மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில்,முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தீபா ஆதரவு : இரு கரங்களாக செயல்படுவோம் என அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில்,முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தீபா ஆதரவு : இரு கரங்களாக செயல்படுவோம் என அறிவிப்பு

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2017, சென்னை : முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நானும் (தீபா) இருகரங்களாகச் செயல்படுவோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் இணைந்து மேற்கொள்வோம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்றிரவு மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவித்தார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சென்னை தி.நகரில் வசிக்கிறார். ஜெயலலிதா மரணத்தையடுத்து அவரை அதிமுகவுக்கு தலைமை ஏற்க வரவேண்டும் என்றும் புதிய கட்சியை தொடங்க வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் தினமும்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேட்டுபாளையம் எம்எல்ஏ சின்னராஜ் ஆதரவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேட்டுபாளையம் எம்எல்ஏ சின்னராஜ் ஆதரவு

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2017, சென்னை : முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மேட்டூர் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை, மேட்டுபாளையம் எம்எல்ஏ சின்னராஜ் ஆகியோர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த பிறகு, செம்மலை அளித்த பேட்டி: முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் நல்ல முடிவை எடுத்துள்ளேன் என்பதை உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பே உறுதி செய்துள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சியானது பன்னீர்செல்வம் உருவில் தொடரும்.இதற்கு ஜெயலலிதாவின் ஆன்மா நிச்சயமாக வழிவகுக்கும்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் ; சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் ; சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2017, புதுடெல்லி : சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம் நேற்று காலை கூடியதும், நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு 10.32  மணிக்கு தீர்ப்பை வழங்கத் தொடங்கியது.

அ.தி.மு.கவின் நலன் கருதி மனக்கசப்பை மறந்து ஒற்றுமையாக செயல்படுவோம் : எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

அ.தி.மு.கவின் நலன் கருதி மனக்கசப்பை மறந்து ஒற்றுமையாக செயல்படுவோம் : எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2017, சென்னை :  தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”எனது அன்புக்குரிய அதிமுக அமைச்சர்களே, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்! கடந்த 07.02.2017 அன்றிரவு, உங்கள் அன்புச் சகோதரன் ஆகிய நான், ஜெயலலிதாவின் நினைவகத்தில் பிரார்த்தனை

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பன்னீர் செல்வம் உத்தரவு

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பன்னீர் செல்வம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2017, சென்னை : பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மாதா நகர் 10-வது தெருவில் வசித்து வரும் பாபு என்பவரின் மகள் சிறுமி ஹாசினி என்பவரின் சடலம் கடந்த 8-ம் தேதி அனகாபுத்தூர் அருகே காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான்