ஆர்.கே.நகர் தொகுதியில் ‘டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதால் எனது வெற்றி எளிதாகி விட்டது ; ஜெ.தீபா பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதியில் ‘டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதால் எனது வெற்றி எளிதாகி விட்டது ; ஜெ.தீபா பேட்டி

வியாழக்கிழமை, மார்ச் 16, 2017, சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில்  ‘அ.தி.மு.க. வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்ட உடனே எனது வெற்றி உறுதியாகி விட்டது’ என்று ஜெ.தீபா கூறினார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தேர்தல் வியூகம் குறித்து தனது பேரவை நிர்வாகிகளிடம் சென்னை, தியாகராயநகர், சிவஞானம் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினார்.இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணிகள் குறித்த பொறுப்புகள்

இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் :தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வலியுறுத்தல்

இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் :தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, மார்ச் 16, 2017, புதுடெல்லி : தலைமை தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். அ.தி.மு.க. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் டெல்லி வந்தார்.மதியம் 12 மணி அளவில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதி, கமி‌ஷனர்கள்

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் : மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் : மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

வியாழக்கிழமை, மார்ச் 16, 2017, புதுடெல்லி : அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனு அளித்தனர். இந்தப் புகாருக்கு பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில்

பணியின்போது உயிரிழந்த 21 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பணியின்போது உயிரிழந்த 21 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, மார்ச் 16, 2017, சென்னை : மதுரை, திருச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியின்போது உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என 21 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடலூர் மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

வியாழக்கிழமை, மார்ச் 16, 2017, சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சிமன்றக்குழு கூட்டம் சென்னையில் அக்கட்சியின் தலைமைக்கழகத்தில் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களான அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, துணை பொதுசெயலாளர் டி.டி,வி.தினகரன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், ஜஸ்டீன் செல்வராஜ், டாக்டர் வேணுகோபால் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர், நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய