5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் தேர்தல்

5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் தேர்தல்

சனி, மார்ச் 05,2016, தமிழகம், புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு வரும் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதேபோல, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளையும் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 22-ஆம் தேதியும், மேற்கு வங்கம் – மே 29, கேரளம் – மே 31, புதுச்சேரி – ஜூன் 2, அஸ்ஸாம் – ஜூன் 6ஆம்

தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

வெள்ளி, மார்ச் 04,2016, தமிழகத்தில் ஒரே கட்டமாக மே 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல்தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29-ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ஏப்ரல் 30ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும்,மனுவை

தமிழத்தில் முதன் முறையாக சத்துணவு அமைப்பாளராக திருநங்கை நியமனம்

தமிழத்தில் முதன் முறையாக சத்துணவு அமைப்பாளராக திருநங்கை நியமனம்

வெள்ளி, மார்ச் 04,2016, தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கை ஜெயாவிற்கு இதற்கான பணி நியமான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் வசித்து வருபவர் திருநங்கை ஜெயப்பிரகாஷ் என்ற ஜெயா,23. இவருக்கு, கொளத்தூர் ஊராட்சி ஏர்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையை ஆட்சியர் அ.ஞானசேகரன் வழங்கினார்.

தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி

தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி

வெள்ளி, மார்ச் 04,2016, ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில், கருவுற்ற தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற பெண்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து கொண்டனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயிலில் கருவுற்ற தாய்மார்கள் 150 பேருக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு வகை வகையான கலவை சாதம் வழங்கப்பட்டது. அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

திமுகவுடன் கூட்டணி கிடையாது; காங்கிரஸுடனும் தமாகா இணையாது: ஜி.கே.வாசன் அறிவிப்பு

திமுகவுடன் கூட்டணி கிடையாது; காங்கிரஸுடனும் தமாகா இணையாது: ஜி.கே.வாசன் அறிவிப்பு

வெள்ளி, மார்ச் 04,2016, “சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியும் சேர மாட்டோம். காங்கிரஸுடன் இணையவும் மாட்டோம்’ என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். தமாகா மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பிளஸ் 2 முடித்த பின் என்ன படிக்கலாம் என்பது தொடர்பான வழிகாட்டு நூல்களை வெளியிட்டு, வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மாணவர்கள் நலன், குறைகள் கேட்டறிதல், தீர்வு காண வழிவகைகள், பிரச்னை குறித்து

தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளி, மார்ச் 04,2016, நாகை, கோடியக்கரையின் 8 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். நாகை, வேதாரண்யம் கோடியக்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் தற்போது 8 மீனவர்களை சிறைபிடித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம்

385 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

385 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, மார்ச் 04,2016, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி, அறுவை சிகிச்சை அரங்கம், அல்ட்ரா சோனோகிராம், இசிஜி ஊடுகதிர் இயந்திரம், செமி ஆட்டோ அனலைசர் உள்ளிட்ட நவீன மருத்துவக் கருவிகளுடன் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இவற்றில் 5 மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில்

ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுதலையான 44 மீனவர்கள் புது வாழ்வு தொடங்க தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுதலையான 44 மீனவர்கள் புது வாழ்வு தொடங்க தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை  வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, மார்ச் 04,2016, ஈரான் சிறையில் இருந்து விடுதலையான 44 தமிழக மீனவர்கள் புது வாழ்வு தொடங்க  தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- ஐக்கிய அரபு நாட்டில் அஜ்மன் மற்றும் சார்ஜாவில் தனியார் மீன்பிடி நிறுவனங்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 44 தமிழக மீனவர்கள்