வளமான, அமைதியான, எழுச்சியான தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கிறேன் : நன்றி அறிவிப்பு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

வளமான, அமைதியான, எழுச்சியான தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கிறேன் : நன்றி அறிவிப்பு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

புதன், ஏப்ரல் 20,2016, இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் வளமான, அமைதியான, எழுச்சியான தமிழ்நாட்டை உருவாக்கி இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நன்றி அறிவிப்பு கடிதம் வருகிற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா அந்த அமைப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் உலக நாடுகள்

விருத்தாசலத்தில் வேட்பாளர் மாற்றம் எதிரொலி : திமுகவினர் சாலை மறியல், இருவர் தீக்குளிக்க முயற்சி, ஸ்டாலின் பிரசாரம் ரத்து

விருத்தாசலத்தில் வேட்பாளர் மாற்றம் எதிரொலி : திமுகவினர் சாலை மறியல், இருவர் தீக்குளிக்க முயற்சி, ஸ்டாலின் பிரசாரம்  ரத்து

புதன், ஏப்ரல் 20,2016, விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மு.க.ஸ்டாலினின் பிரசாரக் கூட்டம், திமுக வேட்பாளர் மாற்றம் காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது.  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்கான திமுக வேட்பாளராக தங்க.ஆனந்தன் அறிவிக்கப்பட்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தங்க.ஆனந்தனை ஆதரித்து விருத்தாசலம் பாலக்கரை, திலீபன் சதுக்கத்தில் திமுக பொருளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட இருந்தார். இந்த நிலையில், தங்க.ஆனந்தன் திடீரென மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கடலூர் மேற்கு மாவட்ட

பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் மைதீன்கான் உருவ பொம்மை மீண்டும் எரிப்பு

பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் மைதீன்கான் உருவ பொம்மை மீண்டும் எரிப்பு

புதன், ஏப்ரல் 20,2016, பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்றக்கோரி பாளையங்கோட் டையில் அவரது உருவ பொம் மையை எரித்தும், சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டை முற்றுகையிட்டும் திமுகவில் ஒரு தரப்பினர் போராட் டம் நடத்தியிருந்தனர். திமுக நிர்வாகி சிவன் என்பவர் வண்ணார்பேட்டை செல்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலப்பா ளையத்தில் மைதீன்கான் அலுவ லகத்தையும் பெண்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில்

சேலத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா 16 அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

சேலத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா 16 அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

புதன், ஏப்ரல் 20,2016, சேலம், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் இன்று மாலை 3 மணியளவில் மகுடஞ்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் வாரணவாசியில் காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட

தேர்தல் விதிகளை மீறி தம்மம்பட்டி பேருந்து நிலையம் முன்பு கனிமொழி பிரச்சாரம் : போக்குவரத்து கடும் பாதிப்பு

தேர்தல் விதிகளை மீறி தம்மம்பட்டி பேருந்து நிலையம் முன்பு கனிமொழி பிரச்சாரம் : போக்குவரத்து கடும் பாதிப்பு

செவ்வாய், ஏப்ரல் 19,2016, சேலம் மாவட்டம் கெங்கவல்லி திமுக வேட்பாளரை ஆதரித்து  தேர்தல் விதிகளை மீறி அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.    சேலம் மாவட்டம் கெங்கவல்லி தனி தொகுதியில், சேலம் மாநகராட்சியின் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷனி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.   இவரை ஆதரித்து நேற்றிரவு கனிமொழி எம்பி, ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பேருந்து நிலையம் முன்பு பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் விதிகளை மீறி