விண்கல் விழுந்ததில் உயிரிழந்த ஓட்டுனர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

விண்கல் விழுந்ததில் உயிரிழந்த ஓட்டுனர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , பெப்ரவரி 08,2016, சென்னை : நாட்றாம் பள்ளியில் உள்ளதனியார் பொறியியல் கல்லூரியில் விண்கல் விழுந்ததில் உயிரிழந்த பேருந்து ஒட்டுநர் காமராஜ் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த மூவரின் சிகிச்சைக்கு தலா ரூ 50 ஆயிரம் வழங்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட  அறிக்கை – வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி சாதனைகள் அடங்கிய புத்தகங்களை நாகர்கோவிலில் தமிழ் மகன் உசேன், என். தளவாய் சுந்தரம் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினர்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி சாதனைகள் அடங்கிய புத்தகங்களை நாகர்கோவிலில் தமிழ் மகன் உசேன், என். தளவாய் சுந்தரம் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினர்

திங்கள் கிழமை, பிப்ரவரி 08, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி சாதனைகள் அடங்கிய புத்தகங்களை ஜெயலலிதா பேரவை சார்பில் நாகர்கோவிலில்  எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், மாவட்ட செயலாளர் என். தளவாய் சுந்தரம் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினர். ஜெயலலிதாவை முதலமைச்சராக்க வேண்டி மாபெரும் லட்சிய பேரணி மற்றும் தெருமுனை கூட்டம் நாகர்கோவில் கோட்டார் ரெயிலடி திடலில் நடைப்பெற்றது. அங்கிருந்த புறப்பட்ட லட்சிய பேரணி கம்பளம்,கண்ணாகுடிதெரு, கல்மட தெரு, வடிவீஸ்வரம், தெற்குரத வீதி,

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் நேரில் ஆறுதல்

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் நேரில் ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 07, 2016, டி.கல்லுப்பட்டி சாலை விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர்கள்  செல்லூர் கே.ராஜு,  பி.தங்கமணி, டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்து, மதுரை  ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் கே.ராஜு,  தொழில்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்  பி.தங்கமணி,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

போடியில் ரூ.19 கோடியே 67 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் : சுகாதார வசதிகளை அமல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மக்கள் நன்றி

போடியில் ரூ.19 கோடியே 67 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் : சுகாதார வசதிகளை அமல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மக்கள் நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டியில் 19 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுகாதார வசதிகளை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வரும் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு தேனி மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு

,தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலத்திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக ஃபிஜி சுற்றுலாத்துறை அமைச்சர் பாராட்டு

,தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலத்திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக ஃபிஜி சுற்றுலாத்துறை அமைச்சர் பாராட்டு

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும், நீண்டகால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாகவும், ஃபிஜி தீவுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர் Faiyaz Siddic Koya பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா – ஃபிஜி நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, ஃபிஜி நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வந்த இக்குழுவினர், தமிழகத்தில்

மதுரை மாவட்டத்தில் 3,912 பேருக்கு சிறு வணிக கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

மதுரை மாவட்டத்தில் 3,912 பேருக்கு சிறு வணிக கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, மதுரை மாவட்டத்தில் 3,912 பேருக்கு 1 கோடியே 96 லட்சம் ரூபாய் சிறு வணிக கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். தமிழகத்தில் 2 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு அம்மா சிறு வணிக கடன் உதவி திட்டம் மூலம் ரூ.100 கோடி வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலத்தில் 32 மாவட்டங்களிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு சிறு வியாபாரிகளுக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் இந்த கடன்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு  நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், நிதி உதவிகள் வழங்கப்பட்டன. தங்களின் குடும்ப வறுமையை போக்க நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள நாகை மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினர், அன்றாட செலவினங்களை சமாளிக்கும் வகையில் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் :உயர்தர சிகிச்சை கிடைத்ததற்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் :உயர்தர சிகிச்சை கிடைத்ததற்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி!

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, மருந்து பரிசோதனைகள் பெற்றனர். முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்சென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. அமைச்சர் திருமதி. பா.வளர்மதி, டாக்டர் ஜெ ஜெயவர்தன் எம்.பி., உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த முகாமில், மகப்பேறு, குழந்தைகள், இதயம், எலும்பு, சிறுநீரகம், காது, மூக்கு, தொண்டை,