மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், உயர்மட்ட மருத்துவ சிகிச்சை

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், உயர்மட்ட மருத்துவ சிகிச்சை

ஞாயிறு, ஜூன் 26,2016, சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு பொது மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சையின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னையில் இருந்து சென்ற உயர்மட்ட மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார்கள் என மருத்துவக்குழு உறுதிபடத் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 14, 15, 16 ஆகிய தேதிகளில் பார்வை இழப்புத் திட்டத்தின் கீழ் கண்புரை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட

தேர்தல் தோல்வி எதிரொலி : தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ராஜினாமா

தேர்தல் தோல்வி எதிரொலி : தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ராஜினாமா

ஞாயிறு, ஜூன் 26,2016, சென்னை : நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்றும், கட்சி தலைமையின் கட்டளையின்படியும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில், பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தியது, மகளிர் அணியினரை தரக்குறைவாக விமர்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இளங்கோவனை ராஜினாமா செய்ய காங்., மேலிடம் உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே கோஷ்டி பூசலில் இருந்த தமிழக

29 தமிழக மீனவர்கள் 94 படகுகளை மீட்க உடனடி நடடிவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

29 தமிழக மீனவர்கள் 94 படகுகளை மீட்க உடனடி நடடிவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிறு, ஜூன் 26,2016, சென்னை:இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 5 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது எந்திர படகை விடுவிப்பதுடன், இலங்கை சிறைகளில் உள்ள 29 தமிழக மீனவர்களையும், 94 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது., நாகப்பட்டினம்  மாவட்டம் விழுந்தமாவடி கடல் பகுதியில் இருந்து 5 மீனவர்கள் ஒரு எந்திர படகில் 

ஏழை மாணவியின் படிப்புக்கான முழு செலவும் வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மாணவியின் குடும்பத்தார் நன்றி : முதலமைச்சர்தான் தங்கள் குலதெய்வம் என உருக்கம்

ஏழை மாணவியின் படிப்புக்கான முழு செலவும் வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மாணவியின் குடும்பத்தார் நன்றி : முதலமைச்சர்தான் தங்கள் குலதெய்வம் என உருக்கம்

ஞாயிறு, ஜூன் 26,2016, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினியின் ஏழ்மை நிலை அறிந்து, மருத்துவப் படிப்புக்கான முழு செலவும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மாணவியின் குடும்பத்தார் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளனர். சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்வி பயில்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, சென்னை கே.கே. நகரில் உள்ள E.S.I. மருத்துவக் கல்லூரியில் M.B.B.S., படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா

20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பவானி சாகர் அணையில்,புனரமைப்புப் பணிகள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,விவசாயிகள் நன்றி

20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பவானி சாகர் அணையில்,புனரமைப்புப் பணிகள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,விவசாயிகள் நன்றி

சனி, ஜூன் 25,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அறிவித்தபடி, பவானி சாகர் அணையை சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புனரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆறும் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறும் சந்திக்கும் இடத்தில், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், 1948-ம் ஆண்டு முதல் 1955-ம் ஆண்டு