இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸிற்கு வாக்களிக்காதீர்கள் : செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸிற்கு வாக்களிக்காதீர்கள் : செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்

சனி, மே 14,2016, இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான கருணாநிதி மற்றும் காங்கிரஸிற்கா உங்கள் வாக்கு என்ற பதாகையுடன் ஒருவர் பிஎஸ்என்எல் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.  சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (42). இவர் இன்று காலை வடக்குமெயின்ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக செல்போன் டவரில் சுமார் 125 அடி உயரம் ஏறி நின்று கொண்டு கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் 3 பதாகைகளை டவரில் கட்டியிருந்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல தமிழ் நாளிதழ் “தினமணி” புள்ளி விவரங்களுடன் பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல தமிழ் நாளிதழ் “தினமணி” புள்ளி விவரங்களுடன் பாராட்டு

சனி, மே 14,2016, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான 5 ஆண்டு கால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல நாளிதழ் தினமணியின் இணையதளத்தில் புள்ளி விவரங்களுடன் பாராட்டு தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது – காவேரி நடுவர் மன்ற இறுதிஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது உள்ளிட்ட முதலமைச்சரின் வரலாற்று சாதனைகளையும் பட்டியலிட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசின் 5 ஆண்டுகால

’’இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’’: ஆதரவாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி பேச்சு

’’இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’’: ஆதரவாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி பேச்சு

சனி, மே 14,2016, மதுரை சத்ய சாய் நகரில் உள்ள தனக்கு சொந்தமான தயா மஹாலுக்கு மு.க.அழகிரி நேற்று  காலை 9.30 மணிக்கு வந்தார்.   இதையடுத்து, மதுரை தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய தொகுதி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இருந்து ஆதரவாளர்கள் 10.30 மணிக்கு திரண்டனர்.   ஆதரவாளர்கள் ஆஜர் ஆனபிறகு கடைசியில் வருகை தருவதுதான் அழகிரியின் வழக்கம். இந்த முறை முதல் ஆளாக வந்து அமர்ந்துகொண்டார்.   ஒவ்வொருவரையும் பார்த்து, ’’நீ எந்த தொகுதி,

கருணாநிதி பொய் பிரச்சாரம் செய்கிறார் : 9 துறைகளில் நிறைவேறிய பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்க அறிக்கை

கருணாநிதி பொய் பிரச்சாரம் செய்கிறார் :  9 துறைகளில் நிறைவேறிய பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்க அறிக்கை

சனி, மே 14,2016, விதி எண் 110-ன் கீழ் மேலும் 9 துறைகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:- கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி  கருணாநிதியும், திமுகவினரும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களில் சில திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தக் கூடியவை. கட்டடங்கள்,

அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற கண் துஞ்சாமல் கடமையாற்ற வேண்டும் : ரத்தத்தின் ரத்தங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற கண் துஞ்சாமல் கடமையாற்ற வேண்டும் : ரத்தத்தின் ரத்தங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

சனி, மே 14,2016, தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா மனம் திறந்த மடல் ஒன்றை எழுதி உள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா, தனது கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ”தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் எதிர்கால தமிழகத்தின் அரசியல் பயணத்திற்கு திசைகாட்டியாக அமையப் போகும் தேர்தல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள்

நாங்குநேரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திருப்பதி, அ.தி.மு.க.வில் இணைந்தார்

நாங்குநேரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திருப்பதி, அ.தி.மு.க.வில் இணைந்தார்

சனி, மே 14,2016, நாங்குநேரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திருப்பதி, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். பா.ம.க. வேட்பாளர் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டசபை தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக திருப்பதி ரெட்டியார் அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.