தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்

ஜூன் , 28 ,2017 , புதன்கிழமை, சென்னை : தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) பொருளாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கேட்டு கொண்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;– தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்வது தொடர்கதையாகி வருகிறது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சி மடத்தை சேர்ந்த 5 மீனவர்களை தாக்கி, வலைகளை அறுத்தெறிந்து, படகுடன் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வி கணினிமயமாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வி கணினிமயமாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூன் , 27 ,2017 ,செவ்வாய்க்கிழமை, கோவை : 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வி கணினிமயமாக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளியில் நடத்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ” 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வி கணினிமயமாக்கும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.மேலும் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது

மத்திய அரசு கொண்டு வரும் தேர்வுகளை சமாளிக்கும் வகையில் கல்வித்தரம் உயர்த்தப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

மத்திய அரசு கொண்டு வரும் தேர்வுகளை சமாளிக்கும் வகையில் கல்வித்தரம் உயர்த்தப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

ஜூன் ,26 ,2017 ,திங்கட்கிழமை,  கோபி : மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து  பொதுத்தேர்வுகளையும்  சமாளிக்கும் வகையில் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்று கோபி வந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அங்கு பல்வேறு அரசு நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.- மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொது தேர்வுகளையும் சமாளிக்கும் வகையில் கல்வித்தரத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்காக கேள்வி தாள் அடங்கிய

போரூரில் புதிய மேம்பாலம் : எம்.ஜி.ஆர் பெயரை சூட்டி திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

போரூரில் புதிய மேம்பாலம் : எம்.ஜி.ஆர் பெயரை சூட்டி திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜூன் ,26 ,2017 ,திங்கட்கிழமை,   சென்னை : போரூர் சந்திப்பில் ரூ.54கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  திறந்து வைத்தார்.இந்த பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டது. நிகழ்ச்சியின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:– புரட்சித் தலைவி அம்மா நல்லாசியோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நினைவு கொள்ளும் விதத்தில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் இந்தபாலம் பொது மக்களுடைய பயன்பாட்டிற்கு

இஸ்லாமியப் பெருமக்களுக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

இஸ்லாமியப் பெருமக்களுக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

ஜூன் ,26 ,2017 ,திங்கட்கிழமை,   சென்னை : ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முகமதுநபிக்கு குரான் அருளப்பட்டதை கொண்டாடும் இணையில்லா திருநாள் ரம்ஜான் என கூறியுள்ளார். உலகம் முழுவதும் அன்பு, அமைதி, சமாதானம் நிலைக்க வேண்டும் என தெரிவித்துள்ள டிடிவி தினகரன், பொதுச்செயலாளர் சசிகலா

இஸ்லாமியப் பெருமக்களுக்கு முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்து

இஸ்லாமியப் பெருமக்களுக்கு முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்து

ஜூன் ,26 ,2017 ,திங்கட்கிழமை,   சென்னை : ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்- அமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தூய்மை உணர்வோடு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, ஏழை- எளியோருக்கு உணவளித்து, உதவிகள் அளித்து, எல்லோரும் இன்புற்று வாழ இறைவனைத்தொழுது, இஸ்லாமியப்பெருமக்கள் கொண்டாடி மகிழும் திருநாள் தான் ரம்ஜான் பண்டிகை அனைவரிடத்திலும், அன்பு செலுத்தவும், சகோதரத் துவத்துடன் வாழ்ந்திடவும் வாழ்வில் அமைதியும்,

இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து

இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து

ஜூன் ,26 ,2017 ,திங்கட்கிழமை, சென்னை : ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பிருந்து, நல்லொழுக்கம், நற்பண்பு, ஈகை குணங்களை வளர்த்து, இறை சிந்தனையை மனதில் நிறுத்தி, ஏழைகளுக்கு உணவு அளித்து, ரமலான் திருநாளை குடும்பத்தினருடன் கொண்டாடுவர் என கூறியுள்ளார். இந்த பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும்,