ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி கிராம மக்களால் விரட்டியடிப்பு

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி  தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி கிராம மக்களால் விரட்டியடிப்பு

செவ்வாய், மே 10,2016, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்புக்கு பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளரை கிராம மக்கள் நேற்றும் விரட்டியடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக, அம்மாவட்ட கழக செயலாளராகவும் தொடர்ந்து 4 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.சக்கரபாணி இம்முறையும் தேர்தலில் போட்டியிடுகின்றார். ஒட்டன்சத்திரத்தின் பல பகுதிகளில் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது அடிப்படை

மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஜெயமுருகனிடம் இருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கோடி பறிமுதல் : பறக்கும் படை அதிரடி

மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஜெயமுருகனிடம் இருந்து  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கோடி பறிமுதல் : பறக்கும் படை அதிரடி

செவ்வாய், மே 10,2016, கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் பங்குதாரராக உள்ள நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்திய வருமானவரித்துறையினர், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். தோல்வி பயம் காரணமாக, தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு வழிகளில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுத்து வருவதாக மாநிலம் முழுவதும் புகார் கூறப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக, தி.மு.க.வினருக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்கள் வாயிலாக

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரச்சாரம்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரச்சாரம்

செவ்வாய், மே 10,2016, தொகுதிகளின் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அரக்கோணத்திற்கு வருகை தரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க அ.தி.மு.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அ.தி.மு.க. பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அ.தி.மு.க மற்றும் தோழமைக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களால் நான் மக்களுக்கான நான்” என்ற தாரக மந்திரத்துடன் அவர் மேற்கொண்டு வரும் தேர்தல் பிரசாரம் மக்கள்

தேர்தலில் அதிமுகவுக்கு சௌராஷ்டிரா முன்னேற்ற கழகம் ஆதரவு

தேர்தலில் அதிமுகவுக்கு சௌராஷ்டிரா முன்னேற்ற கழகம் ஆதரவு

செவ்வாய், மே 10,2016, தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பது என சௌராஷ்டிரா அமைப்புகள் தீர்மானிக்கம் நிறைவேற்றியுள்ளது.   சௌராஷ்டிரா முன்னேற்ற கழகம் சார்பில் அனைத்து சௌராஷ்டிரா அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சௌராஷ்டிரா முன்னேற்ற கழகத்தின் தலைவர் வி.ஜி.ராம்தாஸ் தலைமை வகித்து பேசியது: அதிமுகவின் ஆட்சியில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி சீராக உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் முறையாக நிறைவேற்றப்படுகிறது.  தொழில் தொடங்குவதற்கு தேவையான மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத்

பெண்ணிடம் தகாத முறையில் நடந்த திருப்பத்தூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்

பெண்ணிடம் தகாத முறையில் நடந்த திருப்பத்தூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்

செவ்வாய், மே 10,2016, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி தி.மு.க வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆர். பெரியகருப்பன், பெண் ஒருவரிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் வகையிலான அருவருக்கத்தக்க வீடியோ வெளியாகியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், திருப்பத்தூர் தொகுதி மக்களும், மகளிர் அமைப்பினரும் பெரியகருப்பனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுபவர் பெரியகருப்பன். இவர், முந்தைய மைனாரிட்டி தி.மு.க ஆட்சியின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர். அமைச்சராக இருந்தபோது, பெரிய

அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் -புதிய தலைமுறை நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் -புதிய தலைமுறை நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

செவ்வாய், மே 10,2016, தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியும், ஏ.பி.டி நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெறும் 66 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், மற்ற கட்சிகளுக்கு வெறும் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் மேற்கண்ட கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழக சட்டசபைக்கு வரும் 16-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல்