விலையில்லா பசுக்கள் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 2.6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி:ஓ.பன்னீர்செல்வம் தகவல்

விலையில்லா பசுக்கள் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 2.6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி:ஓ.பன்னீர்செல்வம் தகவல்

புதன், பெப்ரவரி 17,2016, விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கிய திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 2.6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக அவர் கூறியது: தமிழகத்தில் ரூ. 231.11 கோடியில் 60 ஆயிரம் பயனாளிகளுக்கு 60 ஆயிரம் விலையில்லா கறவைப் பசுக்களையும், ரூ.927.75 கோடியில் ஏழு லட்சம் பெண்களுக்கு 28 லட்சம் வெள்ளாடுகள், செம்மறியாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்

விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன், கெயில் திட்டங்களுக்கு அனுமதியளித்தது திமுக அரசுதான்:தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன், கெயில் திட்டங்களுக்கு அனுமதியளித்தது திமுக அரசுதான்:தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா குற்றச்சாட்டு

புதன், பெப்ரவரி 17,2016, மீத்தேன் மற்றும் கெயில் திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் தான் அனுமதியளிக்கப்பட்டது. இப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரமுகர்கள் கருத்து வெளியிட்டு வருவது நகைப்புக்குரியது என தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா குற்றம் சாட்டினார். தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா, ஆம்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த 15 மாதங்களாக மக்கள் பிரச்சினைகள் குறித்து தமாகா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. மீத்தேன், கெயில் போன்ற திட்டங்களுக்கு

தமிழகத்தை மின்மிகை மாநிலம் ஆக்கினார் முதல்வர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

தமிழகத்தை மின்மிகை மாநிலம் ஆக்கினார் முதல்வர் ஜெயலலிதா:    ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

புதன், பெப்ரவரி 17,2016, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிய பெருமை, முதல்வர் ஜெயலலிதாவையே சாரும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது தற்போதைய அரசின் சாதனைகளாக அவர் தன் உரையில் வெளியிட்ட பட்டியல்: * 5 ஆண்டுகளில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது. * இலங்கை பிரச்சனையில் சர்வதேச கவனத்தை ஈர்க்கப்பட்டது. * முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142

விலைவாசி உயர்வில் இருந்து ஏழைகளை பாதுகாக்க ரூ.25 ஆயிரம் கோடி உணவு மானியம் – இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு

விலைவாசி உயர்வில் இருந்து ஏழைகளை பாதுகாக்க ரூ.25 ஆயிரம் கோடி உணவு மானியம் – இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு

புதன், பெப்ரவரி 17,2016, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வில் இருந்து ஏழை, நடுத்தர வருவாய் குடும்பங்களை பாதுகாப்பதற்காக கடந்த 5 ஆண்டுகளில் உணவு மானியமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் 2016-2017-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் தமிழக அரசு இதுவரை மேற்கொண்டுள்ள பல்வேறு மக்கள்

அத்திக்கடவு – அவினாசி குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

அத்திக்கடவு – அவினாசி குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

புதன், பெப்ரவரி 17,2016, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ரூ.1,862 கோடியில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2011-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறையின் 31

மின்சாரம், கல்வி, சுகாதாரம், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு

மின்சாரம், கல்வி, சுகாதாரம், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு

புதன், பெப்ரவரி 17,2016, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 2016-17-ம் ஆண்டுக் கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (இடைக் கால பட்ஜெட்) சட்டசபையில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கே எம்.எல்.ஏ.க்கள் வரத்தொடங்கினர்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா 10.53 மணிக்கு அவைக்கு வந்தார். அவருடன் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வந்தார். 11 மணிக்கு சபாநாயகர் ப.தனபால் வந்தமர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதித்துறை

கலைவாணர் அரங்கத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்ததையடுத்து, கலைவாணர் குடும்பத்தினர் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

கலைவாணர் அரங்கத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்ததையடுத்து, கலைவாணர் குடும்பத்தினர் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், பெப்ரவரி 16,2016, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், சுமார் 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள கலைவாணர் அரங்கத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்ததையடுத்து, கலைவாணர் குடும்பத்தினர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்த கலைவாணர் அரங்கம், முந்தைய தி.மு.க ஆட்சியில் இடிக்கப்பட்டது – இதனையடுத்து, காலியாக உள்ள அந்த இடத்தில், அ.இ.அ.தி.மு.க. அரசு, பிரம்மாண்டமான கலை அரங்கம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா

ஊழலும் – ஊழலும் கை கோர்த்துள்ளது:திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து எச்.ராஜா கருத்து

ஊழலும் – ஊழலும் கை கோர்த்துள்ளது:திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து எச்.ராஜா கருத்து

செவ்வாய், பெப்ரவரி 16,2016, திமுக – காங்கிரசும் கூட்டணி அமைத்தன் மூலம், ஊழலும் – ஊழலும் கை கோர்த்திருப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி சட்டமன்ற தொகுதி பாஜக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான செயல்பாடுகள் குறித்தும் கட்சியினருக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, திமுக – காங்கிரஸ் கூட்டணியால், ஊழலும் – ஊழலும் கை