முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு

வெள்ளி, பெப்ரவரி 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினருடன் சந்தித்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவை, இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகன் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தவேண்டும் என கேட்டுக்கொண்டு, திருமண அழைப்பிதழை வழங்கினார். பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- எனது மகன்

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவ-மாணவிகளின் கல்வித் தரம் உயர்வு

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவ-மாணவிகளின் கல்வித் தரம் உயர்வு

வெள்ளி, பெப்ரவரி 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 27 உண்டு-உறைவிடப் பள்ளிகளில், ஏராளமான வசதிகளுடன் பழங்குடியின மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருவதால், பழங்குடியின மக்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. மலைமாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், குறும்பர், இருளர், காட்டுநாயக்கர் என 5 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வசதியற்ற நிலையில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதால், இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக் கனியாக இருந்தது. முதலமைச்சர்

தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன

தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன

வெள்ளி, பெப்ரவரி 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் கழகம் சார்பில், இருங்காட்டுக்கோட்டையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைக் கழககப் பேச்சாளர்-நடிகர் திரு. ராமராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்று, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைத்தனர். திருவள்ளூர்

நாகை மாவட்டத்தில் ஆசியாவின் மிகப்பெரிய நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணி தீவிரம்:முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

நாகை மாவட்டத்தில் ஆசியாவின் மிகப்பெரிய நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணி தீவிரம்:முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

வெள்ளி, பெப்ரவரி 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில், ஒரு லட்சம் டன் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில், ஆசியாவின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டத்திற்கு விவசாயிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். காவிரி டெல்டா மாவட்டமான நாகை மாவட்டத்தில், குறுவை, சம்பா, தாளடி என 3 வகையான காலங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இதன்மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லானது, ஆண்டுக்கு 3 லட்சம்

தமிழகத்தில் இனி மின்தடை என்பதே கிடையாது:அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்

தமிழகத்தில் இனி  மின்தடை என்பதே கிடையாது:அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்

வெள்ளி, பெப்ரவரி 12,2016, கோடைக்காலத்தில் மின்வெட்டை சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளதாகம் தமிழகத்தில் இனி  மின்தடை என்பதே கிடையாது என்றும் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னையில் இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில், மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

பெரியாரிசம் பேசும் ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக நடத்திய கோமாதா பூஜை!

பெரியாரிசம் பேசும் ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக நடத்திய கோமாதா பூஜை!

வெள்ளி, பெப்ரவரி 12,2016, எதிர்ப்புகள் தானாக விலகவும், முதல்வர் பதவியில் அமரவும், கோ பூஜையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்றதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில், ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று ஓட்டேரி பகுதிவாசிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள, ‘மெட்ராஸ் பிஞ்சராபோல் டிரஸ்ட்’டிற்கு சென்றார். இந்த டிரஸ்ட், 50 ஏக்கர் பரப்பளவில் செயல்படுகிறது. இங்கு, 2,000த்திற்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோசாலைக்கு, தங்களுக்கு ஏற்பட்ட தோஷம்

கட்டுமான தொழிலாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

கட்டுமான தொழிலாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வெள்ளி, பெப்ரவரி 12,2016, பணியில் இருக்கும் போது விபத்தில்  இறக்கும்  கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ 5 லட்சம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடங்களில் விபத்து ஏற்பட்டு இறக்கும் போது அவர்களுக்கான நிதி உதவி ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று  முதலமைச்சர்  ஜெயலலிதா  12.8.2014 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் அடிப்படையில்,

புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வெள்ளி, பெப்ரவரி 12,2016, சென்னை : பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூரில், மேதஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலை, விருதுநகர் மாவட்டம் -சாத்தூர், விழுப்புரம் மாவட்டம் – திண்டிவனம் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:-  பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூரில்புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை