முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உருவபொம்மையை எரித்து போராட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உருவபொம்மையை எரித்து போராட்டம்

புதன், ஏப்ரல் 27,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொந்தளிப்படைந்துள்ள அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசிவரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஏற்கெனவே கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். அவருக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருவாரூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

விதி எண் 110–ன் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் :திமுக புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

விதி எண் 110–ன் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் :திமுக புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

புதன், ஏப்ரல் 27,2016, தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் மூன்று முக்கிய துறைகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க.வினர் மற்றும் கருணாநிதிக்கு பதிலளித்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி வரும் கருணாநிதிக்கும், தி.மு.க-வினருக்கும் துறை தோறும் நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு   நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது

அதிமுக ஆட்சியில் கல்வி, விளையாட்டுத் துறையில் தமிழகம் முதலிடம்: நாகர்கோவிலில் நடிகர் வையாபுரி பேச்சு

அதிமுக ஆட்சியில் கல்வி, விளையாட்டுத் துறையில் தமிழகம் முதலிடம்: நாகர்கோவிலில் நடிகர் வையாபுரி பேச்சு

செவ்வாய், ஏப்ரல் 26,2016, அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது என்றார் நகைச்சுவை நடிகர் வையாபுரி. நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து, அவர் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கிறது. 20 கிலோ இலவச அரிசி, வேட்டி, சேலை, பசுமை வீடுகள் ஆகியவற்றை கொடுத்தது தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி,

புதுச்சேரி மாநிலத்தையே புதைக்குழிக்குள் தள்ளியவர் ரங்கசாமி : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநிலத்தையே புதைக்குழிக்குள் தள்ளியவர் ரங்கசாமி : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

செவ்வாய், ஏப்ரல் 26,2016, கூட்டணி தர்மத்தை மட்டுமல்ல, புதுச்சேரி மாநிலத்தையே புதைக்குழிக்குள் தள்ளியவர் ரங்கசாமி என்று புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா தாக்கி பேசினார்.  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 30 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து உப்பளம் புதிய துறைமுகம் திடலில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- மாற்றம் ஒன்றே மாறாதது என்றார் கிரேக்க

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் 234 தொகுதிகளிலும் வெற்றியை தரும் : தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக்தாவூது

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் 234 தொகுதிகளிலும் வெற்றியை தரும் : தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக்தாவூது

செவ்வாய், ஏப்ரல் 26,2016, முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்கள் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தரும் என்றார் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவரும், கடையநல்லூர் பேரவைத் தொகுதி வேட்பாளருமான சேக்தாவூது. கடையநல்லூர் பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் மாநகர் மாவட்டச் செயலர் முத்துக்கருப்பன் எம்.பி. தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வசந்திமுருகேசன் எம்.பி., முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாநில விவசாய பிரிவு இணைச் செயலர் ஆனைக்குட்டிப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலர்