சென்னையில் வழிப்பறி சம்பவத்தில் பலியான நந்தினி – சேகர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னையில் வழிப்பறி சம்பவத்தில் பலியான நந்தினி – சேகர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, ஜூலை 16,2016, சென்னை  – சென்னை பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி சம்பவத்தின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நந்தினி, சேகர் ஆகியோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த நஜ்ஜிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு., சென்னை, மயிலாப்பூர் வட்டம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த செல்வி . நந்தினி மற்றும் செல்வி நஜ்ஜீ ஆகிய இருவரும் கடந்த

த.மா.கா – வை சேர்ந்த 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

த.மா.கா – வை சேர்ந்த 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சனி, ஜூலை 16,2016,  சென்னை: த.மா.கா.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருஞானசம்பந்தம், பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவருமான

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடுகளில் தொடர் சோதனை : ரூ.700 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடுகளில் தொடர் சோதனை : ரூ.700 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

சனி, ஜூலை 16,2016, திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர், மூன்று நாட்களாக நடத்திய சோதனையில், 700 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. 16 கோடி ரூபாய் ரொக்கம், 22 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தி.மு.க.,வைச் சேர்ந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்.இவருக்கு சொந்தமான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பொறியியல் கல்லுாரிகள், வீடுகள், அலுவலகங்கள், நட்சத்திர ஓட்டல்கள்,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால், துபாய் அஜ்மனில் இருந்து மீட்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை அமைச்சர் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பிவைத்தார்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால், துபாய் அஜ்மனில் இருந்து மீட்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை அமைச்சர் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பிவைத்தார்

சனி, ஜூலை 16,2016, துபாய் அஜ்மனில் பல்வேறு பொய்யான காரணங்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சிகள் காரணமாக, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழகம் திரும்பினர். சென்னை வந்த 12 மீனவர்களை தமிழக அரசு சார்பில் அமைச்சர் திரு.D. ஜெயக்குமார் வரவேற்றார்.  பின்னர் மீனவர்கள், தமிழக அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஐக்கிய அரபு நாட்டில் அஜ்மன் என்ற இடத்தில் இருந்து 2 விசைப் படகுகளில்

விவசாயிகள் பயன்பெறும் புதிய பயிர்க்காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.500 கோடி மானியம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

விவசாயிகள் பயன்பெறும் புதிய பயிர்க்காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.500 கோடி மானியம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, ஜூலை 16,2016, சென்னை  – மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்துக்கான மானியமாக ரூ.500 கோடியை தமிழக அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தென்னை மரக் காப்பீட்டுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திடவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது., வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள உழவர் பெருமக்களின்

உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.கவுடன் கூட்டணி : சரத்குமார் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.கவுடன் கூட்டணி : சரத்குமார் அறிவிப்பு

வெள்ளி, ஜூலை 15,2016, சென்னை : உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தனது 62-வது பிறந்த நாளை சென்னை கொட்டிவாக்கத்தில் நேற்று கொண்டாடினார். அவரது மனைவியும் சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணி செயலாளருமான நடிகை ராதிகா, மகன் ராகுல், மகள் ரேயான், சரத்குமாரின் சகோதரி மல்லிகா ஆகியோர் சரத்குமாருக்கு மலர் கொத்து கொடுத்து இனிப்பு ஊட்டி வாழ்த்து