70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவும்,மகாமகத் திருவிழாவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் முதலமைச்சர் உத்தரவுப்படி,மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவும்,மகாமகத் திருவிழாவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் முதலமைச்சர் உத்தரவுப்படி,மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

வியாழன் , ஜனவரி 28,2016, காவேரி டெல்டா பகுதியில் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்களில், காலதாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்குத் தேவையான தண்ணீரை தொடர்ந்து வழங்கவும், கும்பகோணம் மகாமகத் திருவிழாவை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் ஏதுவாக, இன்றுமுதல், ஃபிப்ரவரி மாதம் 25-ம் தேதிவரை, மேட்டூர் அணையில் இருந்து, நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். < முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், காவேரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கடந்த ஆண்டு

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் விவசாயி துரைராஜின் புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரைராஜின் குடும்பத்தினர் நன்றி

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் விவசாயி துரைராஜின் புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரைராஜின் குடும்பத்தினர் நன்றி

வியாழக்கிழமை, ஜனவரி 28, 2016, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம், உணவு குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மருத்துவ நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி துரைராஜ், உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த குடல்நோய் அறுவை

முதலமைச்சர் அம்மாவின் திட்டங்கள்,உதவிகள் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளது:அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேச்சு

முதலமைச்சர் அம்மாவின் திட்டங்கள்,உதவிகள் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளது:அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேச்சு

வியாழக்கிழமை, ஜனவரி 28, 2016, வீடுதோறும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்கள் உதவிகள் கிடைத்துள்ளன என்று அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா கூறினார். அண்ணா தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய பேச்சை மக்களிடம் எடுத்து சொல்லவும், அண்ணா தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கவும் 115வது வார்டு அண்ணா தி.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தென் சென்னை வடக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. துணை செயலாளரும், 115வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.விஜயராம

அம்மா சிறுவணிகக் கடனுதவி திட்டத்தினை விரைந்து செயல்படுத்த அமைச்சர்.செல்லூர் கே.ராஜூ நடவடிக்கை

அம்மா சிறுவணிகக் கடனுதவி திட்டத்தினை விரைந்து செயல்படுத்த  அமைச்சர்.செல்லூர் கே.ராஜூ நடவடிக்கை

வியாழன் , ஜனவரி 28,2016, முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சிறுவணிக கடனுதவி திட்டத்தில் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டு்ள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த ,மழையினால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 2 இலட்சம் நபர்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்கும் அம்மா சிறுவணிகக் கடனுதவி திட்டத்தினை விரைந்து செயல்படுத்துவது குறித்து மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்.செல்லூர் கே.ராஜூ அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு

கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கம்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட பழ.கருப்பையா கட்சியிலிருந்து  நீக்கம்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

வியாழன் , ஜனவரி 28,2016, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துறைமுகம் சட்டப் பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்களும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை தெற்கு மாவட்டச் சேர்ந்த பழ.கருப்பையா (துறைமுகம் சட்டமன்ற

முதலமைச்சர் ஜெயலலிதா விளையாட்டு துறைக்கு மட்டும் ரூ.570 கோடியை ஒதுக்கி உள்ளார்:பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் பேச்சு

முதலமைச்சர் ஜெயலலிதா விளையாட்டு துறைக்கு மட்டும் ரூ.570 கோடியை ஒதுக்கி உள்ளார்:பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் பேச்சு

புதன்கிழமை, ஜனவரி 27, 2016, தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா ரூ.570 கோடி ஒதுக்கியுள்ளார் என வலுதூக்கும் போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் பேசினார். அகில இந்திய அளவில் 32–வது ஜூனியர் மற்றும் மாஸ்டர்ஸ் தேசிய வலுதூக்கும் போட்டிகள் முதன்முறையாக வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் கே.எம்.ஜி கல்லூரியில் நடந்து வருகிறது. கடந்த 24–ந் தேதி தொடங்கிய போட்டிகள் வருகிற 28–ந் தேதி வரை நடக்கிறது. 2–ம் நாள் நடந்த போட்டிகளில்