45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடலூர் மீனவர்கள் நன்றி

45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகையை  உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடலூர் மீனவர்கள் நன்றி

சனி, மே 28,2016, மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடலூர் மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 45 நாட்கள் மீன்பிடித்தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் சீரமைக்கும் பணி, வலைகள் பழுது பார்க்கும் பணி, வண்ணம் தீட்டும் பணி என அனைத்து பணிகளையும் முடித்து, தற்போது மீன்பிடிக்க தயார் நிலையில் உள்ளனர்.

ஈரானில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஈரானில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சனி, மே 28,2016, சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஈரான் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, ஈரான் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க பிரதமர் இந்திய தூதரகம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர்  ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர்  ஜெயலலிதா பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஈரான் கடலோர காவல் படையினரால்

சபாநாயகர் – துணை சபாநாயகர் வேட்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சபாநாயகர் – துணை சபாநாயகர் வேட்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சனி, மே 28,2016, சென்னை, சபாநாயகர் மற்றும் துணைசபாநாயகர் பதவிக்கான வேட்பாளர்களான தனபால், பொள்ளாச்சி ஜெயராமன், அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம், அரசு கொறடா ராஜேந்திரன் நேற்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வரும் ஜூன் 3-ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் கூடுகிறது. இதில் சபாநாயகர் மற்றும் துணைசபாநாயகர் பதவிக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக சபாநாயகர் பதவிக்கு தனபால், மற்றும் துணைசபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பெயர்களை

ராஜ்யசபை உறுப்பினர் தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர் வேட்புமனு தாக்கல்

ராஜ்யசபை உறுப்பினர் தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர் வேட்புமனு தாக்கல்

சனி, மே 28,2016, சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த ராஜ்யசபை அ.தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேரும் நேற்று  வேட்பு மனுதாக்கல் செய்தனர். ராஜ்யசபை தேர்தலில் அ.தி.மு.க. அதிகாரபூர்வ வேட்பாளர்களாக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம், அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் நவனீத கிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஏ.விஜயகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஆகிய 4 பேரையும் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான  ஜெயலலிதா

இலங்கை தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் மகத்தான தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதா : இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பாராட்டு

இலங்கை தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் மகத்தான தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதா : இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பாராட்டு

வெள்ளி, மே 27,2016, தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று, 6வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இலங்கை வடமாகாண முதலமைச்சர், நீதியரசர் திரு. விக்னேஸ்வரன், வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும், கொள்கை பிறழாமல், துணிச்சலாக குரல் கொடுத்து வரும் தலைவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா என்றும், தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களை, மனம்கோணாமல் முதலமைச்சர் ஜெயலலிதா பராமரித்து வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கை யாழ்ப்பாணத்தில்