மறைந்த முதல்வர் அம்மா செயல்படுத்திய திட்டங்களால் கல்வித்துறையில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

மறைந்த முதல்வர் அம்மா செயல்படுத்திய திட்டங்களால் கல்வித்துறையில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

ஞாயிறு, பிப்ரவரி 05, 2017, சென்னை ; மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா செயல்படுத்திய திட்டங்களின் விளைவாக, பள்ளிக்கல்வித்துறையில், தமிழகம் முதலிடம் பெற்று விளங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று  நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். கல்வி மேம்பாட்டுக்கென மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, 3 ஆயிரத்து 155 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 திட்டங்களை நிறைவேற்றியதாகவும், இதன் விளைவாக தமிழகம் பள்ளிக் கல்வித்துறையில்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்

ஞாயிறு, பிப்ரவரி 05, 2017, சென்னை ; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்  அமைச்சர்கள் நேற்று  நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.பின்னர் அவர்கள் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டனர். மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களில் ஒன்றான மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி, மதுரை மாவட்டம் செக்கானூரணி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா

25 மீனவர்கள், 119 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

25 மீனவர்கள், 119 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சனி, பிப்ரவரி 04, 2017, இலங்கையில் உள்ள 25 தமிழக மீனவர்கள் மற்றும் 119 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 2-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். அவர்கள் தற்போது காங்கேசன்துறை சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். பாக்

செங்கோட்டையன், துரைசாமி,கோகுல இந்திரா உள்ளிட்ட 13 பேருக்கு அ.தி.மு.க அமைப்பு செயலாளர் பதவி : பொதுச் செயலர் சசிகலா அறிவிப்பு

செங்கோட்டையன், துரைசாமி,கோகுல இந்திரா உள்ளிட்ட 13 பேருக்கு அ.தி.மு.க அமைப்பு செயலாளர் பதவி : பொதுச் செயலர் சசிகலா அறிவிப்பு

சனி, பிப்ரவரி 04, 2017, அதிமுக அமைப்பு செயலர்களாக கே.ஏ.செங்கோட்டையன், சைதை துரைசாமி,கோகுல இந்திரா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகளாகவும், துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள், கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று (நேற்று) முதல் நியமிக்கப்படுகிறார்கள். 1. கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.- கழக அமைப்புச் செயலாளர். 2. எஸ்.கோகுல இந்திரா- கழக அமைப்பு செயலாளர். (முன்னாள் அமைச்சர், தென்சென்னை வடக்கு மாவட்டம்). 3.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் ; சமபந்தி விருந்துல் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் ; சமபந்தி விருந்துல் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

வெள்ளி, பிப்ரவரி 03, 2017, சென்னை ; அண்ணாவின் 48ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீசுவரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள பல்வேறு கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை – திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் முதல்வர்

அண்ணாவின் 48-வது நினைவு தினம் ; அண்ணாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி

அண்ணாவின் 48-வது நினைவு தினம் ; அண்ணாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி

வெள்ளி, பிப்ரவரி 03, 2017, சென்னை ; அண்ணாவின் 48-வது நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திலும், எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் சசிகலா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் மலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். அண்ணாவின் 48-வது நினைவுநாள் இன்று தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. ஆங்காங்கே

மறைத்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை புனித வழிபாட்டுத் தலமாக மாற்ற வேண்டும் ; அதிமுக இலக்கிய அணி தீர்மானம்

மறைத்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை புனித வழிபாட்டுத் தலமாக மாற்ற வேண்டும் ; அதிமுக இலக்கிய அணி தீர்மானம்

வியாழக்கிழமை, பிப்ரவரி 02, 2017, சென்னை ; மெரினா கடற்கரையில் அமைய உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு சின்னம் ஒரு புனித வழிபாட்டுதலமாக மாற்றப்பட வேண்டும் என்றும், பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டம் இலக்கிய அணி செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை