சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த தமிழக வீரர்களுக்கு ராணுவ வீரர்கள், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி:முதலமைச்சர் உத்தரவின்பேரில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல்

சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த தமிழக வீரர்களுக்கு ராணுவ வீரர்கள், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி:முதலமைச்சர் உத்தரவின்பேரில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல்

செவ்வாய், பெப்ரவரி 16,2016, சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்களின் உடல்கள், தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, அவர்களின் சொந்தஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ராணுவ வீரர்களின் உடல்களுக்கு, முதலமைச்சர்  ஜெயலலிதா சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. காஷ்மீர் மாநிலம், சியாச்சின் பகுதியில், கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹவில்தார் திரு. M.ஏழுமலை, ஹவில்தார் திரு. S. குமார், சிப்பாய் திரு. G. கணேசன், சிப்பாய்

முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட முதலுதவி மோட்டார் சைக்கிள் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது

முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட முதலுதவி மோட்டார் சைக்கிள் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது

செவ்வாய், பெப்ரவரி 16,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சென்னையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலுதவி மோட்டார்சைக்கிளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சேவை தொடங்கப்பட்ட நான்கு நாள்களில் 10 வாகனங்களின் மூலம் 101 பேருக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் நுழைய முடியாத இடத்தில் எளிதில் செல்வதற்காகவும், விரைந்து முதலுதவி அளிப்பதற்கு ஏதுவாகவும் மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அண்மையில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டன. 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை அளித்து வரும் ஜிவிகே

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடையே பிரச்சாரம் செய்ய தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம்:அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் பங்கேற்பு!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடையே பிரச்சாரம் செய்ய தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம்:அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் பங்கேற்பு!

செவ்வாய்கிழமை, பிப்ரவரி 16, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும், முதலமைச்சரின் சட்டப்பேரவை உரைகளையும், அனைத்துப் பகுதிகளிலும் மக்களிடையே எடுத்துச்செல்லும் வகையில், கழக மகளிர் அணி சார்பில் எழுச்சிப் பிரச்சாரப் பயணம்  நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சர்  ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து கடந்த மாதம் உரையாற்றினார்.

சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளது; சரத்குமார் பேச்சு

சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளது; சரத்குமார் பேச்சு

செவ்வாய், பெப்ரவரி 16,2016, சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது என்று சரத்குமார் கூறினார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. ‘மாற்றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று பகல் 12 மணிக்கு சரத்குமார் எம்.எல்.ஏ. மக்களை சந்தித்தார். அவரை, புதிய பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் கட்சி

யார் அடுத்த முதல்வர்?பொதுமக்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமோக ஆதரவு:புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தகவல்

யார் அடுத்த முதல்வர்?பொதுமக்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமோக ஆதரவு:புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தகவல்

செவ்வாய், பெப்ரவரி 16,2016, தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று 32.63 % பேரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு 18.88 % திமுக தலைவர் கருணாநிதிக்கு 15.21 % பேரும் ஆதரவு தருவதாக புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் முதலமைச்சராக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ? மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஆப்ட் நிறுவனமும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. கடந்த

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது; இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது; இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

செவ்வாய், பெப்ரவரி 16, அ.தி.மு.க. தலைமையிலான இந்த ஆட்சி, வரும் மே மாதத்தோடு நிறைவடைகிறது. எனவே தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் தொடக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தோடு ஆட்சி முடிவதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தமிழக அரசு தாக்கல் செய்கிறது. இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதை தாக்கல் செய்கிறார்.