மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கூடாது பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கூடாது பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

புதன், பெப்ரவரி 10,2016, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மருத்துவ கல்லூரிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பை, மறுஆய்வு செய்யக்கோரும் மத்திய அரசின் எந்த ஒரு முயற்சியையும் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது என்ற

மொழிப்போர் தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

மொழிப்போர் தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

புதன், பெப்ரவரி 10,2016, தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பாரதிதாசன் கவிதைகள், ஆத்திசூடி நூல்களை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். மேலும், அரசுக் கட்டடங்கள் சிலவற்றையும் அவர் திறந்துவைத்தார் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், செய்தி-சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, பள்ளிக் கல்வித்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியால் சென்னையில் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் : 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர  முயற்சியால் சென்னையில் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் : 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

செவ்வாய், பெப்ரவரி 09,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியின் விளைவாக திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் 400-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டுள்ளனர். முதலமைச்சர்  ஜெயலலிதா, திருநங்கைகளின் நலனுக்காக பல்வேறு உதவிகளை அளித்து வருகிறார். திருநங்கைகளுக்கு உதவித்தொகை வழங்குதல், குடும்ப அட்டை வழங்குதல், குடியிருப்புகள் அளித்தல் என பல்வேறு உதவிகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக சிறப்பு முகாம் ஒன்று சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடக்கம்

செவ்வாய், பெப்ரவரி 09,2016, முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர்  ஜெ ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள சுகாதார

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், பெப்ரவரி 09,2016, சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி இறந்த தமிழக ராணுவ வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் மாநிலம், சியாச்சின் பகுதியில் 3-2-2016 அன்று ஏற்பட்ட பனிச் சரிவில் இந்திய நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களான, வேலூர் மாவட்டம், பாகாயம் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் எம்.ஏழுமலை;

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி,விலையில்லா கண் கண்ணாடி,விலையில்லா தலைக்கவசம்:அமைச்சர் வளர்மதி வழங்கினார்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி,விலையில்லா கண் கண்ணாடி,விலையில்லா தலைக்கவசம்:அமைச்சர் வளர்மதி வழங்கினார்

செவ்வாய், பெப்ரவரி 09,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, அ.இ.அ.தி.மு.க. சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, விலையில்லா தலைக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் நடைபெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவின்படி, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா தலைக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் பாலம் அருகே ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் சுமார் 100 பேருக்கு விலையில்லா தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன. மேலும், விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இதில், அமைச்சர் திருமதி

திருவண்ணாமலை கோயில் குளத்தில் மூழ்கி இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திருவண்ணாமலை கோயில் குளத்தில் மூழ்கி இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம்  நிதியுதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், பெப்ரவரி 09,2016, தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது, திருவண்ணாமலை கோயில் குளத்தில் மூழ்கி இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவண்ணாமலை   நகரம்,   அருள்மிகு   அருணாசலேஸ்வரர்  திருக்கோயில் அருகிலுள்ள  அய்யங்குளத்தில் 8.2.2016 அன்று நடைபெற்ற தீர்த்தவாரி  நிகழ்ச்சியின்போது    திருவண்ணாமலை  நகரத்தைச் சேர்ந்த ராஜா மகன் புண்ணியக்கோட்டி,  சீனுவாசன் மகன் வெங்கட்ராமன், சுப்பிரமணியன் மகன் மணிகண்டன்,  விழுப்புரம் மாவட்டம்,  கள்ளக்குறிச்சி வட்டம்,   நீலமங்கலம் பகுதியைச்  சேர்ந்த

தமிழக சட்டசபை வரும் 16–ந்தேதி கூடுகிறது:அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபை வரும் 16–ந்தேதி கூடுகிறது:அன்றே இடைக்கால பட்ஜெட்  தாக்கல்

செவ்வாய், பெப்ரவரி 09,2016, தமிழக சட்டசபை வரும் 16–ந்தேதி கூடுகிறது. மேலும் அன்று தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 20–ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மீது நடந்த விவாதத்தின் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள். இதற்கு முதல்வர் ஜெயலலிதா விரிவாக பதில் அளித்து பேசினார். இந்த நிலையில் தமிழக சட்டசபையின் அடுத்த

இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

செவ்வாய், பெப்ரவரி 09,2016, இந்தியாவிலேயே முதன் முறையாக விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைசெயலகத்தில் அவசர கால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்கள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் கடற்கரை சாலை மற்றும் தலைமை செயலகம் எதிரில் அலங்கார பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தலைமை செயலக வாசலில் வாழை மரங்கள் கட்டப்பட்டு,

மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா:இனி வீட்டுக்கே வரும் மருத்துவ சேவை

மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா:இனி வீட்டுக்கே வரும் மருத்துவ சேவை

திங்கள் , பெப்ரவரி 08,2016, சென்னை: சந்து பொந்தெல்லாம் புகுந்து வந்து மக்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை தரும் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று துவக்கி வைக்கப்பட்ட அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களில், 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 இருசக்கர வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடவர் மட்டுமின்றி, பெண் அவசரகால மருத்துவ உதவியாளரும் இயக்கும் வண்ணம் இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன இது