பொங்கல் பரிசுத் தொகுப்பு: விநியோகத்தை தொடக்கிவைத்தார் முதல்வர் ஜெயலலிதா

பொங்கல் பரிசுத் தொகுப்பு: விநியோகத்தை தொடக்கிவைத்தார் முதல்வர் ஜெயலலிதா

வியாழன் , ஜனவரி 07,2016, தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார். தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐந்து பேருக்கு இத்தொகுப்பை வழங்கினார் . தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகிய 1 கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில்,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணி தீவிரம்

வியாழக்கிழமை, ஜனவரி 07, 2016, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கந்தன்சாவடி, பள்ளிக்கரணை பகுதிகளில், 2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம், சொக்கனாம்புதூர், கிருஷ்ணாபுரம்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி,4238 பயனாளிகளுக்கு ரூ.17.98 கோடி திருமண நிதி மற்றும்16,952 கிராம் தங்கம்:அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ். கோகுல இந்திரா ஆகியோர் வழங்கினர்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி,4238 பயனாளிகளுக்கு ரூ.17.98 கோடி திருமண நிதி மற்றும்16,952 கிராம் தங்கம்:அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ். கோகுல இந்திரா ஆகியோர் வழங்கினர்

வியாழன் , ஜனவரி 07,2016, சென்னையில் 2 நாட்களில் 4238 பயனாளிகளுக்கு ரூ.17 கோடியே 98 லட்சம் மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் 16 ஆயிரத்து 952 கிராம் தங்கம் ஆகியவற்றை அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ். கோகுல இந்திரா ஆகியோர் வழங்கினார்கள். சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக மூன்று மண்டலங்களில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விவசாயிகள் பயன்பெரும் வகையில் வேலூரில் அரசு பொருட்காட்சி: அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார்

விவசாயிகள் பயன்பெரும் வகையில் வேலூரில் அரசு பொருட்காட்சி: அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார்

வியாழன் , ஜனவரி 07,2016, வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவக்க விழா கலெக்டர் நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேயர் ப.கார்த்தியாயினி மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை இயக்குநர் (பொருட்காட்சி) கு.தாணப்பா வரவேற்று பேசினார். விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பொருட்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசியதாவது: முதலமைச்சர்

அதிமுக மகளிர் அணி செயலாளராக அமைச்சர் கோகுல இந்திரா நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக மகளிர் அணி செயலாளராக அமைச்சர் கோகுல இந்திரா நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஜனவரி 07,2016, சென்னை : அதிமுக மகளிர் அணி செயலாளராக அமைச்சர் கோகுல இந்திராவை நியமனம் செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- அதிமுக மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் சசிகலா புஷ்பா எம்.பி., அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.கோகுல இந்திரா அவரவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அதிமுக மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் கைத்தறித்துணிநூல்

9-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

9-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை  அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஜனவரி 07,2016, சென்னை : வரும் சட்டமன்றத் தேர்தலில் சமூக வலைத்தளங்கள் மூலம் அதிமுக வெற்றிக்கு வியூகம் வகுக்க அதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு ஆலோசனை கூட்டங்கள் வரும் 9-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் சார்பில்,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் ரூ.48 கோடி நிதி:முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்கினர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் ரூ.48 கோடி நிதி:முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்கினர்

புதன்கிழமை, ஜனவரி 06, 2016, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 48 கோடி ரூபாய் வழங்கினார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில், தொகுதி

முல்லைப்பெரியாறு பாசன பகுதியில் அமோக விளைச்சல்:அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

முல்லைப்பெரியாறு பாசன பகுதியில் அமோக விளைச்சல்:அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

புதன், ஜனவரி 06,2016, முல்லைப்பெரியாறு பாசனத்தால் பயன்பெரும் மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு அமோக விளைச்சல் கண்டுள்ளதால், விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா இடைவிடாது நடத்திய சட்டப்போராட்டம் காரணமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டதால் தங்களுக்கு தேவையான பாசன நீர் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட அல்லும் பகலும் அயராது பாடுப்பட்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, இடைவிடாது நடத்திய சட்டப்போராட்டம் காரணமாக முல்லைப்பெரியாறு

ஜெயலலிதா பேரவை சார்பில்,தமிழக அரசின் மகத்தான சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் லட்சியப் பேரணி தொடங்கியது-லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்பு

ஜெயலலிதா பேரவை சார்பில்,தமிழக அரசின் மகத்தான சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் லட்சியப் பேரணி தொடங்கியது-லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்பு

புதன், ஜனவரி 06,2016, தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் தமது பெயரில் செயல்பட்டு வரும் பேரவை சார்பில் நியமிக்கப்படும் ஒவ்வொரு வாக்கு சேகரிப்பாளரும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று அப்பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து, கழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க கழக நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் வாக்காளர்களை சந்தித்து கழக அரசின் சாதனைகளை விளக்கி வருகின்றனர். கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் உள்ள

முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

புதன், ஜனவரி 06,2016, வரும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும்முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்றார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர். புதுக்கோட்டையில் புதன்கிழமை அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியைத் தொடக்கி வைத்து பேசியது: கடந்த சட்டமன்றத்தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று புதுக்கோட்டை அதிமுகவின் கோட்டை என நிரூபிக்கப்பட்டது. அதே போல 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை