641 பேர் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகள் ஈட்டியத் தொகை

கர்நாடக அரசு மேகதாது தடுப்பணையை கட்ட முயற்சித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ; முதல்வர் ஜெயலலிதா உறுதி

கர்நாடக அரசு மேகதாது தடுப்பணையை கட்ட முயற்சித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ; முதல்வர் ஜெயலலிதா உறுதி

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2016, சென்னை : காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையிலும், எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசிக்குமானால், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் தமிழக சட்டபேரவையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு., கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றப் போவதாக