முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டு

திங்கள் , மே 23,2016, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, சரித்திர சாதனை படைத்திருப்பதாக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மத்திய அமைச்சர்கள் திரு. வெங்கய்யா நாயுடு, திரு. பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். சென்னையில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு. எம். வெங்கய்யா நாயுடு, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று, சரித்திர

மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , மே 23,2016, சென்னை:  தமிழகத்திற்கு மேலும் 4 புதிய அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவையை  விரிவாக்கம் செய்துள்ளார். அதன்படி, நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும்,சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதே போல காதி, கிராமத் தொழில் துறை அமைச்சராக ஜி.பாஸ்கரன்,கால்நடைத்துறை அமைச்சராக பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும்,நாளை மறுநாள்(புதன் கிழமை) பதவி ஏற்றுக்கொள்வார்கள். 

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,341-வது பிறந்தநாள் விழா : தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,341-வது பிறந்தநாள் விழா : தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

திங்கள் , மே 23,2016, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,341-வது பிறந்தநாள் விழாவினையொட்டி, அவரது திரு உருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாட்டின் விடுதலைக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவினை போற்றும் வகையில், அவர்களது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,341 வது பிறந்த நாள் விழாவினையொட்டி திருச்சி, பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள அவரது திருஉருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சியர்

பயிர்க்கடன் தள்ளுபடி, 500 டாஸ்மாக் கடைகள் மூடல்,உள்பட 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா

பயிர்க்கடன் தள்ளுபடி, 500 டாஸ்மாக் கடைகள் மூடல்,உள்பட 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா

திங்கள் , மே 23,2016, ஆறாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் பயணங்கள் இனியும் மக்களை நோக்கியே தொடரும். 15-வது சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆறாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்பு : கழகத்தினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்பு : கழகத்தினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

திங்கள் , மே 23,2016, தமிழகத்தில் 6வது முறையாக முதலமைச்சராக அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவியேற்றதையொட்டி, கழகத்தினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. 134 இடங்களில் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, கழக சட்டமன்ற கட்சித் தலைவராக, ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 6-வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தின் முதலமைச்சராக  ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றதையொட்டி,

முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து 28 அமைச்சர்களும் குழுவாக பதவி ஏற்பு

முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து 28 அமைச்சர்களும் குழுவாக பதவி ஏற்பு

திங்கள் , மே 23,2016, ஜெயலலிதா 6-வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களுக்கு, ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற் றனர். ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே.பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜு, தங்க மணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக் குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா, கருப்பண்ணன், எம்.சி.சம்பத், காமராஜ், ஓ.எஸ்.மணியன்,