மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 14,30000 ஏழை எளிய மக்களுக்கு, 3,256 கோடி ரூபாய் உதவி : முதலமைச்சர் ஜெயலலிதா, ஆதாரங்களுடன் தகவல்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 14,30000 ஏழை எளிய மக்களுக்கு, 3,256 கோடி ரூபாய் உதவி : முதலமைச்சர் ஜெயலலிதா, ஆதாரங்களுடன் தகவல்

செவ்வாய், மே 10,2016, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தமது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் நேற்று, வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில், லட்சோபலட்சம் மக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் அலைகடலென திரண்டிருந்த பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார். தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் மகத்தான சாதனைகள், வரலாற்றுச் சிறப்பு மிக்க அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா பேராதரவு திரட்டினார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது கவர்னர் ரோசய்யா அவதூறு வழக்கு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது கவர்னர் ரோசய்யா அவதூறு வழக்கு

செவ்வாய், மே 10,2016, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். தமது பெயருக்கும், தமிழக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ள இளங்கோவன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வழக்கு மனுவில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 30-ம் தேதி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அக்னி பரீட்சை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இளங்கோவன்,

திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி மகன் வீட்டில் ஒன்றரை கோடி பறிமுதல் : ரூ. 10 கோடி வரை வரை வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிப்பு

திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி மகன் வீட்டில் ஒன்றரை கோடி பறிமுதல் : ரூ. 10 கோடி வரை வரை வரி ஏய்ப்பு  செய்ததும் கண்டுபிடிப்பு

செவ்வாய், மே 10,2016, கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.சி. பழனிச்சாமி போட்டியிடுகிறார். கரூரில் உள்ள அவரது லாட்ஜில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய  தகவலையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கே.சி.பழனி சாமியின் மகன் சிவராமன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 1.5 கோடி பறிமுதல்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை – நத்தம் விஸ்வநாதன் பெருமிதம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை – நத்தம் விஸ்வநாதன் பெருமிதம்

செவ்வாய், மே 10,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தினால் தென்மாநிலங்களில் தமிழகம் மட்டுமே மின்வெட்டில் இருந்து தப்பியுள்ளதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சித்தையன்கோட்டை பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்சாரம் இருந்த நேரத்தை விட, மின்வெட்டு இருந்த நேரம் தான் அதிகம் என தெரிவித்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவின்

முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றம் : சென்னையில் இன்று 16 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம்

முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றம் : சென்னையில் இன்று 16 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம்

செவ்வாய், மே 10,2016, சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அவரது பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றப்பட்டு, இன்று சென்னையில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் துவங்கும் பிரசாரம், நடேசன் சாலை, ஐஸ்ஹவுஸ், காவல்நிலையம் சந்திப்பு,  திருவல்லிகேணி நெடுஞ்சாலை,  அண்ணாசிலை, வேல்ஸ் தோட்டச்சாலை சாலை, ஈவிகேஎஸ் சம்பத் சாலை, சூளை தபால் நிலையம்,  சூளை நெடுஞ்சாலை, வால்ட்டாக்ஸ் ரோடு சந்திப்பு,

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

செவ்வாய், மே 10,2016, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 16-5-2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை 10-5-2016 அன்று (நேற்று) தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா, செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.சந்திரன், துணைத் தலைவர்கள் கே.சம்பத், ஏ.சபரி கிரிசன், வி.ராமன், டி.கே.மூர்த்தி, கே.ஜி.ஜீவானந்தம், எஸ்.சுந்தர்,