தமிழக சட்டமன்ற தேர்தல், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் திருத்தப் பட்டியல்,முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு : 3 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் திருத்தப் பட்டியல்,முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு : 3 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

திங்கள் , ஏப்ரல் 18,2016, சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களின் திருத்த பட்டியலை, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வரும் மே 16-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர்களுக்கு பதிலாக கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, திருச்சி கிழக்கு-வெல்ல மண்டி

“கிள்ளியூர் தொகுதியில் அரசு கல்லூரி தொடங்கப்படும்’ :அதிமுக வேட்பாளர் ஏ. மேரி கமலபாய் உறுதி

“கிள்ளியூர் தொகுதியில் அரசு கல்லூரி தொடங்கப்படும்’ :அதிமுக வேட்பாளர் ஏ. மேரி கமலபாய் உறுதி

திங்கள் , ஏப்ரல் 18,2016, கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளர் ஏ. மேரி கமலபாய் தெரிவித்தார். கிள்ளியூர் தொகுதி அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் புதுக்கடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் மேலும் பேசியதாவது: இத்தொகுதி உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டால், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகப் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படும். இத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து கடலோரக் கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்கப்படும்.

கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை ப.சிதம்பரம் புலம்பல் : தி.மு.க. மீது காங்கிரஸ் கடும் அதிருப்தி

கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை ப.சிதம்பரம் புலம்பல் : தி.மு.க. மீது காங்கிரஸ் கடும் அதிருப்தி

திங்கள் , ஏப்ரல் 18,2016, தி.மு.க. கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் தி.மு.க. மீது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். விரும்பாத தொகுதிகளாக ஒதுக்கிவிட்டார்கள். காங்கிரசுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று  ப.சிதம்பரம் புலம்பித் தீர்த்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகளை முடித்து விட்டு அரசியல் தலைவர்கள் பிரச்சார

முதல்வர் ஜெயலலிதா இன்று காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத்தை அடுத்த வாரணவாசி மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம்

முதல்வர் ஜெயலலிதா இன்று காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத்தை அடுத்த வாரணவாசி மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம்

திங்கள் , ஏப்ரல் 18,2016, 18 அதிமுக வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா இன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 227 வேட்பாளர்களையும் அதன் கூட்டணிக்கட்சி சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகர்களில் போட்டியிடும் 21 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து கடந்த 9 ம்தேதி

தமிழகத்தில் மீண்டும் முதல்வர் ஜெயலலிதா தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைப்பார் : எடியூரப்பா பேட்டி

தமிழகத்தில் மீண்டும் முதல்வர் ஜெயலலிதா தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைப்பார் : எடியூரப்பா பேட்டி

ஞாயிறு, ஏப்ரல் 17,2016, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார் என்று எடியூரப்பா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி அலை வீசியபோதும், தமிழகத்தில் பாஜகவால் பெரிதாக வெற்றியை சுவைக்க முடியவில்லை. ஜெயலலிதாவின் செல்வாக்குதான் இதற்கு காரணம். தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவை வளர்க்க பாடுபட்டுவருகிறோம். இவ்விரு மாநிலங்களிலும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பாஜக பெறும். ஜெயலலிதா மீண்டும் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைப்பார். ஜெயலலிதா

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்காக உழைக்க மாட்டேன் : காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்காக உழைக்க மாட்டேன் : காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி

ஞாயிறு, ஏப்ரல் 17,2016, காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி கூறுகையில், அரவக்குறிச்சி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மாட்டேன். ஆனால், தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற உழைக்க மாட்டோம். இளங்கோவன் இரண்டாம் கட்ட தலைவர்களை நசுக்க பார்க்கிறார். கட்சிக்குள் இருந்து கொண்டே இளங்கோவனை எதிர்கொள்வேன் எனக்கூறினார். அரவக்குறிச்சியில் கடந்த ஒருவருடமாகவே  தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் ஜோதிமணி. இந்நிலையில், காங்கிரஸ் – திமுக தொகுதி உடன்பாட்டின்போது அரவக்குறிச்சி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.  இதனால் விரக்தியடைந்த ஜோதிமணி, தனித்து போட்டி