தென்மேற்கு பருவமழையால் சேதம் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தென்மேற்கு பருவமழையால் சேதம் ஏற்படாமல்  தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, ஜூன் 10,2016, தமிழகத்தில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 4 முதல் 6 சதவீதம் கூடுதலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறி இருக்கிறது. தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 செ.மீ. மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 20 மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. இதேபோல் புதன்கிழமையும் மழை பெய்தது. அன்று 6.5

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா மீண்டும் தேர்வு : புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா மீண்டும் தேர்வு : புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு

வியாழன் , ஜூன் 09,2016, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அ.தி.மு.க. தலைமைக்கழக புதிய நிர்வாகிகள்  பட்டியலை  முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– அ. தி.மு.க. தலைமைக் கழகநிர்வாகிகள் பட்டியல் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது. 1. ஜெ.ஜெயலலிதா(அ.தி.மு.க. பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதல்வர்) 2. இ.மதுசூதனன் (கழக அவைத்தலைவர்). 3. ஓ.பன்னீர்செல்வம்(அ.தி.மு.க  பொருளாளர், நிதி, ஊழியர்மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர்).

வறுமையில் வாடும் இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு தேவா நன்றி

வறுமையில் வாடும் இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு தேவா நன்றி

வியாழன் , ஜூன் 09,2016, வறுமையில் வாடும் பழம் பெரும் இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனுக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்ற தலைவரும், இசையமைப்பாளருமான தேவா ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திரைப்பட இசையமைப்பாளர் கோவர்தனின் வறுமை நிலையினை மனதில் கொண்டு, தாயுள்ளத்தோடு முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியிருப்பது, மட்டற்ற மகிழ்ச்சி

இசையமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு : அவரது செவித்திறன் குறைபாட்டை நீக்க உரிய சிகிச்சை அளித்து, காதொலிக் கருவி வழங்கவும் உத்தரவு

இசையமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு : அவரது செவித்திறன் குறைபாட்டை நீக்க உரிய சிகிச்சை அளித்து, காதொலிக் கருவி வழங்கவும்  உத்தரவு

வியாழன் , ஜூன் 09,2016, சென்னை : வறுமையில் வாடும் 88 வயது, பிரபல இசையமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது செவித்திறனுக்காக காதொலிக்கருவி வழங்கவும் மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரபல இசையமைப்பாளர் கோவர்தன், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, தேவா என பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராக பல வருடங்கள் பணியாற்றியவர் ஆவார். தற்போது தனது மனைவியுடன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் – விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்கள் இடையே மோதல் : அடி, உதை, கல்வீச்சு, உருவ பொம்மை எரிப்பு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் – விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்கள் இடையே மோதல் : அடி, உதை, கல்வீச்சு, உருவ பொம்மை எரிப்பு

செவ்வாய், ஜூன் 07,2016, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும், சமீபத்தில் இளங்கோவனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளுக்கும் பஞ்சம் இல்லை, தலைவர்களுக்கும் பஞ்சம் இல்லை. தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம் என்று கிண்டல் அடிக்கும் அளவுக்கு ஒரே கட்சியில் இருந்து கொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு தொண்டர் கூட்டத்தை வைத்துக்கொண்டு கட்சிக்குள் கட்சி நடத்தி வருகின்றனர்.   சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வி