தமிழக மாணவர்களின் நலன் கருதி சிவில் சர்வீசஸ் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

தமிழக மாணவர்களின் நலன் கருதி சிவில் சர்வீசஸ் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

திங்கள் , டிசம்பர் 14,2015, மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவர்களின் நலன் கருதி சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:– சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தனிப்பட்ட முறையில் தாங்கள் நன்கு அறிவீர்கள். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பிற பகுதிகளிலும், சென்னையிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. மின்சார சப்ளை உள்ளிட்ட

குடிசைகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ரூ. 1 லட்சம்:முதல்வர் ஜெயலலிதாவை சந்திந்த பின் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி

குடிசைகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ரூ. 1 லட்சம்:முதல்வர் ஜெயலலிதாவை சந்திந்த பின் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி

திங்கள் , டிசம்பர் 14,2015, தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடிழந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். தமிழக வெள்ளச் சேதம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை சென்னை வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை வேளச்சேரி, தாம்பரம் முடிச்சூர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளச் சேதங்களை அவர் பார்வையிட்டார். அங்கு

வெள்ளப் பகுதிகளைச் சீரமைக்க ரூ.4,500 கோடி,வீடுகள் கட்டித் தர ரூ.5,000 கோடி வழங்க மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

திங்கள் , டிசம்பர் 14,2015, வெள்ளம் பாதித்த பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், குடிநீர் குழாய்கள், மழைநீர் வடிகால் அமைப்புகள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.4,500 கோடி நிதி தேவை என மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.மேலும் ,அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் வசித்து வந்த 50 ஆயிரம் குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் கட்டித் தர ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என்று தன்னை சந்தித்த மத்திய

சென்னையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி

சென்னையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி

ஞாயிறு, டிசம்பர் 13,2015, சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதியில் துப்புரவு பணி மேற்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி, 6-வது மண்டலம், 77-வது கோட்டத்தில் துப்புரவு பணியாளராகப் பணிபுரிந்து வந்த, திருவல்லிக்கேணி, ராம் நகரைச் சேர்ந்த திரு. காந்தாராவ், நேற்று, வெள்ளம் பாதித்த புளியந்தோப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில்,தட்டம்மை தடுப்பூசி முகாம்கள்:ஒரே நாளில் 31,692 பேர் பயன் பெற்றனர்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில்,தட்டம்மை தடுப்பூசி முகாம்கள்:ஒரே நாளில் 31,692 பேர் பயன் பெற்றனர்

ஞாயிறு, டிசம்பர் 13,2015, தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாமினை தொடங்க ஆணையிட்டார். இதன்படி சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தட்டம்மை தடுப்பூசி முகாம்கள் நேற்று முன்தினம் தொடங்கியது. மழையினால், குழந்தைகளுக்கு வரும் தட்டம்மை நோயை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் 186,

இரு சக்கர வாகனங்களை, இலவசமாக பழுது பார்க்கும் முகாம்கள் சென்னையில் தொடங்கின:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாகன ஓட்டிகள் நன்றி

இரு சக்கர வாகனங்களை, இலவசமாக பழுது பார்க்கும் முகாம்கள் சென்னையில் தொடங்கின:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாகன ஓட்டிகள் நன்றி

ஞாயிறு, டிசம்பர் 13,2015, சென்னையில் மழையால் சேதம் அடைந்த இரு சக்கர வாகனங்களை இலவசமாக பழுது நீக்கி கொடுக்கும் முகாம்கள் நேற்று தொடங்கின. இதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர். சென்னையில் சமீபத்தில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களின் என்ஜினில் தண்ணீர் புகுந்து

தமிழக கடலோர பாதுகாப்பிற்காக மீனவர்களுக்கு வழங்கப்படும் ஆபத்துக்கால எச்சரிக்கை கருவிகளுக்கு மத்திய அரசு 75 சதவீத மானியம் அளிக்க வேண்டும் – தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

சனி, டிசம்பர் 12,2015, தமிழக கடலோர பாதுகாப்பிற்காக மீனவர்களுக்கு வழங்கப்படும் ஆபத்துக்கால எச்சரிக்கை கருவிகளுக்கு மத்திய அரசு 75 சதவீத மானியம் அளிக்க வேண்டும், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதியாக்க வேண்டும் – கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அலகில், விரைவில் மீண்டும் மின்உற்பத்தியை தொடங்க வேண்டும் என மத்திய அரசை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 26-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் இன்று

முதலமைச்சரின் சீரிய நடவடிக்கைகளின் காரணமாக,கனமழையால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் குறுகிய காலத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளதாக “தினத்தந்தி” நாளிதழ் பாராட்டு

முதலமைச்சரின் சீரிய நடவடிக்கைகளின் காரணமாக,கனமழையால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் குறுகிய காலத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளதாக “தினத்தந்தி” நாளிதழ் பாராட்டு

சனி, டிசம்பர் 12,2015, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால், கிராமங்கள் மட்டுமின்றி நகரப் பகுதிகளிலும் சூழ்ந்த வெள்ளத்தை, போர்க்கால அடைப்படையில் அகற்ற முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதையடுத்து, மாநில பேரிடர் குழு, பொதுப்பணி, வருவாய், காவல் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன. தமிழக அரசின், கடைகோடி ஊழியர் முதல் தலைமைச் செயலாளர் வரை லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் இரவு பகல் பாராமல் 24 மணி

ரூ.25 கோடி நிதியுதவி அளித்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி

ரூ.25 கோடி நிதியுதவி அளித்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி

சனி, டிசம்பர் 12,2015, தமிழக வெள்ள நிவாரணப் பணிக்காக ரூ.25 கோடி நிதியுதவி அளித்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக வெள்ள நிவாரணப் பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக ரூ.25 கோடி அளித்ததற்காக தங்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுக்க தமிழக அரசு ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறது” எனஅந்த கடிதத்தில்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கண்டறிந்து நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கண்டறிந்து நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சனி, டிசம்பர் 12,2015, முதலமைச்சர்  ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, சென்னையில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கண்டறிந்து நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒருவாரத்தில் நிறைவடையும் என ஊழியர்கள் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழையால் சென்னை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களை கண்டறிந்து உரிய நிவாரண நிதி வழங்கிட, முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தொல்லியல்துறை ஆணையர் திரு. டி. கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்