அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

வெள்ளி, பெப்ரவரி 19,2016, சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, “2011-ஆம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். சட்டப்பேரவையில் அவர் மேலும் கூறியது: “கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக வெற்றி பெற்று ஆட்சிஅமைத்த பின் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பது பற்றி

சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

வெள்ளி, பெப்ரவரி 19,2016, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டப்பேரவையில் நேற்று  இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சியாச்சின் பகுதியில் கடந்த 3-ம் தேதி நிகழ்ந்த பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த துயரச் சம்பவம் குறித்து தெரியவந்ததும் முதலமைச்சர்  ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, 4 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில், வீரர்களின் குடும்பத்தினரை அமைச்சர்களும்,

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் – முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் – முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, பெப்ரவரி 19,2016, 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்தக்குடிமக்கள் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் புதிய திட்டம் வரும் 24-ம் தேதி முதல் நிறைவேற்றப்பட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  தமிழக சட்டபேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க

மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக அரசு சார்பில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் திரு. R.B. உதயகுமார் சார்பில், மாநகர அரசு வழக்கறிஞர் திரு. எம்.எல். ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்திற்கு தமிழக அரசுதான் காரணம் என மத்திய ஆய்வுக்குழு அறிக்கையில்

தேமுதிகவினர் சட்டப் பேரவைக்கு வர அதிமுகவே காரணம்: அமைச்சர் கோகுலஇந்திரா

தேமுதிகவினர் சட்டப் பேரவைக்கு வர அதிமுகவே காரணம்: அமைச்சர் கோகுலஇந்திரா

வியாழன் , பெப்ரவரி 18,2016, சட்டப் பேரவைக்கு அதிமுகவால்தான் தேமுதிகவினர் வந்தனர் என்று கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா கூறினார். சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில் தேமுதிக உறுப்பினர் (ஆரணி) ஆர்.எம்.பாபு முருகவேல் பேசியதாவது:- ஆரணியில் பட்டு நெசவில் புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்த கணினி வடிவமைப்பு மையம் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். அண்ணா கூட்டுறவு பட்டு நெசவாளர் சங்கம், அன்னை அஞ்சுகம் நெசவாளர் சங்கம் ஆகியன பெயருக்காகவே இயங்குகின்றன. இதை அரசு கண்டு கொள்ளாமல்

பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன் , பெப்ரவரி 18,2016, பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். காவல் துறையின் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சூ.முருகேசன் (கடலூர் மாவட்டம்), ஆ.ஜெயராமன் (சேலம் மாநகர அரசு பொது மருத்துவமனை), சு.வெங்கட்ராமன் (திருவாரூர்-கோட்டூர்), ஆ.வடிவேல் (தருமபுரி-ஏரியூர்), சு.கோபால் (சென்னை மயிலாப்பூர்), உதவி ஆய்வாளர்கள் மு.நடராஜன் (நாமக்கல்-எலச்சிபாளையம்), செல்லதுரை (திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை), தலைமைக் காவலர்கள் சாமிதுரை (விழுப்புரம் சின்னசேலம்), தருமன் (நீலகிரி-தேனாடுகம்பை), இரண்டாம் நிலைக் காவலர் சு.ரமேஷ் (திருவண்ணாமலை-

குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை:அமைச்சர் காமராஜ் தகவல்

குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை:அமைச்சர் காமராஜ் தகவல்

வியாழன் , பெப்ரவரி 18,2016, காகிதத்தாலான குடும்ப அட்டைக்குப் பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவது எப்போது என்ற கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார். சட்டப் பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். அப்போது, ரேஷன் அட்டையில் உள்தாள் தொடர்ந்து ஒட்டப்படுகிறது. அந்தத் தாளை ஒட்டக் கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார். இதற்குப் பதிலளித்து அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியது: தமிழகம் முழுவதும் இப்போது புழக்கத்திலுள்ள