ஓசூரில் கொள்ளையர் தாக்கியதில் உயிரிழந்த காவலர் முனுசாமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஓசூரில் கொள்ளையர் தாக்கியதில் உயிரிழந்த காவலர் முனுசாமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஜூன் 21,2016, சென்னை, சங்கிலி பறிப்பு கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கிருஷ்ணகிரி தலைமைக் காவலர் முனுசாமியின் உயரிய தியாகத்தை போற்றும் வகையில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், அவரது மகளின் உயர்கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- கிருஷ்ணகிரி மாவட்டம், யு.சிங்கிரிப்பள்ளி என்னும் இடத்தில் 15.6.2016 அன்று நடந்த

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காரணமே கருணாநிதிதான் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காரணமே கருணாநிதிதான் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

செவ்வாய்கிழமை, ஜூன் 21, 2016, சென்னை : கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு தி.மு.க. வே காரணம். மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் தி.மு.க.வே காரணம் என்று சட்டப்பேரவையில் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, இது தொடர்பாக நான்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது தி.மு.க துணையாக இருக்காதது ஏன் என்றும், உச்சநீதிமன்றத்தின் மூலம் கச்சத்தீவை நிச்சயம் மீட்டே தீருவேன் என்று சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா உறுதிபட தெரிவித்தார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில்,

முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி மதுரை அருகே அமையவுள்ள துணைக்கோள் நகரத்தினை தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு

முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி மதுரை அருகே  அமையவுள்ள துணைக்கோள் நகரத்தினை தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு

திங்கள் , ஜூன் 20,2016, திருமங்கலம் ; தமிழக முதல்வரின் மேலான ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி-தோப்பூர் பகுதியில் ரூ.218.77கோடி மதிப்பீட்டிலான துணைக்கோள் நகரம் அமையவுள்ள இடத்தினை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வரும் மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்கள் இயற்கையான சூழலில் வசித்திட ஏதுவாக தமிழக

500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

திங்கள் , ஜூன் 20,2016, நாகர்கோவில்; தமிழகத்தில் 500 டாஸ் மாக் மதுக்கடைகளை மூட முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு, நடவடிக்கை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். பாராட்டுதற்குரியது. அதே நேரத்தில் பூரண மதுவிலக்கை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும் என்பது எனது

500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சரத்குமார் பாராட்டு

500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு  சரத்குமார் பாராட்டு

திங்கள் , ஜூன் 20,2016, சென்னை: பூரண மது விலக்கு இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி வருவதாக கூறியுள்ள சரத்குமார் 30 நாட்களுக்குள் 500 மதுக்கடைகளை மூடிய முதல்வர் ஜெயலலிதா  நடவடிக்கைக்கு  பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.   இது குறித்து அகில  இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் சரத்குமார் அறிக்கை வருமாறு: கடந்த மே 24 ஆம் தேதி முதலமைச்சர் பதவி ஏற்றவுடன்  டாஸ்மாக் கடைகளின் பணி நேரத்தை குறைத்து உத்தரவிட்ட முதலமைச்சர் அடுத்த